என் மலர்
புதுச்சேரி

அனுமதி பெறாமல் சுற்றுலா சென்ற மாகி போலீசார் புதுவைக்கு அதிரடி இடமாற்றம்
- போலீசார் பணியின் போது உயர் அதிகாரியிடம் விடுமுறை கோராமல் அருகே உள்ள கேரளா மாநில சுற்றுலா தலத்திற்கு சென்றனர்.
- புதுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை மாகே பகுதியில் உள்ள 2 போலீஸ் நிலையத்தை சேர்ந்த போலீசார் பணியின் போது உயர் அதிகாரியிடம் விடுமுறை கோராமல் அருகே உள்ள கேரளா மாநில சுற்றுலா தலத்திற்கு சென்றனர்.
இந்த விவகாரம் தொடர்பாக கடலோர போலீஸ்நிலைய ஆய்வாளர் மனோஜ் தலைமையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சர்ச்சையில் சிக்கியவர்களை தலைமையக எஸ்.பி சுபம்கோஷ் புதுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
மாகி கடலோர பாதுகாப்பு பிரிவு பெண் சப்-இன்ஸ்பெக்டர் ரீனாமேரி டேவிட், மாகே சிறப்பு நிலை உதவி சப்-இன்ஸ்பெக்டர் சரோஷ், பள்ளூர் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சதீசன், போலீசார் வியகுமார், சுனில்பிரசாந்த், சாந்திஷினோஜ், நித்திஷ், விஜயகுமார் ஆகிய 8 பேர் புதுவை ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் புதுவை கிழக்கு போக்குவரத்து போலீஸ் விமலரசன், தவளக்குப்பத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.






