என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பா.ஜனதாவின் தேசிய தலைமையானது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
    • கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அல்லாத கட்சிகள் ஜெயித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    புதுச்சேரி:

    பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு புதுவை பா.ஜனதா தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக தேசிய பொதுச்செயலாளர் வினோத் தாவடே, தேசிய செயலாளர் சத்திய குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    கூட்டத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய். ஜெ.சரவணன்குமார் செல்வகணபதி எம்.பி. உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    சிறப்பு அழைப்பாளர்களான வினோத் தாவடே, சத்தியகுமார் ஆகியோர் பேசும்போது அனைத்து தொகுதிகளிலும் கிளைகளை வலிமைப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

    வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் உள்துறை மந்திரி அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் புதுச்சேரிக்கு வர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    பா.ஜனதாவின் தேசிய தலைமையானது பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அல்லாத கட்சிகள் ஜெயித்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் அந்த தொகுதிகளை கைப்பற்ற குறிவைத்து காய்களை நகர்த்தி வருகிறது. புதுவையில் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சி உள்ள நிலையில் புதுவை எம்.பி. தொகுதியை கைப்பற்றியே தீரவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளது.

    ஏற்கனவே, மத்திய மந்திரி எல்.முருகனை பொறுப்பாளராக நியமித்து பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது. அவரும் அவ்வப்போது புதுச்சேரி வந்து கூட்டங்களை நடத்துவது, பொதுமக்களை சந்தித்து நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

    • சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைத்தார்.
    • நடராஜன் வேறு எந்தந்த மருந்துகள் சப்ளை செய்தார்? அவர், இந்த டெண்டர்களை எடுக்க யார் உதவியது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் தேசிய சுகாதார இயக்கம் (என்.ஆர்.எச்.எம்.,) மூலம் கடந்த 2019-ம் ஆண்டு, புதுவை கர்ப்பிணிகளுக்கான சத்து மாத்திரை மற்றும் குழந்தைகளுக்கு விட்டமின் ஏ மருந்து கொள்முதல் செய்து ஆரம்ப சுகாதார நிலையங்களில் வழங்கப்பட்டது.

    இந்த மருந்தை சாப்பிட்ட கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால், அனைத்து மருந்துகளும் திரும்ப பெற்று, ஆய்வுக்கு உட்படுத்தி சுகாதாரத்துறை விசாரணை நடத்தியது. அதில் மருந்துகள் தரமற்றது என்பது தெரியவந்தது.

    தொடர் விசாரணையில், தேசிய சுகாதார இயக்கத்தில் (என்.ஆர்.எச்.எம்.,) ஒப்பந்த அடிப்படையில் மருந்தாளுநராக பணியாற்றிய நடராஜன், அவரது மனைவி பத்மா பெயரில் பத்மஜோதி எண்டர்பிரைசஸ், நண்பர் பெயரில் சாய்ராம் ஏஜென்சி என்ற இரு கம்பெனிகளை உருவாக்கி, என்.ஆர்.எச்.எம்., மூலம் விடப்பட்ட டெண்டரில் இந்த இரு கம்பெனிகள் மட்டும் பங்கேற்க செய்துள்ளார்.

    இந்த 2 கம்பெனிகளும் குறைந்த விலைக்கு மருந்து சப்ளை செய்வதாக கூறி டெண்டர் எடுத்து, தரமற்ற மருந்துகளை சப்ளை செய்து ரூ.44 லட்சம் மோசடி செய்தது தெரிய வந்தது. அதனையொட்டி, நடராஜன் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

    இதுகுறித்து அப்போதைய சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு பரிந்துரைத்தார். அதன்பேரில் போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் மோசடி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிந்து, நடராஜனை தேடி வருகின்றனர்.

    மேலும், நடராஜன் வேறு எந்தந்த மருந்துகள் சப்ளை செய்தார்? அவர், இந்த டெண்டர்களை எடுக்க யார் உதவியது என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • வெங்கடேசன் எம்.எல்.ஏ. பங்கேற்பு
    • கேக் வெட்டி 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாள்  கொண்டாடப்பட்டது.

