என் மலர்
புதுச்சேரி
- மாணவ- மாணவிகள் கிருஷ்ணரைப் போலவும் இராதையைப் போலவும் ஒப்பனை செய்து கொண்டு நடனமாடினார்கள்.
- துணை முதல்வர், நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம். வி பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் எஸ். எம். வி. பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் வரவேற்றார்.
விழாவில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கிருஷ்ணரைப் போலவும் இராதையைப் போலவும் ஒப்பனை செய்து கொண்டு நடனமாடினார்கள்.
விழாவின் முக்கிய நிகழ்வாக உறியடித்தல் விளை யாட்டு நிகழ்த்தப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் துணை முதல்வர், நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
- இவ்வாண்டும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
- தாளாளர் எழிலரசி, தலைமை ஆசிரியை உமா ஆகியோர் சால்வை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பாராட்டினர்.
புதுச்சேரி:
புதுவை, தவளக்குப்பம்,நேஷனல் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மாணவர்கள், புதுவையில் நடைப்பெற்ற பள்ளிகளுக்கு இடையேயான பல்வேறு போட்டிகளில் பங்குப்பெற்று ஒட்டுமொத்த சுழற்கோப்பை வென்று சாதனைப் படைத்துள்ளனர்.
இந்த சாதனை குறித்து தவளகுப்பம் நேஷனல் பள்ளியின் சேர்மன் டாக்டர்.கிரண்குமார் கூறியதாவது:-
"ஒவ்வொரு ஆண்டும் எங்களது பள்ளி, அரசு சார்பில் நடத்தப்படும் போட்டிகளிலும் தனியார் பள்ளிகள் சார்பில் நடைபெறும் போட்டி களிலும் மாணவர்களை பங்கேற்க செய்து அவர்களின் படைப்பாற்றல் திறனையும் அறிவாற்றலையும் பன்முகத் திறமையும் வெளிக்கொணரும் வகையில் அவர்களை உருவாக்கி வருகிறோம்.
அந்த வரிசையில் இவ்வாண்டும் மாணவர்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமை யை வெளிப்படுத்தினர். தற்போது எங்களது பள்ளி மாணவர்கள் பள்ளி களுக்கு இடையே யான போட்டி களில் பங்கு பெற்று 12 முதல் பரிசுகளையும் 7 2-ம் பரிசுகளையும் மற்றும் 3-ம் பரிசினையும் பெற்று சாதனைப் படைத்துள்ள துடன் ஒட்டு மொத்த சுழற்கோப்பையும் வென்று சாதனை படைத்துள்ளனர்.
இந்த வெற்றிக்கு அயராது உழைத்த ஆசிரிய- ஆசிரியைகளையும் மாணவச் செல்வங்களையும் ஒத்துழைப்பு நல்கிய பெற்றோர்களையும் பள்ளி நிர்வாகத்தின் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளையும் வெற்றிக்கு உழைத்த ஆசிரி யர்களையும் பள்ளியின் சேர்மன் டாக்டர்.கிரண்குமார், தாளாளர் எழிலரசி, தலைமை ஆசிரியை உமா ஆகியோர் சால்வை அணிவித்தும் இனிப்புகளை வழங்கியும் பாராட்டினர்.
- கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
- கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பாகூர் அருகே மணப்பட்டு கிராமத்தில் உள்ள கிருஷ்ணசாமி மகளிர் கல்வியியல் கல்லூரியில் பி.எட். மற்றும் பி.எஸ்.சி., பி.எட். பட்டப்படிப்புக்கான பட்டப்படிப்புக்கு முதலாம் ஆண்டு வகுப்பு தொடக்க விழா நடந்தது.
