என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
முதல்- அமைச்சர் ரங்கசாமி புதுவை திரும்பினார்
- முதல்- அமைச்சர் ரங்கசாமி, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்றார்.
- மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 328 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுவை முதல்- அமைச்சர் ரங்கசாமி, அரசுமுறை பயணமாக 2 நாட் கள் டெல்லிக்கு சென்றார்.
முதல்நாள் அங்கு நடந்த நிதி அயோக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது புதுவை மாநிலத்தில் செயல்படுத்தப்படும் அரசு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். புதுவை மாநிலத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய அரசு சிறப்பு நிதியாக ரூ.2 ஆயிரத்து 328 கோடி வழங்க வேண்டும் என வலியுறுத்தினார்.
2-வது நாளாக டெல்லியில் முகாமிட்ட முதல்- அமைச்சர் ரங்கசாமி, புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்றார்.
இதன்பின் நேற்று இரவு 10 மணிக்கு புதுவைக்கு திரும்பினார்.
Next Story






