என் மலர்
புதுச்சேரி
- மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் பாலம் வரை தினமும் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாக உள்ளது.
- தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் உருவானது.
புதுச்சேரி:
புதுவை-கடலூர் சாலையில் மரப்பாலத்தில் இருந்து முருங்கப்பாக்கம் பாலம் வரை தினமும் போக்குவரத்து நெரிசல் என்பது வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில் முருங்கப்பாக்கத்தில் திரவுபதி அம்மன் கோவில் எதிரில் கடலூர் பிரதான சாலையின் ஒருபுறம் நேற்று நள்ளிரவு திடீரென பெரிய பள்ளம் ஏற்பட்டது. சாலையின் அடியில் சென்ற பெரிய குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீரால் அரிப்பு ஏற்பட்டு சாலையில் பள்ளம் உருவானது.
இதனால் நேற்று நள்ளிரவு முதல் அந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியவில்லை. இன்று காலையில் நயினார்மண்டபம் கோவில் அருகே கடலூர் சாலையில் சென்ற வர்களை ஒரே புறமாக சென்று அந்த பள்ளம் விழுந்த பகுதியை கடந்த பின் இருவழிப்பாதை யாக ஏற்பாடு செய்யப்ப ட்டது. இதனால் கடலூர் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இன்று காலை பள்ளி, கல்லூரி செல்லும் நேரத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டதால் மாணவர்கள் பெரும் அவதிக்குள்ளா னார்கள்.
மாணவர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்கள் உள்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் இருபுறமும் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
போக்குவரத்து போலீசார் வாகனங்கள் செல்ல வழி ஏற்படுத்தினர். ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை. சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இந்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து கடலூரில் இருந்து வந்த பஸ்கள், கனரக வாகனங்களை தவளக்குப்பத்தில் மறித்து அபிஷேகபாக்கம் வழியாக திருப்பி அனுப்பினர்.
அந்த வாகனங்கள் வில்லியனூர் வழியாக புதிய பஸ்நிலையத்துக்கு செல்ல அறிவுறுத்தினர். புதுவை பஸ்நிலையத்திலிருந்து புறப்பட்ட பஸ்கள், கனரக வாகனங்கள் இந்திராகாந்தி சிலை வழியாக வில்லியனூர் சென்று தவளக்குப்பம் வழியாக கடலூர் செல்ல அறிவுறுத்தப்பட்டன.
இருப்பினும் கார்கள், இருசக்கர வாகனங்கள் இந்த வழியில் சென்றதால் கடும் நெரிசலோடும், அவதியோடும் அப்பகுதியை கடந்து சென்றனர். இந்த நிலையில் குடிநீர் குழாயை மாற்றி சீரமைப்பு பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இன்று இரவுதான் இந்த பணி முடிவடையும் என தெரிகிறது. இதன்பிறகே இந்த சாலை வழக்கமான போக்குவரத்துக்கு அனுமதி க்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே மரப்பாலம் சந்திப்பில் பாலம் கட்டும் பணியால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்த நிலையில் அந்த பணி தற்போது முடிவடைந்து போக்குவரத்து சீராவதற்குள் முருங்கப்பாக்க த்தில் குடிநீர் குழாய் உடைந்து பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து தடை உள்ளதால் பொதுமக்கள் முக சுளிப்புடன் சென்றனர்.
- உத்திரபிரதேசத்தை சேர்ந்தர் ஜமுனா பிரசாத்.
- இரவு லாரியிலேயே ஓய்வு எடுத்து தூங்கி கொண்டிருந்தார்
புதுச்சேரி:
உத்திரபிரதேசத்தை சேர்ந்தர் ஜமுனா பிரசாத். டேங்கர் லாரி டிரைவர். இவர் மும்பையில் இருந்து டேங்கர் லாரியில் மெத்தனால் ஏற்றிக்கொண்டு கடந்த 3-ந் தேதி கோர்க்காட்டில் உள்ள தனியார் கம்பெனிக்கு வந்தார். அன்று இரவு லாரியிலேயே ஓய்வு எடுத்து தூங்கி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அங்கிருந்த தனியார் கம்பெனி ஊழியர்கள் கரிக்கலாம்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு வந்தனர். அங்கு சிகிச்சை அளித்துக்கொண்டிருந்த சிறிது நேரத்தில் ஜமுனா பிரசாத் மயங்கி விழுந்து இறந்து போனார்.