விழாவுக்கு கிருஷ்ண கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் ராஜேந்திரன் தலைமை தாங்கி விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
கிருஷ்ணசாமி கல்வி நிறுவனங்களின் செயலாளர் வக்கீல் விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினார். சிறப்பு விருந்தினராக கிருஷ்ணசாமி என்ஜினீயரிங் மற்றும் தொழில் நுட்ப கல்லூரியின் முதல்வர் டாக்டர் இளங்கோ கலந்து கொண்டு மாணவிகள் வாழ்வின் உன்னத லட்சியங்களை அடைவதற்கான அனைத்து பண்புகளையும் வளர்த்து க்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார். கல்லூரி இயக்குனர் டாக்டர் முத்து மாணிக்கம் பி.எட். மற்றும் பி.எஸ்.சி., பி.எட். பட்டப்படிப்புகளின் இன்றைய தேவை மற்றும் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் முதல்வர் ஜி.மஞ்சுளா அறிமுக உரையும் துணை முதல்வர் எம்.மஞ்சுளா வரவேற்புரையும் ஆற்றினர். முடிவில் உதவி பேராசிரியர் சீனிதீனதயாளன் நன்றி கூறினார். விழாவில் கல்லூரி பேராசிரியர்கள் மாணவிகள் மற்றும் முதலாம் ஆண்டு மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- மத்திய மந்திரியிடம் அசோக்பாபு எம்.எல்.ஏ., மனு
- வக்கீல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஐகோர்ட் கிளையை அமைப்பதன் மூலமாக வக்கீல்களுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு டெல்லியில் மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜூன் ராம் மேக் வாலை, சந்தித்து பேசினார்.
அப்போது, சென்னை ஐகோர்ட் கிளையை புதுச்சேரியில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மனு அளித்தார். ஐகோர்ட்டில் வழக்கு தொடர வேண்டும் என்றால் சென்னை செல்ல வேண்டியுள்ளது. இதனால், வழக்காளிகளுக்கு செலவுகள் அதிகமாவதுடன், நேர விரயமும் ஏற்படுவதை மத்திய மந்தியிடம் விளக்கினார். மேலும் புதுச்சேரியில் வக்கீல்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஐகோர்ட் கிளையை அமைப்பதன் மூலமாக வக்கீல்களுக்கும் உதவியாக இருக்கும் என்றார்.
அதோடு பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் புதுச்சேரியில் மாவட்ட நீதிமன்றத்துடன், ஐகோர்ட் செயல்பட்டதையும், இதனால், அப்போது புதுச்சேரி மக்கள் பயனடைந்ததையும் சுட்டிக் காட்டினார்.
இதனை ஏற்று கொண்ட மத்திய சட்டத்துறை மந்திரி ஐகோர்ட் கிளையை புதுச்சேரியில் அமைப்பது குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளித்தார்.
- வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும்.
- நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும்.
புதுச்சேரி:
ராகுல்காந்தி எம்.பி. பாதயாத்திரை மேற்கொண்டு ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் புதுவை காங்கிரஸ் கட்சி சார்பில் பாதயாத்திரை நிகழ்ச்சி நடந்தது.
புதுவை பிள்ளைத்தோட்டம் பெரியார் சிலை அருகே தொடங்கிய இந்த ஊர்வலத்துக்கு காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. தலைமை தாங்கினார்.
இந்த ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக வந்து ஆம்பூர் சாலை அருகே நிறைவடைந்தது.
ஊர்வலத்தின் முடிவில் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தலில் அதிகப்படியான இடத்தை பிடித்து காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி வரும். அப்போது ராகுல்காந்தி பிரதமராவார்.
இந்தியா கூட்டணியை பார்த்து பிரதமர் மோடிக்கு பயம் வந்து விட்டது. சோனியாகாந்தி 17 கேள்விகள் கேட்டு பிரதமருக்கு கடிதம் அனுப்பினால், அதற்கு பாராளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலத் ஜோஷி பதில் சொல்லுகிறார்.
புதுவையில் கவர்னரும், முதலமைச்சரும் சேர்ந்து கியாஸ் சிலிண்டர் மானிய திட்டத்தை தொடங்கி வைத்தார்கள். ஆனால் மானியம் இன்னும் வரவில்லை. ஏனெனில் அந்த திட்டத்துக்கு ரூ.120 கோடி தேவை. ஆனால் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. நாம் கருத்து வேறுபாடுகளை மறந்து வருகிற தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடவேண்டும். அனைவரும் ஒற்றுமையாக இருக்கவேண்டும்.
