என் மலர்
புதுச்சேரி
- ஏ.ஐ.யூ.டி.யூ.சி. வலியுறுத்தல்
- பாதிக்கப்படுவோர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் புகார் செய்து தீர்வு காண நம்பிக்கையோடு வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை ஏ.ஐ.யூ.டி.யூ.சி. தலைவர் சங்கரன், செயலாளர் சிவக்குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவையில் பல்வேறு பகுதிகளில் தொழிற்பே ட்டைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொன்றிலும் 100-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு பணியா ற்றும் தொழிலாளர்களுக்கு நலச்சட்ட சலுகைகள், உரிமைகள் அளிப்பதில்லை. பாதிக்கப்படுவோர் தொழிலாளர் துறை அலுவலகத்தில் புகார் செய்து தீர்வு காண நம்பிக்கையோடு வருகின்றனர்.
ஆனால் தொழிலாளர் துறை அதிகாரிகள் செயல்பாடு திருப்தியாக இல்லை. இங்கு 3 ஆண்டாக நிரந்தர ஆணையர் நியமிக்கவில்லை. துணை ஆணையரும் பணியில் இல்லை. அங்குள்ள அதிகாரிகள் பணிகளை சரியாக செய்வதில்லை. தொழிலாளர் துறையின் இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். துறையில் 100 பணியிடம் காலியாக உள்ளது.
இதனால் தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள் துறை முதலாளிகள் துறையாக மாறிவிட்டது. இங்கு நிரந்தர ஆணையரை நியமிக்க வேண்டும். தொழிலாளர் துறையை செயல்படும் துறையாக அரசு மாற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்தாள்குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியில் புதுச்சேரி ஈட்டன் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது. அந்நிறுவன மனிதவளத்துறை மேலாளர் சந்தோஷ், ஜெய்குமார், ஆகாஷ், மற்றும் முத்துலட்சுமி நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் எஸ்.வி.சுகுமாறன், மற்றும் செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.
முகாமில், புதுவை மணக்குள விநாயகர் கல்வி குழுமத்தின் கீழ் இயங்கும் அணைத்து பொறியியல் கல்லூரிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட இறுதியாண்டு படிக்கும் மற்றும் 2022-2023 பொறியியல் முடித்த மாணவிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக்குமார் செய்திருந்தார்.
- நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம்.
- ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பத்தில் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா நடந்தது.
கருணாநிதி சிலையை ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்து பேசினார். அவர் பேசும்போது, திராவிட இயக்கங்களால்தான் கவர்னராக தமிழிசை பதவி வகிக்கிறார் என்று பேசினார். அவர் பேச்சுக்கு கவர்னர் தமிழிசை இன்று பதிலடி கொடுத்தார்.
புதுவை கடற்கரை சாலையில் நடந்த எய்ட்ஸ் விழிப்புணர்வு ஓட்டத்தை தொடங்கி வைத்த கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-
நாங்கள் கடுமையாக படித்ததால்தான் முன்னேறியுள்ளோம். மற்றொருவரின் முன்னேற்றத்தில் மற்றவர்களுக்கு பங்கு உள்ளது என கூறுவது அவருக்கு வேண்டுமானால் சரியாக இருக்கலாம்.
அவர்களை தூக்கிக்கொண்டுபோய் மேலே வைத்தனர். நான் மருத்துவக்கல்லூரியில் சேர்ந்து படித்தேன். என் முயற்சியால் வெளிநாட்டிற்கு சென்று படித்தேன். சனாதனம் என்றால் தவறான கருத்தை முன்னிறுத்துகின்றனர். ஆ.ராசா எப்போதும் அப்படித்தான் பேசி வருகிறார். தம்பி உதயநிதி அதைப்பற்றி தெரியாமல் பேசக்கூடாது.
ஒழுக்கத்தோடு கூடிய வாழ்வியல் முறைதான் சனாதனம். சனாதனம் என்றால் சாதி மட்டும்தான் என சொல்கின்றனர். சாதியை ஒழிக்க வேண்டுமென்றால் எதற்கும் சாதி கேட்காதீர்கள். சாதிரீதியாக ஒதுக்கீடு தராதீர்கள், ஏன் தி.மு.க.வில் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஏன் முதலமைச்சர் பதவியை தர மறுக்கிறீர்கள்?