    இதை முன்னிட்டு வில்லியனூர் பெரிய கோவில் அருகில் தொழில–திபர்கள் ஐஸ்வர்யம் ஆயில் மில் உரிமையாளர் சதீஷ் குமார் மற்றும் வரதராஜா டிரேடிங் கம்பெனி உரிமை–யாளர் வரதராஜ பெருமாள் ஏற்பாட்டில் புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளர் வெங்கடேசன் எம்.எல்.ஏ. முன்னிலையில் 55 கிலோ கேக் வெட்டி 500-க்கும் மேற்பட்டோருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

     அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு கேக் வெட்டி 500-க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதில் பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் மோகன் குமார், தொழிலதிபர் சக்தி பாலாஜி ஆயில் மில்ஸ் பாலாஜி, பா.ஜனதா முகமது யூனுஸ், வில்லியனூர் மாவட்ட தலைவர் ஆனந்தன், தொகுதி தலைவர் ரவி மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அன்பழகன் பேட்டி
    • முதல்-அமைச்சர் தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லுரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கல்வி கட்டணம் கடந்த ஆண்டு ரூ.3 லட்சத்து 80 ஆயிரமாக இருந்தது. இந்த ஆண்டு ரூ.5 லட்சமாக உயர்த்த முடிவு செய்துள்ளது வன்மையாக கண்டிக்கத் தக்கது.

    உச்சநீதிமன்ற உத்தரவுப்படி மாநில அரசு ஒதுக்கீட்டில் வசூலிக்கப்படும் கட்டணத்தையே தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்க வேண்டும். முதல்-அமைச்சர் தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை அமல்படுத்த வேண்டும்.

    மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் தி.மு.க.வினர் மக்களை ஏமாற்றி வருகின்றனர். பிற மதத்தினர் வாக்குகளை பெற இந்துக்களை பற்றி தவறாக பேசி வருகின்றனர். இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு நேர்மாறான ஒன்று. இந்து மதத்தில் சனா தனத்தை ஒழிப்பேன் என உதயநிதி பேசியதற்கு வேறு மதத்தை சேர்ந்த தி.மு.க எம்.எல்.ஏ. கென்னடி, இந்து மதத்தை விமர்சித்துள்ளார். அவர் இந்து மதத்தை குறைத்து பேசியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

    கென்னடி எம்.எல்.ஏ பதவியை பறிக்கக் கோரி கழக தேர்தல் ஆணை–யத்திடம் மனு கொடுக்கப்படும்.

    தி.மு.கவை சேர்ந்தவர்கள் அரசியல்ரீதியாக பேசுவது நல்லது. பிற மதத்தை பற்றி புண்படுத்தும் வகையில் பேசுவது தவறான ஒன்று. எம்.எல்.ஏ.க்களுக்கு ஒரு அரசு விழா பிடிக்கவில்லை என்றால் போகக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மாநில இணை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கணேசன், மாநில கழக துணை செயலாளர் உமா, பொருளாளர் ரவி பாண்டு–ரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அவருக்கு கிரேனில் கொண்டு வரப்பட்ட பிரமாண்ட மாலையை அணிவித்து ஆதரவாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
    • பிரம்மாண்ட மாலை அணிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    புதுச்சேரி:

     உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தின் பிறந்தநாள் விழா  கொண்டாடப்பட்டது.

    அவரது ஆதரவாளர்கள் கடந்த 10 நாட்களாக பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர்.  அவருக்கு கிரேனில் கொண்டு வரப்பட்ட பிரமாண்ட மாலையை அணிவித்து ஆதர வாளர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

     60 அடி உயரம் கொண்ட இந்த மாலை 25 தொழிலாளர்களை கொண்டு 14 மணிநேரத்தில் உருவாக்கப்பட்டது. இதற்காக ஒரு டன் பூக்கள் மற்றும் நார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    புதுவை வில்லியனூரில் பூக்கடையில் ரமேஷ் என்பவர் இந்த பிரமாண்ட மாலையை உருவாக்கியுள்ளார். இதன் மதிப்பு ரூ.75 ஆயிரமாகும். அமைச்சருக்கு கிரேன் மூலம் இந்த மாலை அணிவிக்கப்பட்டது. பிரம்மாண்ட மாலை அணிவிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.

    • பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார் ஆவேசம்
    • தற்போது அந்த இடம் போலி பத்திரம் மூலம் அபகரிக்க ப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி நிலம் ரெயின்போ நகரில் உள்ளது.

    இந்த நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகாரின்பேரில் வழக்குப்பதிந்த சி.பி.சி.ஐ.டி போலீசார் சார்பதிவாளர் உட்பட 15 பேரை கைது செய்தனர்.

    இதன்பின் மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி, நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் ஆகியோரையும் கைது செய்தனர். போலி பத்திரம் தயாரித்த இடத்தை பா.ஜனதா எம்.எல்.ஏ. ஜான்குமார் குடும்பத்தினர் வாங்கியுள்ளனர். எனவே அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கம்யூனிஸ்ட்டு கட்சியினர், பல்வேறு சமூக அமைப்பினர் பலகட்ட போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் இப்பிரச்சினை குறித்து ஜான்குமார் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

    2021-ல் ரெயின்போ நகரில் 4 மனைகள் ரூ.1.39 கோடிக்கு விலைக்கு வந்தது. அனைத்து பத்திரங்களும் சரியாக இருந்ததால் என் குடும்பத்தினர் பெயரில் நிலத்தை வாங்கினேன். தற்போது அந்த இடம் போலி பத்திரம் மூலம் அபகரிக்க ப்பட்டுள்ளதாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்து ள்ளனர். இந்த இடத்தை பணம் கொடுத்து வாங்கி பாதிக்கப்பட்டுள்ளது நான்தான்.

    இதனால் வழக்கி ல் என்னை சாட்சியாக சி.பி.சி .ஐ.டி. போலீசார் சேர்த்துள்ளனர். நான் அபகரிப்பு செய்திருந்தால் என்னை குற்றவாளியாக சேர்த்திருப்பார்கள். என்னைப்பற்றி பொய்யான தகவலை பரப்பி வருகின்றனர்.

    காமாட்சி அம்மன் கோவில் நில விவகாரத்தில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை நிருபித்தால் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்ய தயார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. உண்மை விரைவில் வெளிவரும். எனக்கு அமைச்சர் பதவி வழங்க எதிர்ப்பு தெரிவித்து, பா.ஜனதாவை சேர்ந்த சிலரே என் மீது வீண் பழி சுமத்துவதாக தெரிகிறது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • அ.ம.மு.க. மாநில இணை செயலாளர் லாவண்யா சாமி தரிசனம்
    • அ.ம.மு.க. மாநில இணைச் செயலாளர் லாவண்யா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    புதுச்சேரி:

    உழவர்கரை பகுதியில் அமைந்துள்ள எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த 1-ந் தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    இதில் தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீப ஆராதனை, இரவு மின் அலங்காரத்துடன் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

    விழாவில் புதுச்சேரி மாநில அ.ம.மு.க. மாநில இணைச் செயலாளர் லாவண்யா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    அவருக்கு கோவில் சார்பில் முதல்-மரியாதை செய்யப்பட்டது.

    தொடர்ந்து விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை எல்லை மாரியம்மன் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் உழவர் கரைப்பேட் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

    • முன்னாள் எம்.பி. ராமதாஸ் கண்டனம்
    • குடும்பத்துக்கும் வேலை உறுதி அட்டை வழங்கி ஆண்டுக்கு 100 நாள் வேலை தர வேண்டும் என்பது விதி.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     கிராமப்புற மக்கள் அரசின் இலவசத்தை நம்பி வாழாமல் உழைப்பின் மூலம் கவுரவமாக வாழ தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் 2006-ல் கொண்டுவரப்பட்டது.

    புதுவை, காரைக்காலில் 108 கிராம பஞ்சாயத்தில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

    கடந்த 5 ஆண்டு புள்ளிவிபரப்படி புதுவையில் இத்திட்டம் தோல்வியடைந்துள்ளது. திட்டத்தின் எந்த நோக்கமும் நிறைவேறவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வேலை உறுதி அட்டை வழங்கி ஆண்டுக்கு 100 நாள் வேலை தர வேண்டும் என்பது விதி.

