என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சாதனை
    X

    மாநில அளவிலான வினாடி-வினா போட்டியில் சாதனை புரிந்த புதுவை அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் பரத்குமார், புவியரசை பள்ளியின் முதுநிலை முதல்வர் லூர்துசாமி தங்கம் நாணயம் வழங்கி பாராட்டிய காட்சி.

    அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் சாதனை

    • அமலோற்ப வம்பள்ளி மாணவர்கள் பரத்குமார், புவியரசு ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
    • தேசிய அளவிலான வினாடி- வினா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வுள்ளனர்.

    புதுச்சேரி:

    மத்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மூலம் பிட் இந்தியா வினாடி-வினா போட்டி பள்ளி மாணவர்களுக்கு உடல் திறன், விளையாட்டில் தேசிய அளவில் வளமான தளத்தை உருவாக்க நடத்தப்படுகிறது.

    இதையொட்டி, கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர். 8, 9-ந் தேதிகளில் முதல்சுற்று வினாடி-வினா போட்டி நடந்தது. இதில், 16,702 பள்ளிகளில் இருந்து 61,981 மாணவர்கள் பங்கேற்றனர்.

    இப்போட்டியில் புதுவை அமலோற்பவம் மேல்நிலை பள்ளி சார்பில் பங்கேற்ற 9-ம் வகுப்பு மாணவர்கள் பரத்குமார், புவியரசு ஆகியோர் முதல் சுற்றில் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தொடர்ந்து, கடந்த 25-ந் தேதி மாநில அளவிலான போட்டி இணைய வழியில் நடந்தது. புதுவை மாநிலத்தில் பங்கேற்ற 4 பள்ளிகளில், அமலோற்ப வம்பள்ளி மாணவர்கள் பரத்குமார், புவியரசு ஆகியோர் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

    இவர்களுக்கு ரொக்க பரிசு ரூ. 25 ஆயிரம் மற் றும் பள்ளிக்கு பரிசாக ரூ.2½ லட்சம் வென்று தந்தனர். இவர்கள் தேசிய அளவிலான வினாடி- வினா சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க வுள்ளனர்.

    பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை, முதுநிலை முதல்வர் லூர்துசாமி பாராட்டி, தலா 4 கிராம் தங்க நாணயம் பரிசளித்து, வாழ்த்தினார்.

    Next Story
    ×