என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
புதுவைக்கு 100 சதவீத நிதி வழங்க வேண்டும்
- முதல்-அமைச்சர் ரங்கசாமி வலியுறுத்தல்
- புதுவை வளர்ச்சி திட்டங்க ளுக்கு வட்டி இல்லா நிதி உதவியும் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
டெல்லியில் நடப்பாண்டுக்கான 3-வது நிதி ஆயோக் கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசிய தாவது:-
புதுவை அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தகுதியான வருக்கு சென்றடைவதை உறுதிப்படுத்தும் வகையில் மக்கள் பேரரேடு எனப்படும் தரவுதளம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இதில் ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் அனைத்தும் பதிவு செய்யப்படும். இதன் மூலம் மக்கள் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடைவ தோடு முறை கேடுகளும் களையப்படும்.
போக்குவரத்து நெரிசலை குறைக்க மேம்பாலங்கள், புறவழிச் சாலைகள், வெளிவட்டச் சாலை மற்றும் டிராம், மெட்ரோ போன்ற மாற்று போக்குவரத்து முறைகளை ஆய்வு செய்வதில் எனது அரசு கவனம் செலுத்துகிறது.
கரசூர் தொழிற்பேட்டை யில் ரூ.5 ஆயிரம் கோடி தனியார் முதலீடு ஈர்க்கப்பட்டு, 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்
அதே போல் புதுவை விமான நிலையத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஆன்மீகம் மற்றும் மருத்துவ சுற்றுலாவுக்காக புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது தொழில் மேம்பாட்டுக்கும் சுற்றுலா வளர்ச்சிக்கும் உதவும் 16-வது மத்திய நிதி குழுவின் வரம்புக்குள் புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்க்க வேண்டும்.
மூலதன முதலீட்டிற்கான நிதி உதவி திட்டம் மாநிலங்க ளுக்கு மட்டுமே என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனவே புதுவையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய சிறப்பு நிதியாக ரு.2 ஆயிரத்து 328 கோடி வழங்க வேண்டும். புதுவை வளர்ச்சி திட்டங்களுக்கு வட்டி இல்லா நிதி உதவியும் வழங்க வேண்டும்.
மத்திய பங்களிப்புடன் செயல்படும் திட்டங்களில் புதுவையை முழு மாநிலமாகவோ அல்லது யூனியன் பிரதேசமாகவோ கருதப்படாத சூழல் நிலவுகிறது.
எனவே மற்ற யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படுவது போல் மத்திய பங்களிப்பு திட்டத்தில் 100 சதவீத நிதி வழங்க வேண்டும்.
வளமான யூனியன் பிரதேசத்தை உருவாக்க நிதி அயோக்கின் மதிப்புமிக்க வழிகாட்டுதலையும் ஆதரவையும் வழங்க எதிர்பார்க்கிறேன். மத்திய அரசு அறிமுகப்படுத்திய பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் புதுவையில் திறம்பட செயல்படுத்தப்படும் என உறுதி அளிக்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.