    கடந்த 5 ஆண்டில் சராசரியாக ஆண்டுக்கு 20 நாட்களுக்கு மட்டுமே வேலை வழங்கியுள்ளனர். இது 100 நாள் வேலை திட்டம் அல்ல, 20 நாள் வேலை திட்டம். மத்திய அரசின் உன்னத கோட்பாடை புதுவை அரசு குழிதோண்டி புதைத்துவிட்டது. ஒவ்வொரு ஆண்டும் நிர்ண யிக்கப்பட்ட கூலியையும் தரவில்லை. 5 ஆண்டுகளில் மத்திய அரசிடம் இருந்து ரூ.ஆயிரத்து 548 கோடியை பெற்றிருக்க வேண்டும்.

    புதுவை அரசு செய்த தவறுகளால் மத்திய அரசு ரூ.112.49 கோடி மட்டும்தான் அளித்துள்ளது. இத்திட்டம் சரியான பாதையில் செயல்படுத்த உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். 108 பஞ்சாயத்திலும் திறமையான அலுவலரை நியமித்து பணிகளை பட்டியலிட்டு வேலை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 42 பேருக்கு ரூ‌ 25 ஆயிரம் விதம் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் சட்டமன்ற அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாட்டு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    இதில் வறுமை கட்டுக்கு கீழே உள்ள மணப்பெண்ணின் குடும்பத்திற்கு 42 பேருக்கு ரூ 25 ஆயிரம் விதம் ரூ. 10 லட்சத்து 50 ஆயிரம் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

    மேலும் விதவைப் பெண்களுக்கான உதவித்தொகை 20 பேருக்கு ரூ. 2 ஆயிரத்திற்கான சான்று வழங்கினார். நிகழ்ச்சியில் ஏம்பலம் தொகுதி என்.ஆர். காங்கிரஸ் பிரமுகர்கள் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • கோலியனூரில் உள்ள வாட்டர் சர்வீஸ் நிலையத்துக்கு லாரியை கொண்டு வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை திலாஸ்பேட்டை வழுதாவூர் சாலையை சேர்ந்தவர் தினகரன்.வயது 41) டேன்கர் லாரி டிரைவர் இவருக்கு கலைவாணி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

    தினகரன் அடிக்கடி லாரியில் லோடு ஏற்றிச்செல்வது வழக்கம். அதுபோல் சம்பவத்தன்று கேரளாவில் இருந்து லாரியில் முந்திரி ஆயிலை ஏற்றிக்கொண்டு புதுவை துத்திப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலைக்கு கொண்டு வந்தார். அங்கு முந்திரி ஆயிலை இறக்கி விட்டு பின்னர் கோலியனூரில் உள்ள வாட்டர் சர்வீஸ் நிலையத்துக்கு லாரியை கொண்டு வந்து சுத்தம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது லாரி டேங்கரில் மீதமிருந்து முந்திரி ஆயில் தினகரன் காலில் கொட்டியது. இதனால் தினகரன் காலில் கொட்டிய முந்திரி ஆயிலை சுத்தம் செய்தார். அப்போது அவருக்கு மூச்சுத்தினறல் ஏற்பட்டது. இதனை பொருட்படுத்தாமல் தினகரன் வீட்டுக்கு வந்து தூங்கி விட்டார். மறுநாள் காலையில் பார்த்த போது தினகரன் காலில் பெரிய அளவில் கொப்பளங்கள் இருந்தது. மேலும் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு எரிச்சலும் இருந்தது.

    உடனே தினகரனை அவரது மனைவி மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றார்.

    அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த தினகரன் சிகிச்சை பலனின்றி  பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து அவரது மனைவி கலைவாணி கொடுத்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மணிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார்.
    • வழக்குபதிவு செய்து மணிமாறனை கொலை செய்து கும்பலை தேடி வருகிறார்கள்.

    மதகடிப்பட்டு:

    புதுவை முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்தவர் மணிமாறன் என்ற டூம் மணி (வயது35). பிரபல ரவுடியான இவர் மீது முத்தியால்பேட்டையை சேர்ந்த அன்பு ரஜினி கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த மணிமாறன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்தார். இதற்கிடையே அன்பு ரஜினி கொலைக்கு பழிக்கு பழியாக மணி மாறனை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டது.