உங்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது. உங்கள் கட்சியில் உங்களைப்போல ஒருவர் தலைவராக வர முடியுமா? சனாதனத்தை எதிர்ப்பவர்கள் உங்கள் கட்சியில் உள்ள சர்வாதிகாரத்தை முதலில் எதிருங்கள். உதயநிதியை விட நன்றாக உழைத்தவர்கள் யாருமே தி.மு.க.வில் இல்லையா? ஆனால் அவர்கள் மட்டும்தானே பதவிக்கு வர முடிகிறது.
ஆ.ராசா கட்சியின் தலைவராகிவிட முடியுமா? மிகவும் அடிமட்டத்தில் உள்ளவர்களை உங்கள் கட்சியின் தலைவராகவோ? முதலமைச்சராகவோ? ஆக்கிவிட முடியுமா?
நீங்கள் எதையும் செய்வதில்லை. உலகிற்கு சொல்லிக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தம்? தமிழகம் கல்வியில் உயர பெருந்தலைவர் காமராஜர் போட்ட விதை. நீங்களே எல்லாவற்றுக்கும் சொந்தம் கொண்டாடுவதை ஒப்புக்கொள்ள முடியாது. ஆ.ராசா உங்கள் கட்சியில் நீங்கள் தலைவராக முடியுமா? என முதலில் சொல்லுங்கள். அதன்பின் சனாதனம் பற்றி பேசுங்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- அமித்ஷா உள்பட பா.ஜனதாவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள்.
- சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை வீராம்பட்டினத்தில் கருணாநிதி சிலையை முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசா எம்.பி. திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. பேசியதாவது:-
கருணாநிதி தனது அறிவால், ஆற்றலால், தியாகத்தால், உழைப்பால் தமிழக முதல்-அமைச்சராக இந்திய அரசியலுக்கு ஆற்றியுள்ள பங்கு ஏராளம். அவர் எத்தனையோ பிரதமர், ஜனாதிபதிகளை உருவாக்கியுள்ளார்.
அகில இந்திய அரசியலில் எப்போதெல்லாம் நெருக்கடி வருகிறதோ அப்போதெல்லாம் கருணாநிதியின் பங்கு அதிகம்.
சனாதனம் என்றால் என்ன என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். நான் புதுவையிலிருந்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு சவால் விடுகிறேன்.
அமித்ஷா உள்பட பா.ஜனதாவில் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும் வாருங்கள். டெல்லியில் திறந்த வெளியில் விவாதிப்போம். தி.மு.க சார்பில் நானும் பேசுகிறேன்.
நாங்கள் சனாதனம் வேண்டாம் என போராடியதால்தான் தமிழிசை கவர்னர், வானதி சீனிவாசன் வக்கீல், அண்ணாமலை ஐ.பி.எஸ் அதிகாரியாக ஆனார்கள்.
சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால்தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லாவிட்டால் வேறு வேலைக்கு சென்றிருப்பார்.
மோடியை விட அமித்ஷாவை விட பா.ஜனதாவில் உள்ள அனைத்து அமைச்சர்களையும் விட ஆர்.எஸ்.எஸ்.சில் இருப்பவர்களை விட வெள்ளையர்கள் நல்லவர்கள், நாணயமானவர்கள், யோக்கியமானவர்கள். ஜாலியன் வாலாபாக் படுகொலை நடந்து 100 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து நாட்டின் பிரதமர் இங்கு வந்து, எங்கள் அரசு உங்களுக்கு பாவம் செய்துவிட்டது என கூறி மண்டியிட்டு மன்னிப்பு கேட்டார்.
ஆனால் மணிப்பூரில் 200-க்கும் மேற்பட்டவர்களை கொன்றுவிட்டு, பழங்குடியினத்தை சேர்ந்த இளம்பெண்களை ஆடைகள் இல்லாமல் அழைத்து சென்று காட்டுமிராண்டித்தனமாக நடந்துகொண்டனர்.
இதை நியாயப்படுத்தும் அங்குள்ள முதல்-அமைச்சரை பாராளுமன்றத்தில் மோடி, அமித்ஷா பாராட்டுகின்றனர். ஊழலும், மதவாதமும் வளர்ந்து கொண்டிருக்கிற இந்த ஆட்சியை தூக்கி எறிய நாம் எல்லோரும் உறுதியேற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘பெட் பட்ஸ்’ என்ற மின் இதழையும் வெளியிட்டது.
