என் மலர்
புதுச்சேரி
- காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சூறை காற்றுடன் கூடிய கன மழை பெய்தது
- பூ வைத்து பிஞ்சு காய்த்த நிலையில் மழையால் சாய்ந்து விட்டது. சிறு காற்றுக்கூட தாங்கவில்லை.
புதுச்சேரி:
புதுவை காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ஹை. இவர் தனது 4 ஏக்கர் விவசாய நிலத்தில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பப்பாளி காய்கறி வகைகள், மற்றும் பூச்செடிகளை பயிரிட்டு வருகிறார். இவரது விவசாய நிலத்தில் 1 1/2 ஏக்கர் பரப்பளவில் முருங்கை பயிரிட்டு இருந்தார். தற்போது நன்கு வளர்ந்து மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கி இருந்தது.
இந்த நிலையில் காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சூறை காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.இதில் அப்துல் ஹை பயிரிட்டு இருந்த முருங்கை மரங்களில் 150-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தது.
இதுகுறித்து விவசாயி அப்துல்ஹை கூறியதாவது:
சொட்டுநீர் பாசனத்தில் காய்கறிகள் பயிரிட்டு வந்தேன். தற்போது 50 ஆயிரம் செலவிட்டு 1 1/2 ஏக்கரில் முருங்கை பயிரிட்டேன். பூ வைத்து பிஞ்சு காய்த்த நிலையில் மழையால் சாய்ந்து விட்டது. சிறு காற்றுக்கூட தாங்கவில்லை. ரூ.50 ஆயிரம் செலவிட்டிருந்தேன்.
தற்போது இதை அகற்ற ரூ.50 ஆயிரம் தேவைப்படும். மாற்றுப்பயிராகதான் பயிரிட்டு பார்த்தேன். அரசு உதவினால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நேரடியாக இங்கு வந்து ஆய்வு செய்வார்கள் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.
- சிறுவர், சிறுமிகளுக்கு கிருஷ்ணர், கோபியர்கள் வேடங்கள் அணிவித்து விழாவில் பூஜைகள் செய்யப்பட்டது.
- மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் மற்றும் டாக்டர் கருணாகரன் -ஜெயலட்சுமி குடும்பத்தினர், பாத சிகிச்சை மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
முதலியார்பேட்டை விடுதலை நகரில் பாத சிகிச்சை மையத்தில் கோகுலாஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது.
சிறுவர், சிறுமிகளுக்கு கிருஷ்ணர், கோபியர்கள் வேடங்கள் அணிவித்து விழாவில் பூஜைகள் செய்யப்பட்டது.
பள்ளி, மாணவர்களுக்கு கிருஷ்ணர் சம்பந்தப்பட்ட ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து சகோதரத்தை போற்றும் வகையில் ரக்ஷா பந்தன் விழாவும் நடைபெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை பாரதிய ஜனதா கட்சி மாநில கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றிச்செல்வம் மற்றும் டாக்டர் கருணாகரன் -ஜெயலட்சுமி குடும்பத்தினர், பாத சிகிச்சை மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் தலைமை ஆசிரியர் ஞான. கஸ்பர், ஆசிரியர் முரளிதரன், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்க அதிகாரிகள் ஆனந்த் நடராஜன், ரவி, சதீஷ்குமார், சம்பந்தம், வெங்கடேசன், சண்முகம், மாநில கூட்டுறவு பிரிவு இணை அமைப்பாளர் ஹரிதாஸ், தொகுதி தலைவர் இன்பசேகர் மற்றும் விடுதலை நகர் நல சங்க நிர்வாகிகளும், பொது மக்களும், மாணவர்களும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- பாரம்பரிய உணவு வகைகளை இயற்கை முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
- வாழைத்தண்டு துவையல், வாழைப்பூ ஊறு காய்க்கு அதிக வரவேற்புள்ளது.
புதுச்சேரி:
பாரம்பரிய உணவு வகைகளை மீட்கும் நடவடிக்கையில் சர்வதேச இயற்கை அறக்கட்டளை என்ற சமூக அமைப்பு களம் இறங்கியுள்ளது.