    இதனையறிந்த மணிமாறன் அந்த கும்பலுக்கு பயந்து கடந்த சில மாதங்களாக மடுகரை பகுதியில் உள்ள தனது நண்பரின் அண்ணன் ராம்ஜி என்பவர் வீட்டில் தங்கியிருந்து வந்தார். மேலும் அங்கிருந்த படியே கரும்பு வெட்டும் வேலைக்கும் சென்று வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை மணிமாறன் இயற்கை உபாதை கழிக்க அங்குள்ள தோப்பு பகுதிக்கு சென்று பின்னர் திரும்பி நடந்து வந்து கொண்டிருந்தார்.

    மடுகரை தீயணைப்பு நிலையம் அருகே வந்தபோது திடீரென காரில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் காரை நிறுத்தி திபுதிபுவென கத்தி, வீச்சரிவாள் உள்பட பயங்கர ஆயுதங்களுடன் இறங்கினர்.

    இதனை கண்ட மணிமாறன் தன்னை கொலை செய்ய கும்பல் வந்திருப்பதை அறிந்து அந்த கும்பலிடமிருந்து தப்பிக்க அங்கிருந்து ஓடினார். ஆனால் அந்த கும்பல் மணிமாறனை பின் தொடர்ந்து விரட்டி சென்றது.

    உயிர் பிழைக்க மணிமாறன் அங்குள்ள ஒரு வீட்டின் உள்ளே செல்ல முயன்றபோது கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட அந்த கும்பல் மணிமாறனை சரமாரியாக அரிவாளால் தலையில் வெட்டியது.

    இதில் மூளை சிதறி ரத்த வெள்ளத்தில் மணிமாறன் துடிதுடித்து இறந்தார். இதன் பின்னர் அந்த கும்பல் காரில் தப்பி சென்றுவிட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் மடுகரை மற்றும் நெட்டப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மணிமாறன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து மணிமாறனை கொலை செய்து கும்பலை தேடி வருகிறார்கள்.

    கொலை செய்யப்பட்ட மணிமாறனுக்கு இன்று பிறந்த நாளாகும். அவர் தனது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட முடிவு செய்திருந்தார். அங்குள்ள நண்பர்களிடம் இதனை அவர் தெரிவித்திருந்த நிலையில் இன்று காலை மணிமாறனை காரில் வந்த கும்பல் வெட்டி சாய்த்து விட்டு சென்றது. பிறந்த நாளிலே அவரை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • கடந்த 30 ஆண்டாக பதவி உயர்வு இன்றி பணிபுரிந்துவருகின்றனர்.
    • பதவி உயர்வு வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கிராமப்புற விவசாயிகளுக்கு ஆலோசனைகள் வழங்க கிராம நிர்வாக அலுவலர்களாக பட்டதாரிகள் நியமிக்கப்பட்டனர்.

    கடந்த 30 ஆண்டாக பதவி உயர்வு இன்றி பணிபுரிந்துவருகின்றனர். பதவி உயர்வு கோரி அவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வேளாண் பட்டதாரி அலுவலர் சங்கத்தினர் வேளாண் இயக்குநரகம் முன்பு கூட்டம் நடத்தினர். சங்கத்தலைவர் சங்கர்தாஸ் தலைமையில் கூட்டம் நடத்தப்பட்டது.

    அவர்களிடம் வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து அவர்களை முதல்- அமைச்சர் ரங்கசாமியிடம் அழைத்துச்சென்று கோரிக்கை மனு அளித்தார். அப்போது, வேளாண்துறை பட்டதாரி அலுவலர்களுக்கு துணை இயக்குநர் பதவி உயர்வு வழங்குதல் உட்பட கோரிக்கைகளை முதல்-அமைச்சரிடம் தெரிவித்தனர்.

    வேளாண்துறை செயலரை அழைத்துப் பேசிய முதல்-அமைச்சர் ரங்கசாமி, பட்டதாரி அலுவலர்கள் பதவி உயர்வுக்கான நடவடிக்கையை சட்டரீதியாக மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

    ×