என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாரும் பணி
    X

    எதிர்க்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. பணியை தொடங்கி வைத்த காட்சி.

    100 நாள் வேலை திட்டத்தில் தூர்வாரும் பணி

    • வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு கிராம வாய்க்கால்கள் ரூ.31 லட்சத்தில் தூர்வாரப்படுகிறது.
    • இதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஒதியம்பட்டு கிராம வாய்க்கால்கள் ரூ.31 லட்சத்தில் தூர்வாரப்படுகிறது.

    அதுபோல் மணவௌி கிராமத்தில் தண்டுக்கரையிலிருந்து வேல்ராம்பட்டு ஏரிக்கரை வரையில் உள்ள ஆத்துவாய்க்கால் ரூ.18 லட்சம் செலவில் தூர்வாரப்படுகிறது. இந்த பணி வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மூலம் 100 நாள் வேலை உறுதித் திட்டத்தில் நடக்கிறது. இதற்கான பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது.

    எதிர்க்கட்சி தலைவர் சிவா 100 நாள் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், வில்லியனூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வைஷாக் பாகி, உதவிப் பொறியாளர் ராமன், இளநிலைப் பொறியாளர் ராமநாதன், பணி ஆய்வாளர் ரங்கராஜ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×