என் மலர்
புதுச்சேரி

சாலையில் தேங்கிய கழிவு நீரால்
சாலையில் தேங்கிய கழிவு நீரால் பொதுமக்கள் அவதி
- வணிக நிறுவனங்கள், விடுதிகள் கழிவு நீரையும், கழிப்பிட நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.
- இந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரியின் முக்கிய தேசிய நெடுஞ்சாலையாக பாண்டி-கடலூர் ரோடு இருந்து வருகிறது. கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்கும் பணி பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வணிக நிறுவனங்கள், விடுதிகள் கழிவு நீரையும், கழிப்பிட நீரையும் வெளியேற்றி வருகின்றனர்.
இந்த நீர் வாய்க்காலை அடைத்து வைத்து பணி செய்து வருவதால், கழிவுநீர் வாய்க்காலில் தேங்கி வழிந்து சாலையில் ஓடுகிறது. மேலும் காலிமனைகளிலும் விட்டு உள்ளனர்.
இதனால் பிள்ளையார்குப்பம் வழியாக செல்லும் பொதுமக்கள், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், வாகன ஓட்டிகள் என பலரும் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்த வாய்க்காலில் தண்ணீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.






