search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அளவிடும் இடத்தை மாற்ற காவிரிநீர் குழுவினர் காரைக்காலில் ஆய்வு
    X

    அளவிடும் இடத்தை மாற்ற காவிரிநீர் குழுவினர் காரைக்காலில் ஆய்வு செய்த காட்சி.

    அளவிடும் இடத்தை மாற்ற காவிரிநீர் குழுவினர் காரைக்காலில் ஆய்வு

    • தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் விகிதாச்சார அடிப்படையில் புதுவைக்குரிய காவிரி தண்ணீரை தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
    • நீரை முழுமையாக பெற வேண்டும் என்றால் தற்பொழுது அளவிடும் இடம் தமிழகப் பகுதியான மாந்தை என்ற பகுதியில் உள்ளது.

    புதுச்சேரி:

    85-வது காவிரி நதி நீர் கூட்டம் கடந்த 28-ந் தேதி நடந்தது. கூட்டத்தில், புதுவைக்குரிய 7 டி.எம்.சி. நீர் முழுமையாக கிடைக்க வேண்டும் என்றால் அதை அளவிடும் இடத்தை மாற்ற வேண்டும் என அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    புதுவைக்கு உட்பட்ட காரைக்கால் பிராந்தி யத்திற்கு வர வேண்டிய 0.250 டி.எம்.சி. தண்ணீரில், கடந்த ஜீன், ஜூலை மாதத்தில் 0.1810 தண்ணீர் மட்டும் பெறப்பட்டது.

    இதனால், காரைக்காலுக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரிலிருந்து 0.0690 டி.எம்.சி. தண்ணீர் வரத்து குறைவு ஏற்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள், மற்றும் புதுவையை சார்ந்த காரைக்கால் பிரா ந்தியத்திற்கு கிடைக்க வேண்டிய உரிய தண்ணீரை கொடுக்க வேண்டும்.

    எனவே தண்ணீர் பற்றாக்குறை காலத்தில் விகிதாச்சார அடிப் படையில் புதுவைக்குரிய காவிரி தண்ணீரை தர வேண்டும் என வலியுறு த்தப்பட்டது.

    மேலும் புதுவைக்குரிய 7 டி.எம்.சி. நீரை முழுமையாக பெற வேண்டும் என்றால் தற்பொழுது அளவிடும் இடம் தமிழகப் பகுதியான மாந்தை என்ற பகுதியில் உள்ளது.

    அதனை காரைக்காலின் மேல போலகம்- கண்ணாபூர் என்ற பகுதியில் அளவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதையேற்று காவிரி நதிநீர் குழுவினர் காரைக்காலுக்கு இன்று வந்து ஆய்வு செய்தனர். புதுவையின் தலைமை பொறியாளர் பழனியப்பன், தமிழக பொது பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன் ஆகியோர் உடனிருந்து விளக்கம் அளித்தனர்.

    Next Story
    ×