இதுகுறித்து புகாரின் பேரில் கரிக்கலாம்பாக்கம் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா கட்சி தலைமை அறிவுறுத்தலின்படி பா.ஜனதா கூட்டுறவு பிரிவு அமைப்பாளர் வெற்றி செல்வம் தலைமையில் முதலியார்பேட்டை அர்சுண சுப்புராயநாயக்கர் அரசு உயர்நிலைபள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவில் பள்ளி மாணவர்களுக்கு வெற்றி செல்வம் இனிப்பு வழங்கி னார். மேலும் தன்னிடம் பயின்ற முன்னாள் மாணவ ரும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்றவருமான அறிவிந்த ராஜா மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் ரவிச்சந்திரன் உள்பட அனைத்து ஆசிரியர்க ளுக்கும் கதர் ஆடை அணி வித்து வாழ்த்து தெரி வித்தார்.
இந்நிகழ்ச்சியில் தொகுதி தலைவர் இன்பசேகர் மற்றும் பா.ஜனதா நிர்வாகி கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பா.ஜனதா மாநில கூட்டுறவு பிரிவு இணை அமைப்பாளர் ஹரிதாஸ் செய்திருந்தார்.
- வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் குப்பை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
- அதிகாரி நரேந்திரன் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் சிறப்பு துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கிராமங்களில் குப்பை சேகரிக்கும் பணியில் தனியார் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.
உழவர்கரை நகராட்சி ஆணையர் எழில்ராஜன் வாரத்தில் ஒரு நாள் கிளீன் புதுவை, கிரீன் புதுவை என்ற திட்டத்தின் கீழ் சிறப்பு துப்புரவு பணியில் ஊழி யர்கள் ஈடுபட வேண்டும் என உத்தர விட்டார். அதன்பேரில் தனியார் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி நரேந்திரன் தலைமையில் துப்புரவு பணியாளர்கள் சிறப்பு துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மங்கலம் தொகுதி திருக்காஞ்சி கிராமம் தத்தெடுக்கப்பட்டு சிறப்பு துப்புரவு பணி நடந்தது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக வேளாண்துறை அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் கலந்து கொண்டு சிறப்பு துப்புரவு பணி மற்றும் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி திருக்காஞ்சி கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக சென்று குப்பை களை வீதியில் கொட்ட வேண்டாம் என முழக்க மிட்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி னர். பிறகு கிராமம் முழு வதும் உள்ள குப்பைகளை அகற்றி சுத்தம் செய்யும் பணியில் துப்புரவு பணியா ளர்கள் ஈடுபட்டனர்.
இதில் ஆணையர் எழில்ராஜன், இளநிலை பொறியாளர் ரங்கமன்னார், சீனியர் மேற்பார்வையாளர் விக்னேஷ் மற்றும் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
- புதுவை மாநிலத்தில் சென்டாக் மூலமாக மருத்துவக் கல்லூரி சேர்க்கை நடை பெறும்.
- பா.ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பா.ஜனதாவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் சென்டாக் மூலமாக நடை பெறும் மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி அரசு பள்ளிகளில் பயின்ற ஏழை-எளிய மாணவர்க ளின் மருத்துவக் கல்வி கனவை நிறைவேற்றிய பிரதமர் நரேந்திர மோடிக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் புதுச்சேரி பா.ஜனதா கட்சி மாநில தலைவர் சாமிநாதன் தலைமையில் பா.ஜனதாவினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில் மாநிலத் துணைத் தலைவர் செல்வம், மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு அமைப்பாளர் இளங்கோ, உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் பட்டியலணி மாநில தலைவர் தமிழ்மாறன் மகளிர் அணி மாநில தலைவி ஜெயலட்சுமி தொழில் துறை பிரிவு மாநில அமைப்பாளர் ஆசீர்வாத் ரமேஷ், வக்கீல் பிரிவு மாவட்ட இணை அமைப்பாளர் கார்த்தி ராஜகணபதி ராஜபவன் தொகுதி தலை வர் நாகராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பா.ஜனதா நிர்வா கிகள் கலந்து கொண்டனர்.
- லிங்கா ரெட்டிப்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
புதுச்சேரி:
லிங்கா ரெட்டிப்பாளையம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 4 மணி வரை காட்டேரிகுப்பம் ஒரு பகுதி, புது நகர், ராசன்குளம், லட்சுமி நகர், தேத்தாம்பாக்கம், மயிலம் பாதை, உயர் மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
- செவித்திறன் இயல் நிபுணர் ஆர்த்தி மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.
- பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு விளக்கம் கேட்டு பயனடைந்தனர்.
புதுச்சேரி:
விநாயகாமிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலை கழக துணைத்தலைவர் சந்திரசேகர், இயக்குனர் அருணா தேவி ஆலோசனை யின்படி காரைக்கால் விநாயகாமிஷன் மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ், ஒலியியல் மற்றும் பேச்சுமொழி நோயியல் துறையின் சார்பில் கல்லூரி வளாகத்தில் பேச்சு மற்றும் செவித்திறன் நடைப்பெறும் முறை, அதன் வளர்ச்சி, பிரச்சினைகள் மற்றும் சிகிச்சைகள் பற்றி கண்காட்சி நடைபெற்றது.