- மாணவர்களின் சிறப்புரையும் நடைபெற்றன. துணை முதல்வர் ஜான்பால் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா பள்ளியில் உள்ள பேரரங்கில் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி, கடலூர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு 'பெட்டி பெட்டல்ஸ்' என்று அழைக்கப்படும் மாதாந்திர 'மின் இதழையும்' உப்பளம் பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'பெட் பட்ஸ்' என்ற மின் இதழையும் வெளியிட்டு ஆசிரியர் தின விழா வாழ்த்துரை வழங்கினார்.
பள்ளி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் குழு நடனமும், கலை நிகழ்ச்சிகளும், மாண வர்களின் சிறப்புரையும் நடைபெற்றன. துணை முதல்வர் ஜான்பால் நன்றி கூறினார்.
- போலீஸ் குடியிருப்புக்கும் சி.பி.சி.ஐ.டி. ஷாம்ளா பெரியகடைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
- உத்தரவை தலைமையக எஸ்.பி. சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.
புதுச்சேரி:
போலீஸ் துறையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 4 சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 181 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சிக்மா செக்யூரிட்டியில் பணிபுரியும் இன்ஸ்பெக்டர்கள் சண்முகம் மாகிவிற்கும், வெங்கடாஜலபதி ஓதியஞ்சாலைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
போலீஸ் குடியிருப்பு குமரவேல், கடலோர காவல்பிரிவுக்கும், அரியாங்குப்பம் பழனிசாமி சிக்மா செக்யூரிட்டிக்கும், காரைக்கால் ஆயுதப்படை தமிழரசன், புதுவை போலீஸ் குடியிருப்புக்கும் சி.பி.சி.ஐ.டி. ஷாம்ளா பெரியகடைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
தலைமை காவலர்கள் 15 பேர் உதவி சப்-இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 10 பெண் போலீசார் உட்பட 160 போலீசார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை தலைமையக எஸ்.பி. சுபம்கோஷ் பிறப்பித்துள்ளார்.
- அரசு பணியாளர் கூட்டமைப்பு கோரிக்கை
- ரூ.18 ஆயிரம் சட்டக்கூலி வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம்.
புதுச்சேரி:
புதுவை அரசு பணியாளர் நல கூட்டமைப்பு தலைவர் சரவணன் தலைமையிலான நிர்வாகிகள் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
பொதுப்பணித்துறையில் கடந்த 13 ஆண்டாக ஆயிரத்து 500 வவுச்சர் ஊழியர்கள் பணிபுரிகிறோம். இதில் 700-க்கும் மேற்பட்டோர் 40 வயதை கடந்தவர்கள். கால்நடை மருத்துவ கல்லூரியில் 83 ஊழியர்கள் உள்ளனர்.
அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பு சார்பில் ஊழியர்களின் வயது, வறுமையை கருத்தில் கொண்டு பணி நியமன விதியை ஒருமுறை தளர்வு செய்து ரூ.18 ஆயிரம் சட்டக்கூலி வழங்க வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம்.
இந்த கோரிக்கையை ஏற்று முதல்-அமைச்சர் சட்டசபையில் ரூ.18 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என அறிவித்தார். இந்த சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும். வவுச்சர் ஊழியர்களின் சீனியாரிட்டி பட்டியல் தயாரித்து காலி பணியிடங்களைநிரப்ப வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கவர்னர் தமிழிசை தொடங்கி வைத்தார்.
- கல்வித்துறை என்.எஸ்.எஸ். மாணவர்கள், புதுவை சமூக அமைப்புகள் மற்றும் பலர் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
பூரணாங்குப்பம் தனசுந்தராம்பாள் சாரிடபுள் சொசைட்டி, சென்னை காயத்ரி சாரிட்டீஸ், ரோட்டரி கிளப் பாண்டிச்சேரி ஓயிட் டவுன், மழைத்துளி உயிர்த்துளி அமைப்புகளுடன் இணைந்து தமிழரின் தேசிய மரமான பனைமரம் மீட்பு 6-ம் ஆண்டு தொடர் பயணத்தின் தொடக்கம், இந்தியாவின் 76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 76 ஆயிரம் பனை விதைகளை புதுவை மற்றும் அதனை சுற்றியுள்ள தமிழகப் பகுதிகளில் பனை விதை நடவு விழா அரியாங்குப்பம் அடுத்த வீராம்பட்டினம் கிழக்கு கடற்கரையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தனசுந்தராம்பாள் சாரிடபுள் சொசைட்டி தலைவர் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார்.
