என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "birthday memorial"

    • அவரின் நினைவிடத்தில் இராதே அறக்கட்டளை சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
    • இராதே அறக்கட்டளை தலைவர் தேவதாசு தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    நாடகத் தந்தை என போற்றப்படும் சங்கரதாசு சுவாமிகள் 156-வது பிறந்த நாள்  கொண்டாட ப்பட்டது.

    கருவடிக்குப்பம் சுடுகாட்டில் அமைந்துள்ள அவரின் நினைவிடத்தில் இராதே அறக்கட்டளை சார்பில் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இராதே அறக்கட்டளை தலைவர் தேவதாசு தலைமை தாங்கினார்.

    மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், திராவிடர் விடுதலை கழக தலைவர் லோகு.அய்யப்பன், வெற்றித்தமிழர் பேரவை தலைவர் கோவிந்தராசு, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், செயலாளர் ராஜா, புதுவை தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் புதுவை தமிழ்நெஞ்சன், விடுதலை வாசகர் வட்ட தலைவர் தமிழ்ச்செல்வன், சான்றோர் பேரவைத் தலைவர் நெய்தல் நாடன், குமரவேல், ஆசிரியர் மணி, காந்திய மக்கள் இயக்கத் தலைவர் ஞானமூர்த்தி,

    புதுவை நடிகர்கள் மற்றும் பன்முக கலைஞர்கள் சங்கப் பொருளாளர் ராஜ்குமார், கலை இலக்கியப் பேரவை பொறுப்பாளர் எலிசபத் ராணி, அய்யப்பன், சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.

    ×