இந்த கண்காட்சிக்கான ஏற்பாடுகளை இணை பேராசிரியர் ரம்யா, உதவி பேராசிரியர் அருண்குமார், செவித்திறன் இயல் நிபுணர் ஆர்த்தி மற்றும் மாணவர்கள் செய்து இருந்தனர்.
இக்கண்காட்சியினை கான நூற்றுக்கணக்கான கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் பார்வையிட்டு விளக்கம் கேட்டு பயனடைந்தனர்.
- விழிப்புணர்வு இருவார விழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
புதுச்சேரி:
கடந்த 1-ந் தேதி தொடங்கிய இந்தாண்டுக்கான தூய்மை விழிப்புணர்வு இருவார விழா வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.
கடந்த கொரோனா காலங்களில் மக்களி டையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தூய்மை, துப்புரவு, முகக் கவசம் அணிதல் மற்றும் தனி மனித இடைவெளி ஆகியவற்றை வலியுறுத்தியது போல் இந்த ஆண்டும் புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளியானது இவ்விழாவைச் சிறப்பாக கொண்டாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் இணைந்து 'தூய்மை' உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். மேலும் தூய்மை விழிப்புணர்வை ஊட்டும் பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப் பட்டது.
தொடர்ந்து பள்ளியில் பயிலும் 7, 8, 9-ம் வகுப்பு மாணவர்களும், 30 ஆசிரியர்களும், இவர் களுடன் நாட்டு நலப்பணித்திட்ட, தன்னார்வத் தொண்டர்களும் இணைந்து விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.
இப்பேரணி புதுச்சேரி வாணரப்பேட்டையில் அமைந் துள்ள அலேன் வீதி, தாமரைநகர், ஜெயராம் செட்டியார் தோட்டம், அம்பேத்கர் சாலை முதலான பிரதான வீதிகளில் நடைபெற்றது.
இதில் பொதுமக்களிடையே தூய்மை விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிளாஸ்டிக் தவிர்த்தல், மழைநீர் சேகரிப்பு, சுற்றுச்சூழல் பாது காப்பு மற்றும் நீரை சிக் கனமாகப் பயன்படுத்தல் ஆகியவை தொடர்பான முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும் தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி தெருமுனை நாடகமும் நிகழ்த்தப்பட்டது.
- ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கும் பணி
- இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்குட்பட்ட தாமரை நகர், கனிபாய் தோட்டம் மற்றும் திப்புராயப்பேட்டை ஆகிய பகுதிகளில் பாதாள வடிகால் கழிநீர் சாலையில் வெளியேறி துர்நாற்றம் வீசி பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடாக இருந்து வந்தது. இதனை அறிந்த கென்னடி எம்.எல்.ஏ. பொதுப்பணித்துறை இளநிலை பொறியாளர் சங்கரிடம் முறையிட்டார்.
இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் ரூ.78 லட்சம் மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இப்பணியை கென்னடி எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியின் போது தி.மு.க. நிர்வாகிகள் சக்திவேல் , அரிகிருஷ்ணன், ஆரோக்கிய ராஜ், செல்வம், விநாயக மூர்த்தி, ராகேஷ், ஆகியோர் உடனிருந்தனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
இதில் தக்சஷீலா பல்கலைகழகத்தின் வேந்தரும், மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சென்னை டி.சி.எஸ். மண்டல அதிகாரி ஷீத்தல் ரஜனி தலைமை விருந்தினராக கலந்து கொண்டு நவீன தொழில் நுட்பம் பற்றி முழுவதும் புரிந்து கொண்டு, வாழ்வில் வெற்றி பெறுவது குறித்து பேசினார். கல்லூரி இயக்குனரும், முதல்வருமான வெங்கடாஜலபதி கல்லூரியின் சிறப்புகளையும், சாதனை களையும் விளக்கினார். வேலை வாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம் வேல ைவாய்ப்பு
குறித்து எடுத்துரைத்தார். இதில் கல்லூரியின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார், அகாடமிக் டீன்கள் அன்புமலர், அறிவழகர், கல்லூரி ஆராயச்சி துறை டீன் வேல்முருகன், ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் முதல்வர் மனோகரன், கலை அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி, அலைட் ஹெல்த் சயின்ஸ் டீன் கோபால், வேள ாண்மை மற்றும் தோட்டக் கலைத்துறை டீன் முகம்மது யாசின், சட்ட கல்வித்துறை டீன் சந்திரசேகர், பிசியோ தெரபி டீன் சிதம்பரம், பார்மசி டீன் தனலட்சுமி, எஸ்.எம்.வி. பள்ளி முதல்வர் அனிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் கல்லூரிபதிவாளர் அப்பாஸ் மொய்தீன் நன்றி கூறினார்.