கிராம பெண்களுக்கு வேலை கொடுப்பதுடன் அவர்கள் மூலம் பாரம்பரிய உணவு வகைகளை இயற்கை முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
கிழக்கு கடற்கரை சாலையில் புதுவையை அடுத்த கூனிமேடு கிரா மத்தில் இயற்கை சூழலில் பெண்கள் பழச்சாறு, பழங்களின் ஜாம்,கீரை மற்றும் காய்கறிகளை கொண்டு துவையல், ஊறு காய், பொடி ஆகியற்றை தயாரித்து வருகின்றனர்.
வகை வகையான இட்லி பொடி, பழச்சாறு, ஜாம், உறுகாய் ஆகியவற்றை எந்திரங்கள் இன்றி கைகளால் பெண்கள் உருவாக்குகின்றனர்.இங்கு தயாராகும் உணவு பொருட்கள் ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம், வனத்துறை, கைவினை கிராமம் ஆகிய இடங்களில் மக்கள் விரும்பி வாங்கு கின்றனர். அதிலும், இவர்கள் தயாரிக்கும் வாழைத்தண்டு துவையல், வாழைப்பூ ஊறு காய்க்கு அதிக வரவேற்புள்ளது.
2019-ல் 2 பெண் தொழிலாளர்களோடு தொடங்கப்பட்ட பாரம்பரிய உணவு தயாரிப்பு தொழிலில் தற்போது 15 பெண்கள் பணியாற்று கின்றனர்.
- விழாவுக்கு கல்லூரி தலைவரும் நிர்வாக இயக்குன ருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
- நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக சேவை யாற்றிய மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பி.டெக் மாணவர்களின் 1-ம் ஆண்டு துவக்க விழாநடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி தலைவரும் நிர்வாக இயக்குன ருமான தனசேகரன் தலைமை தாங்கினார்.
செயலாளர் நாராயண சாமி, பொருளாளர் ராஜ ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கி னர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, தொழில் ஆலோசகர் மற்றும் ஆய்வாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேசியதாவது:-
புதிய தொழில்நுட்ப வளர்ச்சிகளை மாணவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். மாணவர்கள் தங்கள் தொழில் கல்வியுடன் பிற மொழிகளை யும் கற்பது அவசியம், சமூக வலைத்தளங்களை மாண வர்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். மாணவர்களின் ஒழுக்கம், நன்னடத்தையு டன் இருக்க வேண்டும். எதிர்கால தொழில்நுட்பம், வேலை வாய்ப்பு மாற்றங்கள் மற்றும் அதற்காக தங்களை தயார்படுத்தி கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்று பேசினார். கல்லூரி தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள், கல்லூரியின் முன்னாள் சாதனை மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்பணித் திட்டத்தில் சிறப்பாக சேவை யாற்றிய மாணவர்களுக்கு விருதுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
முடிவில் பேராசிரியர் சுமித்ரா நன்றி கூறினார்.
- தி.மு.க. எம்.எல்.ஏ. கண்டனம்
- எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் அநாரீக முறையில் பேசு வது பண்பாட்டிற்கு முறையானது அல்ல.
புதுச்சேரி:
புதுவை மாநில திமுக துணை அமைப்பாளர் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-
அரசு விழாக்களில் கவர்னர் அரசியல் பேசுவது அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல. அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அல்லது தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று எண்ணம் இருந்தாலும் அவர் பதவியினை விட்டு விலகி அரசியல் கருத்துக்களை தாராளமாக கூறலாம்.
மாற்று கொள்கை உடைய எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கும் அரசு விழாக்களில் அநாரீக முறையில் பேசு வது பண்பாட்டிற்கு முறையானது அல்ல. மாநில உரிமைக்காக சட்ட மன்றத்தில் நிறை வேற்றிய தீர்மானங்களை உடனடியாக மத்திய அரசின் பார்வைக்கு அனுப்பாமல் எங்கே தன் அதிகாரம் பறிபோய் விடுமோ? என்று கருதுவது தான் சனாதனம். கவர்னர் அரசியல் செய்ய நினைத்தால் திமுக அதனை சந்திக்க தயாராக இருக்கிறது.
