search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tourist boat"

    • குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது.
    • கோடை விடுமுறை சீசனையொட்டி படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும் அதன் அருகில் உள்ள இன்னொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் எழுப்பப்பட்டுள்ளது. இவற்றை தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் படகில் சென்று பார்த்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் திருவள்ளுவர் சிலைக்கும், விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும் இடையே கண்ணாடி இழை கூண்டு பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதையொட்டி கடந்த 10 மாதங்களாக திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்து இயக்கப்பட்டவில்லை. இதற்கிடையில் விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு இயக்கப்பட்டு வந்த பொதிகை, குகன், விவேகானந்தா ஆகிய 3 படகுகளில் குகன் படகு பழுதடைந்த நிலையில் இருந்ததால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அதனை சின்ன முட்டம் துறைமுகத்துக்கு கொண்டு சென்று கரையேற்றி சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. பின்னர் அந்த படகு சீரமைப்பு பணி 3 நாட்களில் முடிக்கப்பட்டு கடந்த நவம்பர் மாதமே கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சுற்றுலா பயணிகளின் பயன் பாட்டுக்கு வந்தது.

    இதற்கிடையில் தற்போது கோடை விடுமுறை சீசன் தொடங்கி உள்ளதைத் தொடர்ந்து அதே குகன் படகை ரூ.30 லட்சம் செலவில் சீரமைக்க பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்கழகம் முடிவு செய்தது. இதைத்தொடர்ந்து குகன் என்ற சுற்றுலா படகு கன்னியாகுமரியில் உள்ள பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகுத்துறையில் இருந்து கடந்த பிப்ரவரி மாதம் 15-ந்தேதி கடல் வழியாக சின்னமுட்டம் துறைமுகத்தில் உள்ள படகு கட்டும் தளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த படகு கரையேற்றப்பட்டு சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த சுற்றுலா படகு சீரமைக்கும் பணி கடந்த 15-ந்தேதி முடிவடைந்தது.

    இதைத்தொடர்ந்து அந்த படகு புதுப்பொலிவுடன் அன்று மதியம் கடலில் இறக்கப்பட்டது. பின்னர் சின்னமுட்டம் துறைமுகத்தில் இருந்து கடல் வழியாக அந்த படகு அன்று மாலை கன்னியாகுமரிக்கு கொண்டு வரப்பட்டது. அந்த படகு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு துறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் அந்த படகு நேற்று கடலில் வெள்ளோட்டம் விடப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. சென்னையில் இருந்து வந்த சர்வேயர் இந்த சோதனை ஓட்டத்தை நடத்தினார். அதன்பிறகு கோடை விடுமுறை சீசனையொட்டி அந்த படகு உடனடியாக சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டுக்காக இயக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த குகன் படகு கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி சென்றது. புதுப்பொலிவுடன் காட்சி அளித்த குகன் படகில் சுற்றுலா பயணிகள் குதூகலத்துடன் பயணம் செய்து விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட்டு வந்தனர்.

    • கென்னடி எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • மீனவர்கள் ஆற்று பகுதியில் சுற்றுலா படகு இயக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதி வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள் கொரோனா காலகட்டத்துக்கு பின்னர் மீன் பிடி தொழிலில் வருமானம் குறைந்ததால் அப்பகுதி இளைஞர்கள் பாதுகாப்பு வசதியுடன் ஆற்று பகுதியில் சுற்றுலா படகுகளை இயக்கி வந்தனர்.

    தற்போது இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வம்பாகீரப்பாளையம் இளைஞர்கள் கென்னடி எம்.எல்.ஏ.விடம் முறையிட்டனர். இதை தொடர்ந்து கென்னடி எம்.எல்.ஏ. நகராட்சி உதவி பொறியாளர் பிரபாகரனை வரவழைத்து வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் ஆற்று பகுதியில் சுற்றுலா படகு இயக்க அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டார்.

    மேலும் ஓதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டரிடமும் கென்னடி எம்.எல்.ஏ. தொலைபேசியில் பேசி மீனவர்கள் சுற்றுலா படகு இயக்க ஒத்துழைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

    அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு ஏரியில் மூழ்கிய விபத்தில் 8 பேர் பரிதாபமாக பலியாகினர். #BoatAccident
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் பிரான்சன் பகுதியில் உள்ள டேபிள் லாக் ஏரி சுற்றுலா பயணிகளுக்கு உகந்தது. இந்த ஏரியில் படகில் சென்று பயணிப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்வித்து வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு 30க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் சென்று கொண்டிருந்தனர். ஏரியின் மையத்தில் சென்றபோது, படகு திடீரென கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் படகில் இருந்தவர்கள் அனைவரும் ஏரியில் மூழ்கியதால் அலறி துடித்தனர். அவர்களது அலறலை கேட்ட அங்கிருந்த மீட்பு படையினர் உடனே அவர்களை காப்பாற்ற விரைந்தனர்.

    ஏரியில் மூழ்கிய 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஏரியில் மூழ்கி உயிரிழந்த 8 பேரின் உடல்கள மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மூழ்கியுள்ள மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    அமெரிக்காவில் சுற்றுலா சென்ற படகு மூழ்கிய விபத்தில் 8 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #BoatAccident
    ×