வீராம்பட்டினம் கிராம மக்கள் குழு தலைமை தாங்கினார். வண்ணங்களின் சங்கம் பிரபாகர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு முதல் பனை விதை நடவு பணியை தொடங்கி வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம், பாஸ்கர் எம்.எல்.ஏ., நேரு யுவகேந்திரா துணை இயக்குனர் தெய்வசிகாமணி, அரியாங்குப்பம் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன செவிலியர் கல்லூரி முதல்வர் பரிமளா தமிழ்வாணன், கிளப் ஆப் புதுச்சேரி ஓயிட் டவுன் தலைவர் திருஞானம், புதுச்சேரி நாட்டு நலப் பணித்திட்ட அதிகாரி சதீஷ்குமார், அன்பே சிவம் அறக்கட்டளை தலைவர் ஜெயந்தி தொகுத்து வழங்கினார்.
புதுச்சேரி கல்வித்துறை என்.எஸ்.எஸ். மாணவர்கள், புதுவை சமூக அமைப்புகள் மற்றும் பலர் ஈடுபட்டனர். முடிவில் மண்வாசம் இளைஞர் மன்ற தலைவர் ஆறுமுகம் நன்றி கூறினார்.
- எம்.பி.பி.எஸ், பல், ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும்.
- அரசின் 10 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற விருப்பம் தெரிவிக்க வேண்டும்.
புதுச்சேரி:
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதையடுத்து முறைப்படி அரசாணை வெளியிடப்பட்டது. அதில், புதுவை யூனியன் பிரதேச அரசு நடத்தும் பள்ளியில் 1 முதல் பிளஸ்2 வரை படித்த மாணவர்களுக்கு மொத்த இடஒதுக்கீட்டில் 10 சதவீதம் கிடைமட்ட ஒதுக்கீடு தரப்படுகிறது. இந்த கல்வியாண்டு முதல் மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள எம்.பி.பி.எஸ், பல், ஆயுர்வேத மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத ஒதுக்கீடு வழங்கப்படும். அதே சமயம் நீட் தேர்வில் வெற்றி பெறுவது தகுதியாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் 10 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை பெற சென்டாக்கில் இதுவரை விண்ணப்பிக்காத அரசு பள்ளி மாணவர்கள் வரும் 8-ம் தேதி காலை 10 மணி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த பின் அரசின் 10 சதவீத ஒதுக்கீட்டீல் சேரும் விருப்பத்தை பதிவு செய்ய வேண்டும்.
ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் புதிதாக விண்ணப்பிக்க தேவையில்லை. ஆனால் இணையதளம் சென்று அரசின் 10 சதவீத உள் ஒதுக்கீட்டில் சேர்க்கை பெற விருப்பம் தெரிவிக்க வேண்டும். மேலும் பிளஸ்-2 வரை படித்த பள்ளி மாற்று சான்றிதழ், படிப்பு சான்றிதழ், வருவாய்த்துறை குடியுரிமை சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வேண்டும். பொது, ஓ.பி.சி, எம்.பி.சி, இ.பி.சி, பி.சி.எம், பி.டி பிரிவினருக்கு கட்டணமாக ரூ.ஆயிரம், எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.500 கட்டணம் செலுத்த வேண்டும்.
- காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.
- சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா கருவடிக்குப்பம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் மணிமண்டபத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு கல்வி அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம் ஆகியோர் விழா மேடையில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் 21 ஆசிரியர்களுக்கு, டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து புதுச்சேரி அரசு கல்வியியல் கல்லூரியின் பெயர் பலகையும் திறந்துவைக்கப்பட்டது.
விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி கூறியதாவது:-
புதுவையில் கல்வித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு செய்து வருகிறது. பள்ளிகளில் கழிவறைகளை சுத்தமாக வைத்து, நல்ல குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் அரசு கவனம் செலுத்தும்.