எதிர்கொள்ள முனைப்போடும் இருக்கிறது என்பதை சனாதன எதிர்ப்பு கொள்கையாக தெரிவித்து கொள்கிறேன்
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கர்நாடகா கல்வியில் விருது என்ற நிகழச்சியை நடத்தி இந்த விருதை வழங்கியது.
- இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் ஆகியோர் வாழ்த்தினையும், பாராட்டினையும் துறையின் டீனுக்கு தெரிவித்தனர்.
புதுச்சேரி:
விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம் ,சென்னை ஆறுபடைவீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் பல்வேறு செயல்பாடுகளின் சிறப்புகளை அங்கீகரிக்கும் வகையில் விருதுகளும் அவற்றுக்கு உறுதுணையாக சிறப்பாக பங்காற்றிய துறையின் டீன் பேராசிரியர் டாக்டர் .செந்தில்குமாருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது
ஒய்.இ.எஸ். அறக்கட்டளை என்ற அரசு சாரா அமைப்பானது சமீபத்தில் பெங்களூருவில் கர்நாடகா கல்வியில் விருது என்ற நிகழச்சியை நடத்தி இந்த விருதை வழங்கியது.
விருதுகளை பெற்றமைக்காக பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன் ஆகியோர் வாழ்த்தினையும், பாராட்டினையும் துறையின் டீனுக்கு தெரிவித்தனர்.
துறையின் பேராசிரியர்களும் வாழ்த்தினை தெரிவித்தனர்.
- வீடுகள், வணிக பயன்பாடு, தொழில்கள் மற்றும் போக்குவரத்துக்கும் கியாஸ் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
- சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் வெளிநாடுகள் மட்டுமின்றி மும்பை , டெல்லி மற்றும் தமிழகத்தில் நாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் செயல்பாட்டில் உள்ளது.
அதன்படி புதுச்சேரி மாநிலத்திலும் வீடுகளுக்கு குழாய் மூலமாக கியாஸ் இணைப்பு வழங்கும் திட்டம் தொடங்கப்பட ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் புதுவை அரசு தொழில் மற்றும் வணிகத்துறை புதுவை நகர எரிவாயு வினியோக கொள்கை -2023 திட்டத்தின்கீழ் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் கியாஸ் இணைப்புக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதில், புதுச்சேரி மாநிலத்தில் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் ரூ.700 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும் வீடுகள், வணிக பயன்பாடு, தொழில்கள் மற்றும் போக்குவரத்துக்கும் கியாஸ் பயன்படுத்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக புதுவை அரசின் தலைமை செயலர் தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் தொழில் மற்றும் வணிகத்துறை, உள்ளாட்சி, பொதுப்பணி, மின்துறை, தொழில்நுட்பம், அறிவியல் தொழில்நுட்பம், வருவாய், தீயணைப்பு ஆகிய துறை செயலர்களும், பிப்டிக் இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாகவும், தொழில் மற்றும் வணிகத்துறை இயக்குனர் உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதேபோல் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் கண்காணிப்பு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் புதுச்சேரி மாநிலத்தில் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது.
- அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
- சாதனை படைத்த வீரர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
புதுச்சேரி:
ஜார்க்கண்ட் மாநிலம் ரான்ஜி மாவட்டத்தில் உள்ள தானா சர்வதேச உள்விளையாட்டரங்கத்தில் தேசிய அளவிலான சிறுவர் சிறுமிகள் மற்றும் கேடட் ஆகிய எடை பிரிவிகளில் கிக் பாக்ஸிங் போட்டி நடைபெற்றது. இதில் புதுவை மாநில கிக் பாக்ஸிங் சங்கத்தின் சார்பில் சங்க தலைவர் இளங்கோவன் தலைமையில் வீரர், வீராங்கணைகள் கலந்து கொண்டனர்.