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
- தங்களுக்கும், பிராணிகளுக்கும் தேவையான உணவு பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
- கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண், கடந்த ஆண்டு இதேபோல் மகனுடன் பூட்டிய வீட்டுக்குள் இருந்ததும், அவர்களை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதன் பின் தொற்று பரவல் படிப்படியாக குறைந்தவுடன் ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டது.
தற்போது மக்கள் இயல்பான வாழ்க்கைக்கு திரும்பி விட்டனர். இந்தநிலையில் புதுச்சேரி ரெயின்போ நகரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் தனது 11 வயது மகன் மற்றும் 9 நாய்கள், ஆடு, கோழி, முயல்களுடன் கொரோனா தொற்று பயத்துடன் வீட்டின் உள்பக்கம் தாழ்பாள் போட்டுக்கொண்டு கடந்த 6 மாதம் வீட்டிலேயே இருந்துள்ளார்.
மேலும் அவர்கள் தங்களுக்கும், பிராணிகளுக்கும் தேவையான உணவு பொருட்களை ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து, சமைத்து சாப்பிட்டு வந்துள்ளனர்.
இதுபற்றி அக்கம் பக்கத்தினர் புதுவை குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவுக்கு புகார் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த வீட்டிற்கு குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினர் சென்றனர். அவர்கள் வீட்டின் கதவை திறந்து அந்த பெண்ணையும், அவரது மகனையும் மீட்டனர். பின்னர் மருத்துவ ஆலோசனை வழங்க தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இந்த பெண், கடந்த ஆண்டு இதேபோல் மகனுடன் பூட்டிய வீட்டுக்குள் இருந்ததும், அவர்களை குழந்தைகள் நலக்குழுவினர் மீட்டதும் குறிப்பிடத்தக்கது.
- தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த இளம்பெண் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
- போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்ணிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
வடமாநிலத்தை சேர்ந்த லாவண்யா (வயது 26) என்ற பெண், புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி. படித்து வருகிறார். இவர் ஒரு வாலிபரை காதலித்து வந்தார். காதலர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு சில மாதங்களாக பேசாமல் இருந்து வந்தனர்.
இந்த நிலையில் லாவண்யாவின் இன்ஸ்டாகிராம் செயலியில் ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் உங்கள் குடும்பத்தில் பிரச்சனையா? காதல் பிரச்சனையா? தொழிலில் பிரச்சனையா? எதுவாக இருந்தாலும் நாங்கள் மாந்திரீக முறையில் தீர்த்து வைக்கிறோம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அப்போது அவர் தனது காதலுடன் பிரச்சனை இருப்பதாக கூறினார்.
எதிர்முனையில் பேசியவர், நான் சொல்கிற சில விஷயங்களை செய்து, மாந்திரீக பூஜைக்கும் ஒத்துழைப்பு கொடுத்தால் உங்கள் காதலரை சேர்த்து வைக்கிறோம் என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணிடம் அவர் மாந்திரீக பொருட்கள் வாங்க வேண்டும், பல பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதை உண்மை என்று நம்பிய லாவண்யா பல்வேறு தவணைகளாக ரூ.5 லட்சத்து 84 ஆயிரத்து 340 அவரது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
இருப்பினும் தனது காதலனிடம் இருந்து எந்த தகவலும் வராததால் தான் மோசடி செய்யப்பட்டதை உணர்ந்த அவர் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து லாவண்யாவிடம் மோசடி செய்தது யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்திரா காந்தி அரசு மேல்நிலை பள்ளி நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணாவிடம் ஆலோசனை செய்தனர்.
- 15 அடி உயரத்தில் பிரம்மாண்ட மாக உருவான விநாய கருக்கு வரும் 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்திவிழா நாடு முழுவதும் 18-ந்தேதி கொண்டாடப்பட இருக்கிறது.