புதுவை அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை காலை உணவு திட்டத்தில் முன்பு ரொட்டி மற்றும் பால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது பால் மட்டும் வழங்கப்படுகிறது. மீண்டும் காலை உணவு திட்டத்தில் பாலோடு சேர்த்து ரொட்டி அல்லது பிஸ்கெட் மற்றும் பழம் வழங்கப்படும்.
புதிய திட்டமாக மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டிற்கு செல்வதற்கு முன்பாக அவர்களுக்கு சிறுதானிய உணவும் வழங்கப்படும். அதாவது சுண்டல், கடலை உள்ளிட்ட சிறுதானிய உணவுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் புதுச்சேரி, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் 85 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயன் பெறுவார்கள். படிக்கும் மாணவர்களுக்கு அது புத்துணர்வு அளிப்பதாக இருக்கும். மாலையில் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பு மாணவர்களின் சோர்வை போக்கவே சிறுதானிய உணவு வழங்கப்பட உள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் ரங்கசாமி கூறினார்.
- அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
- கிறிஸ்தவ பள்ளிகளின் பாதிரியார்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. பிறந்தநாளையொட்டி புதுவை சட்டசபை எதிரே பாரதி பூங்காவில் உள்ள அவரின் சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், ஜான்குமார், கே.எஸ்.பி.ரமேஷ், பாஸ்கர், லட்சுமிகாந்தன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில்சிலைக்கு மாலை அணிவித்தனர். பா.ஜனதா நிர்வாகிகள் செல்வம், ஜெயலட்சுமி, தமிழ்மாறன் மற்றும் பலர் கலந்துகொண்டனர். புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம் தலைமையிலும் சார்பிலும் வ.உ.சி மாலை அணிவிக்கப்பட்டது.
புதுவை அரசு சார்பில் அன்னை தெரசா நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள அன்னை தெரசா சிலைக்கு கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், மற்றும்
எம்.எல்.ஏ.க்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து கிறிஸ்தவ அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ பள்ளிகளின் பாதிரியார்கள், நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.
- மீனவர் பேரவையின் புதுவை தலைவர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- காற்றில் ஆக்சிசன் அளவை அதிகரிக்கவும், சுற்றுச் சூழல் பாது காப்பில் முக்கிய பங்காக இருந்தது.
புதுச்சேரி:
தமிழ்நாடு மீனவர் பேரவையின் புதுவை தலைவர் புகழேந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி துறைமுக நுழைவு வாயில் அருகே அரசால் பாதுகாக்கப்பட்டு சதுப்பு நிலக்காடுகளில் வளர்க்கபட்டு வந்த மாங்குரோவ் மரங்கள் நிலத்தடி நீர்வளம் பெருகவும், சுனாமி போன்ற பேரிடர் காலங்களில் வெள்ளத் தடுப்புகளாகவும், காற்றில் ஆக்சிசன் அளவை அதிகரிக்கவும், சுற்றுச் சூழல் பாது காப்பில் முக்கிய பங்காக இருந்தது.
தற்போது மாங்குரோவ் காடுகளை, தனியார் நிறுவனம் கடந்த ஒரு மாத காலமாக புல்டோசர் மூலம்அ ழித்து வருவது மட்டுமல்லாமல் அரசுக்கு சொந்தமான அந்த இடத்தை ஆக்கிரமித்து இது தனியாருக்கு சொந்தமான இடம்" என்று குறிப்பிட்டு அறிவிப்பு பலகை வைத்துள்ளனர். ஆனால் வனத்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக இருப்பது வியப்பளிக்கிறது.
இந்த இடம் துறைமுக விரிவாக்க அபிவிருத்திக்காக பயன்படுத்த இருந்ததாக அறியப்படுகிறது. அப்படி துறைமுக விரிவாக்கத்திற்கு பயன்படுத்தி னால், இயற்கை பேரிடர் காலங்களில் படகுகளை பாதுகாப்பாக வைக்கமுடியும்.
தொடர்ந்து புதுவை மாநில மீனவர்களின் நலத்தி ற்கும், வளத்திற்கும் குந்தகம் விளைவிக்கும் அந்த தனியார் நிறுவனத்துக்கு எதிராக மீனவர்களை ஒன்று திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை நடத்துவோம். எனவே தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை மீட்டு மீனவர்கள் படகுத் தளம் அமைக்க அரசு வழிவகை செய்யவேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.