- ரூ.1 கோடியே 12 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் உப்பனாறு தெற்கு கரையை வலுப்படுத்துதல் பணி.
- ஓடை குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
புதுச்சேரி:
மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட காக்கையன் தோப்பு, அரியாங்குப்பம் மேற்கு கிராம பஞ்சாயத்துக்களில் ரூ.1 கோடியே 12 லட்சத்து 49 ஆயிரம் மதிப்பீட்டில் உப்பனாறு தெற்கு கரையை வலுப்படுத்துதல், சம்போடை குளத்தை தூர்வாரி ஆழப்படுத்துதல், ஓடை குட்டையை தூர்வாரி ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.
இந்த 100 நாள் திட்டப்பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ., பா.ஜனதா அரியாங்குப்பம் தொகுதி தலைவர் செல்வகுமார், பொதுச்செயலாளர்கள் பிச்சைமுத்து, முருகவேல், மாநில மீனவரணி தலைவர் பழனி, வீராம்பட்டினம் அன்பரசன், ஆர்.கே.நகர் கிளை தலைவர் தியாகராஜன், சீனிவாசன் நகர் கிளை தலைவர் வசந்தி முருகவேல் மற்றும் கலந்து கொண்டனர்.
- கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார்.
- ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
புதுச்சேரி:
தமிழகத்தில் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது.
தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து கோப்பை கவர்னருக்கு அனுப்பியது. அப்போதைய கவர்னர் கிரண்பேடி இந்த கோப்புக்கு அனுமதி தரவில்லை.
கருத்து வேறுபாடு காரணமாக கோப்பை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தார். இதனால் உள் ஒதுக்கீட்டிற்கு அனுமதி கிடைக்கவில்லை. அதோடு இந்த கோப்பும் கிடப்பில் போடப்பட்டது.
புதிதாக பொறுப்பேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு மீண்டும் உள்ஒதுக்கீடு வழங்குவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது.
கடந்த மாதம் கவர்னர் தமிழிசை, அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தேவையான நடவடிக்கை எடுக்கும்படி முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூடி உள்ஒதுக்கீடு வழங்க தீர்மானம் நிறைவேற்றி கவர்னர் ஒப்புதலுக்கு அனுப்பியது. கவர்னர் தமிழிசை ஒப்புதல் வழங்கி மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பினார்.
இதனிடையே நீட் அல்லாத கலை, அறிவியல், தொழில்படிப்புகளுக்கான 2 கட்ட கவுன்சிலிங் முடிவடைந்து, 3-ம் கட்ட கவுன்சிலிங் நடைபெற உள்ளது. பிற மாநிலங்களில் நீட் மதிப்பெண் அடிப்படையிலான மருத்துவ கவுன்சிலிங் நடத்தப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது. மாணவர்களும் கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.
ஆனால் புதுவையில் மருத்துவ கல்விக்கான கவுன்சிலிங் தொடங்கவில்லை. உள் ஒதுக்கீடு அனுமதிக்காக கவுன்சிலிங் தொடங்கப்படாமல் தள்ளி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவக்கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்மூலம் எம்.பி.பி.எஸ். படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 37 இடங்கள் கிடைக்கும். அரசு மருத்துவக்கல்லூரியில் புதுவைக்கு 10, காரைக்காலுக்கு 2, மாகி 1 என 13 இடங்களும், தனியார் மருத்துவ கல்லூரிகளில் பிம்ஸ் 6, மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா கல்லூரிகளில் தலா 9 இடங்களும் கிடைக்கும்.
இதுதவிர பி.டி.எஸ். 11 சீட், பி.ஏ.எம். 4 இடங்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு கிடைக்கும். மருத்துவ கல்விக்கான உத்தேச தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு உள்ஒதுக்கீடு அனுமதி கிடைத்துள்ளதால் அவர்களும் விண்ணப்பிக்க அரசு வாய்ப்பளிக்க வேண்டும்.
இதற்காக இன்று மாலை 5 மணி வரை அரசு பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க சென்டாக் அனுமதி அளித்துள்ளது.
விண்ணப்பிக்காமல் விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம். இதன்பிறகு மீண்டும் இறுதி தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு வெளியிடப்படும். இதன்பிறகு கவுன்சிலிங் நடைபெறும். இதனால் ஓரிருநாளில் மருத்துவ கல்விக்கான சென்டாக் கவுன்சிலிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