இதனை ஒட்டி வீடுகளிலும் வீதிகளிலும் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் வழிபடுவது வழக்கம். புதுவையில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து மக்கள் ஆண்டுதோறும் வழிபட்டு வருகின்றனர்.
இந்த ஆண்டும் புதுவையில் நகரம் மற்றும் கிராமங்களிலும் முக்கிய சந்திப்புகளை விதவிதமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்த ஏற்பாடு நடைபெற்று வருகின்றன.
புதுவை திலாசுப்பேட்டை சேர்ந்த இளைஞர்கள் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் விநாயகர் சிலையை செய்து வைக்க திட்டமிட்டனர். இதற்காக இந்திரா காந்தி அரசு மேல்நிலை பள்ளி நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணாவிடம் ஆலோசனை செய்தனர்.
அவர் ரசாயன கலப்பில்லாமல் காகிதங்களைக் கொண்டு விநாயகர் சிலை உருவாக்க ஆலோசனை வழங்கினார்.
இதனை தொடர்ந்து இளைஞர்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து அப்பகுதி மக்களிடம் 450 கிலோ காகித தாள்களை சேகரித்தனர். 200 கிலோ பசை கொண்டு 4 மாதங்களாக விநாயகர் சிலையை மாண–வர்களும், இளைஞர்களும் உருவாக்கி னர். மூங்கில் குச்சிகளை வைத்து காகிதங்களை அதனுடன் சுற்றி விநாயகர் கிதார் வாசிப்பது போல் சிலையை உருவாக்கியு ள்ளனர். விநாயகர் சிலைகள் ரசாயன கலப்புடன் கடலில் கரைக்கப்படும் போது கடல் வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன. அதற்கு மாற்றாக சுற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் இந்த காகித விநா–யகரை உருவாக்கியுள்ளதாக நுண்கலை ஆசிரியர் கிருஷ்ணன் தெரிவித்தார்.
15 அடி உயரத்தில் பிரம்மாண்ட மாக உருவான விநாய கருக்கு வரும் 18-ந் தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
- அவரின் நினைவிடத்தில் இராதே அறக்கட்டளை சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
- இராதே அறக்கட்டளை தலைவர் தேவதாசு தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
நாடகத் தந்தை என போற்றப்படும் சங்கரதாசு சுவாமிகள் 156-வது பிறந்த நாள் கொண்டாட ப்பட்டது.
கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் இராதே அறக்கட்டளை சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இராதே அறக்கட்டளை தலைவர் தேவதாசு தலைமை தாங்கினார்.
மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன், வெற்றித்தமிழர் பேரவை தலைவர் கோவிந்தராசு, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், செயலாளர் ராஜா, புதுவை தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவை தமிழ்நெஞ்சன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், சான்றோர் பேரவைத் தலைவர் நெய்தல் நாடன், குமரவேல், ஆசிரியர் மணி, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் ஞானமூர்த்தி,
புதுவை நடிகர்கள் மற்றும் பன்முக கலைஞர்கள் சங்கப் பொருளாளர் ராஜ்குமார், கலை இலக்கியப் பேரவை பொறுப்பாளர் எலிசபத் ராணி, அய்யப்பன், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
- தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் விகிதாச்சார அடிப்படையில் புதுவைக்குரிய காவிரி தண்ணீரை தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- நீரை முழுமையாக பெற வேண்டும் என்றால் தற்பொழுது அளவிடும் இடம் தமிழகப் பகுதியான மாந்தை என்ற பகுதியில் உள்ளது.
புதுச்சேரி:
85-வது காவிரி நதி நீர் கூட்டம் கடந்த 28-ந் தேதி நடந்தது. கூட்டத்தில், புதுவைக்குரிய 7 டி.எம்.சி. நீர் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் அதை அளவிடும் இடத்தை மாற்ற வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
புதுவைக்கு உட்பட்ட காரைக்கால் பிராந்தி யத்திற்கு வர வேண்டிய 0.250 டி.எம்.சி. தண்ணீரில், கடந்த ஜீன், ஜூலை மாதத்தில் 0.1810 தண்ணீர் மட்டும் பெறப்பட்டது.
