என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    1½ ஏக்கர் முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தது
    X

    வேரோடு சாய்து கிடக்கும் முருங்கை மரங்கள்.

    1½ ஏக்கர் முருங்கை மரங்கள் வேரோடு சாய்ந்தது

    • காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சூறை காற்றுடன் கூடிய கன மழை பெய்தது
    • பூ வைத்து பிஞ்சு காய்த்த நிலையில் மழையால் சாய்ந்து விட்டது. சிறு காற்றுக்கூட தாங்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை காட்டேரிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்ஹை. இவர் தனது 4 ஏக்கர் விவசாய நிலத்தில் சொட்டு நீர் பாசனத்தின் மூலம் பப்பாளி காய்கறி வகைகள், மற்றும் பூச்செடிகளை பயிரிட்டு வருகிறார். இவரது விவசாய நிலத்தில் 1 1/2 ஏக்கர் பரப்பளவில் முருங்கை பயிரிட்டு இருந்தார். தற்போது நன்கு வளர்ந்து மரங்களில் பூக்கள் பூக்க தொடங்கி இருந்தது.

    இந்த நிலையில் காட்டேரிக்குப்பம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சூறை காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.இதில் அப்துல் ஹை பயிரிட்டு இருந்த முருங்கை மரங்களில் 150-க்கும் மேற்பட்ட மரங்கள் வேருடன் சாய்ந்தது.

    இதுகுறித்து விவசாயி அப்துல்ஹை கூறியதாவது:

    சொட்டுநீர் பாசனத்தில் காய்கறிகள் பயிரிட்டு வந்தேன். தற்போது 50 ஆயிரம் செலவிட்டு 1 1/2 ஏக்கரில் முருங்கை பயிரிட்டேன். பூ வைத்து பிஞ்சு காய்த்த நிலையில் மழையால் சாய்ந்து விட்டது. சிறு காற்றுக்கூட தாங்கவில்லை. ரூ.50 ஆயிரம் செலவிட்டிருந்தேன்.

    தற்போது இதை அகற்ற ரூ.50 ஆயிரம் தேவைப்படும். மாற்றுப்பயிராகதான் பயிரிட்டு பார்த்தேன். அரசு உதவினால் நன்றாக இருக்கும். அதிகாரிகள் நேரடியாக இங்கு வந்து ஆய்வு செய்வார்கள் என நம்புகிறேன்" என்று குறிப்பிட்டார்.

    Next Story
    ×