search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    இறைச்சி கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை
    X

    கோப்பு படம்.

    இறைச்சி கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

    • மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்க மறுத்ததால் வேதனை
    • மீண்டும் மதுகுடிக்க மனைவி மாயாவிடம் பணம் கேட்டார். ஆனால் மாயா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கத்தில் மதுகுடிக்க மனைவி பணம் கொடுக்கமறுத்ததால் இறைச்சி கடை ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கிருமாம்பாக்கம் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜ்மோகன் (வயது.36). இவர் அப்பகுதியில் உள்ள கோழி இறைச்சி கடையில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு மாயா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர்.

    ராஜ்மோகனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்து வந்தது. தினமும் வேலை முடிந்து மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வருவதை வழக்கமாக கொண்டி ருந்தார். அதுபோல் நேற்று மாலை ராஜ்மோகன் மதுகுடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். பின்னர் மீண்டும் மதுகுடிக்க மனைவி மாயாவிடம் பணம் கேட்டார். ஆனால் மாயா பணம் கொடுக்க மறுத்துவிட்டார்.

    இதனால் ராஜ்மோகன் மனைவிடம் தகராறு செய்தார். இதையடுத்து மாயா தனது மாமியார் மற்றும் குழந்தைகளுடன் அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை மாயா குழந்தைகளுடன் வீட்டுக்கு வந்தார். கணவர் ராஜ்மோகன் மின்விசிறியில் வேட்டியால் தூக்குபோட்டு பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    மனைவி மதுகுடிக்க பணம் கொடுக்க மறுத்ததால் ராஜ்மோகன் வேதனையில் இந்த துயர முடிவை எடுத்த கொண்டதாக கூறப்ப டுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×