இதில் புதுவையை சேர்ந்த 10 மாணவ-மாணவிகள் பதக்கங்கள் குவித்து சாதனை படைத்தனர். சாதனை படைத்த வீரர்கள் அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இவர்களுடன் புதுவை மாநில அனைத்து விளையாட்டு வீரர்கள் நல சங்கத்தின் சேர்மன் திருவேங்கடம், இந்தியா விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குனர், முத்து கேசவலு, பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் கமலக்கண்ணன், மாநில அனைத்து விளையாட்டு வீரர்களின் நல சங்கத்தின் கவுரத் தலைவர் ஆளவந்தான், தேசிய பயிற்சியாளர்கள் அமிர்தராஜ், மோகன், பிரவீன் குமார், அய்யனார், விநாயகம், ராஜ்குமார், செபஸ்தியன், ராகுல், அபிலாஷ், முகேஷ்லிங்கம், மோகன சந்துரு, அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமியிடம் தெரிவித்து பாரத மாதா சிலை உருவாக்க சொன்னேன்.
- செய்யப்பட்ட சிலை தோட்டக்கலை பூங்காவில் இருந்தது. கடந்த 2011-ல் தானே புயலில் இச்சிலை சேதமடைந்தது.
புதுச்சேரி:
புதுவை தாவரவியல் பூங்காவில் புதுப்பிக்கப்பட்ட பாரத மாதா சிலையை கவர்னர் தமிழிசை திறந்து வைத்தார்.
முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் தேனீ. ஜெயக்குமார், அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, தலைமைச்செயலர் ராஜீவ் வர்மா, வேளாண் செயலர் குமார், இயக்குநர் பாலகாந்தி ஆகியோர் பங்கேற்றனர்.
சிலையை டெரகோட்டா முனுசாமி வடி வமைத்திருந்தார்.சிலையை திறந்து வைத்த பின்பு நிருபர்களிடம் கவர்னர் தமிழிசை கூறியதாவது:-
பாரதியார் பாரத மாதா சிலை உருவாக்க எண்ணினார். அதற்கான வரைப்படத்தை அவர் உருவாக்கினார். முதலில் பிரெஞ்சு கலைஞர் வரைந்த மாதா ஓவியம் பாரதியாருக்கு திருப்தி தரவில்லை. அலங்காரத்துடன் பாரத மாதா இருக்க விரும்பினார்.
அதன்படி உருவாக்கப்பட்ட பாரத மாதாசிலை தாவரவியல் பூங்காவில் இருந்தது. தானே புயலில் இச்சிலை சேதமடைந்தது. அதையடுத்து கவர்னராக வந்தபோது பார்த்தேன். சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமியிடம் தெரிவித்து பாரத மாதா சிலை உருவாக்க சொன்னேன்.
தற்போது ஜி-20 மாநாட்டை பாரத தேசம் தலைமைதாங்கி சிலை நடத்திக் கொண்டி ருக்கும்போது புதுவையில் பாரதமாதா சிலை நிறுவப்பட்டுள்ளது. எல்லா விதத்திலும் புதுவை வளர்ச்சி அடைய நாம் பாடுபட பாரதமாதா சிலை முன்பு சபதமேற்போம்.
ஜி-20 மாநாட்டுக்கு சுடுமண் சிற்ப கலைஞர் முனுசாமி அழைக்கப்பட்டுள்ளார். 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்கள் ஜி-20 மாநாட்டில் பங்கேற்றுள் ளனர். எந்த நாட்டிலும் இப்படி கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டதில்லை
இவ்வாறு தமிழிசை கூறினார்.
பாரதமாதா சிலை வரலாறு தொடர்பாக வேளாண்துறையினர் வெளியிட்டுள் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது;
பாரத அன்னை சிலையை உருவாக்க வவேசு அய்யருடன் பாரதியார் கலந்து ஆலோசித்தார். தலையில் தங்க கிரீடமும், இருபுறமும் விரிந்த இமயப் புருவதமும், சிந்து, கங்கை ஆறுகள் இரு மருங்கிலும் அமைய இலங்கை நாடு தாமரை மலராக நிற்கட்டும் என்று பாரத நிலப்பரப்பை உள்ளடக்கி பாரத மாதா சிலையை உருவாக்க விரும்பினார்.
