என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெத்தி செமினார் பள்ளியில் ஆசிரியர் தின விழா
    X

    பெத்தி செமினார் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்ட காட்சி.

    பெத்தி செமினார் பள்ளியில் ஆசிரியர் தின விழா

    • பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட ‘பெட் பட்ஸ்’ என்ற மின் இதழையும் வெளியிட்டது.
    • மாணவர்களின் சிறப்புரையும் நடைபெற்றன. துணை முதல்வர் ஜான்பால் நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தினவிழா பள்ளியில் உள்ள பேரரங்கில் கொண்டாடப்பட்டது. புதுச்சேரி, கடலூர் மறை மாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு 'பெட்டி பெட்டல்ஸ்' என்று அழைக்கப்படும் மாதாந்திர 'மின் இதழையும்' உப்பளம் பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்ட 'பெட் பட்ஸ்' என்ற மின் இதழையும் வெளியிட்டு ஆசிரியர் தின விழா வாழ்த்துரை வழங்கினார்.

    பள்ளி முதல்வர் தேவதாஸ் தலைமை தாங்கினார். தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் குழு நடனமும், கலை நிகழ்ச்சிகளும், மாண வர்களின் சிறப்புரையும் நடைபெற்றன. துணை முதல்வர் ஜான்பால் நன்றி கூறினார்.

    Next Story
    ×