இதனால், காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரிலிருந்து 0.0690 டி.எம்.சி. தண்ணீர் வரத்து குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள், மற்றும் புதுவையை சார்ந்த காரைக்கால் பிரா ந்தியத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரை கொடுக்க வேண்டும்.
எனவே தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் விகிதாச்சார அடிப் படையில் புதுவைக்குரிய காவிரி தண்ணீரை தர வேண்டும் என வலியுறு த்தப்பட்டது.
மேலும் புதுவைக்குரிய 7 டி.எம்.சி. நீரை முழுமையாக பெற வேண்டும் என்றால் தற்பொழுது அளவிடும் இடம் தமிழகப் பகுதியான மாந்தை என்ற பகுதியில் உள்ளது.
அதனை காரைக்காலின் மேல போலகம்- கண்ணாபூர் என்ற பகுதியில் அளவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையேற்று காவிரி நதிநீர் குழுவினர் காரைக்காலுக்கு இன்று வந்து ஆய்வு செய்தனர். புதுவையின் தலைமை பொறியாளர் பழனியப்பன், தமிழக பொது பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்து விளக்கம் அளித்தனர்.
- 100 பேர் கைது
- அண்ணாசிலை அருகிலிருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
புதுச்சேரி:
புதுவையில் ரேஷன்கடைகளை திறந்து மளிகை பொருட்களை குறைந்தவிலையில் வழங்கவேண்டும்.
மத்திய பா.ஜனதா அரசின் தவறான கொள்கையால் உயர்ந்துள்ள விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி புதுவை அண்ணாசிலை அருகிலிருந்து மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டனர்.
ஊர்வலத்துக்கு நகர கமிட்டி செயலாளர் மதிவாணன், உழவர்கரை நகர செயலாளர் ராம்ஜி தலைமை தாங்கினர். மாநில செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர்கள் சுதா சுந்தரராமன், முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், கொளஞ்சியப்பன், சத்தியா, மாநிலக்குழு உறுப்பினர் சஞ்சய் உட்பட பலர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
ஊர்வலம் பில்லுக்கடை சந்திப்பில் ரெயில்வே பாதையை நோக்கி சென்றது. அங்கு போலீசார் அவர்களை மறித்தனர். இதனால் மார்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினருக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஊர்வலத்தில் பங்கேற்ற சிலர் சிகப்பு கொடியுடன் தண்டவாளத்தை நோக்கி ஓடினர்.
மற்றவர்களை போலீசார் தடுத்து கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனிடையே ஊர்வலத்திலிருந்து போலீசாரை மீறி ஓடி யவர்கள் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் செய்தனர்.
அப்போது சென்னையிலிருந்து புதுவைக்கு வரும் ரெயில் வந்தது. போலீசார் அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால் ரெயிலின் வேகம் குறைக்கப்பட்டது. தண்டவாளத்தில் அமர்ந்திருந்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதன்பின் ரெயில் சென்றது. ஒட்டுமொத்தமாக 15 பெண்கள் உட்பட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
- வணிக நிறுவனங்கள், விடுதிகள் கழிவு நீரையும், கழிப்பிட நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.
- இந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக பாண்டி-கடலூர் ரோடு இருந்து வருகிறது. கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள் கழிவு நீரையும், கழிப்பிட நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.
இந்த நீர் வாய்க்காலை அடைத்து வைத்து பணி செய்து வருவதால், கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி வழிந்து சாலையில் ஓடுகிறது. மேலும் காலிமனைகளிலும் விட்டு உள்ளனர்.
இதனால் பிள்ளையார்குப்பம் வழியாக செல்லும் பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், வாகன ஓட்டிகள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.