அப்போதைய பிரெஞ்சு கல்லூரி ஓவிய ஆசிரியர் பெத்ரீஸ், பாரத மாதா சிலையை உருவாக்கினார். அது பாரதியாருக்கு திருப்தி தரவில்லை. அவர் சொன்ன திருத்தங்களை செய்து வரைந்து கொடுத்தார்.பாரதியின் அன்பர்கள் இந்த ஒவியத்தை குயவர் பாளையம் வைத்தியநாத பத்தரிடம் தந்து பாரத மாதா சிலை செய்து தர கேட்டனர். அங்கு செய்யப்பட்ட சிலை தோட்டக்கலை பூங்காவில் இருந்தது. கடந்த 2011-ல் தானே புயலில் இச்சிலை சேதமடைந்தது. தற்போது மீண்டும் டெரகோட்டாவில் வடிவமைக்கப்பட்டு நிறுவப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
- செல்வகணபதி எம்.பி., பள்ளி முதல்வர் பத்மா மற்றும் கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.
- சாய்ராம் சுந்தரம் மற்றும் தாசில்தார் உதயராஜ் கலந்து கொண்டனர்.
புதுச்சோி:
லாஸ்பேட்டையில் உள்ள விவேகானந்தா கல்வி அறக்கட்டளை சார்பில் இளநிலை எழுத்தர் தேர்வுக்கான பயிற்சி முகாம் 6 மாத ங்களாக விவேகானந்தா பள்ளியில் நடந்தது. இந்த முகாமில் பயிற்சி பெற்ற 9 மாணவர்கள் தேர்வில் வெற்றி பெற்ற சாதனை படைத்தனர். அவர்களை விவேகானந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் செல்வகணபதி எம்.பி., பள்ளி முதல்வர் பத்மா மற் றும் கணேஷ் ஆகியோர் பாராட்டினர்.
விழாவில் பயிற்சி முகாம் ஒருங்கினைப்பாளர் பேராசிரியர் உதயகுமார், பயிற்சியாளர்கள் மாதவன், சாய்ராம் சுந்தரம் மற்றும் தாசில்தார் உதயராஜ் கலந்து கொண்டனர்.
- கல்லூரி முதல்வர் டாக்டர்.கண்ணன் முன்னிலையில் ஆசிரியர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது.
- ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டி, விருந்தைத் தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
பொம்மையர்பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் கல்லூரியின் செயலர் சிவகுமார் தலைமை தாங்கினார்.
கல்லூரி முதல்வர் டாக்டர்.கண்ணன் முன்னிலையில் ஆசிரியர்கள் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் செயலாளர் சிவக்குமார், கல்லூரி முதல்வர் கண்ணன் பேராசிரியர்களை வாழ்த்திப் பேசி பரிசுகள் வழங்கப்பட்டது.
பின் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப்போட்டி, விருந்தைத் தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடந்தது.
- கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோர்ட்டு நுழைவாயில் எதிரில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம். குமரன் தலைமையில் நடைபெற்றது.
- புவனேஸ்வரி, இளங்கோவன், சுந்தர், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
இ.பைலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதால் நடைமுறையை திரும்பப் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தை வலியுறுத்தி புதுச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோர்ட்டு நுழைவாயில் எதிரில் வழக்கறிஞர் சங்கத் தலைவர் எம் குமரன் தலைமையில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பொதுச் செயலாளர் கதிர்வேல் பொருளாளர் லட்சுமி நாராயணன் இணை செயலாளர்கள் திருமலைவாசன் சதீஷ்குமார், வடிவரசன், சம்பத், செயற்குழு உறுப்பினர்கள் சதீஷ்குமார், சிவராமன், சந்தோஷ்குமார் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் கலியமூர்த்தி,
திருகண்ண செல்வன், பச்சையப்பன், சுப்பிரமணியன், அம்மாவாசை, சுப்பிரமணி, சாய் ராஜகோபால், குமரன், லட்சுமணன், நாராயணகுமார், ராமன், கார்த்திக், ராஜ பிரகாஷ், முத்துக்குமரன், கார்த்திகேயன், வேலு பிரபாகரன், தனசேகரி, புவனேஸ்வரி, இளங்கோவன், சுந்தர், உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.






