என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து தொகுதியிலும் நவீன உள் விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும்.
    • கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளை யாட்டு வீரர்கள் நலச்சங்கத்தி னர் பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி  ஊர்வலம் நடத்தினர்.

    சுதேசி மில் அருகே தொடங்கிய ஊர்வலத்துக்கு சங்க தலைவர் கராத்தே வளவன் தலைமை வகித்தார். நிர்வாகிகள், விளையாட்டு வீரர்கள் பலர் பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலத்தில் பங்கேற்றனர். ஊர்வலம் முக்கிய வீதிக ளின் வழியாக சட்டசபை நோக்கி வந்தது. அவர்களை ஆம்பூர் சாலையில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கு கோரிக்கைளை வலியுறுத்தி கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    விளையாட்டுத்துறைக்கு தனி இயக்குனரகம் ஏற்படுத்த வேண்டும். இலவச உபகரணங்கள், பஸ்பாஸ், காப்பீடு வழங்க வேண்டும்.

    போதிய மைதான இடவசதி, ஆரோக்கிய உணவு வழங்க வேண்டும். தேசிய போட்டிகளில் பங்கேற்பவர்களுக்க சீருடை வழங்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை, ஓய்வூதியம், ஊக்கத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து தொகுதியிலும் நவீன உள் விளையாட்டரங்கம் அமைக்க வேண்டும்.

    கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்து பிரிவு விளையாட்டுக்கும் சமமான இடஒதுக்கீடு வழங்க வேண்டும். விளையாட்ட வீரர்கள் நல வாரியத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஊர்வலம், ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் ராஜி, செந்தில் வேல், சந்தோஷ்குமார், அசோக்குமார், பிரகதீஷ்வர், ஆறுமுகம், கணேஷ், திருநா வுக்கரசு, அன்பு நிலவன், அழகப்பன், குமரன், சந்தோஷ், சங்கர், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தியேட்டர் உரிமையாளரிடம் பிரச்சினை செய்து விட்டு வெளியே சென்று விட்டனர்.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்வாவை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை திருவள்ளுவர் சாலையில் சினிமா தியேட்டர் உள்ளது. அந்த தியேட்டருக்கு ரோடியர்பேட்டையை சேர்ந்த சதீஷ் மற்றும் விஷ்வா (வயது 20) ஆகியோர் கடந்த 1 வாரத்திற்கு முன்பு சினிமா பார்க்க வந்தனர்.

    படம் பார்த்துவிட்டு செல்லும்போது லிப்டின் கதவை கீறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனை திரையரங்க உரிமையாளர் கண்காணிப்பு கேமராவில் பார்த்துள்ளார்.

    இந்நிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மீண்டும் இருவரும் படம் பார்க்க வந்துள்ளனர். உடனே உரிமையாளர் ஏன் லிப்டின் கதவை கீறிவிட்டு சென்றீர்கள் என கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த இருவரும் தியேட்டர் உரிமையாளரிடம் பிரச்சினை செய்து விட்டு வெளியே சென்று விட்டனர்.

    மீண்டும் சிறிது நேரத்தில் மேலும் சிலருடன் வந்த சதீஷ் மற்றும் விஷ்வா திரையங்க வாசலில் இருந்த விளம்பர பலகைகள், தியேட்டரில் இருந்த பாப்கான் கடை, பில் இயந்திரம் ஆகியவற்ைற அடித்து உடைத்து சூறையாடி விட்டு சென்று விட்டனர்.

    இதுகுறித்த புகாரின் அடிப்படையில் உருளையன்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விஷ்வாவை கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதில் சதீஷ் உள்ளிட்ட சிலர் மீது குற்ற வழக்குகள் இருப்பது குறிப்பிடதக்கது.

    • பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆவேசம்
    • அரசு அதிகாரியின் பணிகளில் தோய்வு மற்றும் தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் தேர்தல் நடப்பது என்பது மக்கள் வரிப்பணம் மற்றும் நேரம் வீணாக்குவதற்கு சமம்.

    புதுச்சேரி:

    புதுவை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஒரே நாடு ஒரே தேர்தல் நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் நன்மை தரக்கூடியது. நாட்டு நளினில் அக்கறை இல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்துமே இந்திய நாட்டுக்கு எதிராக செயல்பட்டு கொண்டு வருகிறது. சுமார் 60 ஆயிரம் கோடி மக்களுடைய வரி பணம் இதன் மூலம் மிச்சப்படுத்துகிறது. காங்கிரஸ் மற்றும் தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்த்து வருகின்றனர்.

    ஒரே நாடு ஒரே தேர்தலை எதிர்க்கும் எதிர்க்கட்சிகள் பா.ஜனதா மீது கூறும் குற்றச்சாட்டுகளால் தொலைநோக்கு பார்வையில் தொடர்ந்து தேர்தல் நடப்பதால் மாணவர்களுடைய படிப்பு, பொதுமக்களுடைய சிரமம், மக்கள் நலத்திட்டங்கள் பாதிப்பு. அரசு அதிகாரியின் பணிகளில் தோய்வு மற்றும் தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் ஆண்டுதோறும் தேர்தல் நடப்பது என்பது மக்கள் வரிப்பணம் மற்றும் நேரம் வீணாக்குவதற்கு சமம்.

    இதை அனைத்து கட்சிகளும் உணர்ந்து ஒரே தேர்தல் ஒரே நாடு என்ற ஆதரிக்க வேண்டும்

    ஆரம்பகாலத்தில் சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல் இரண்டுமே ஒன்றாக நடந்தது அனைவரும் அறிவர். பாரதிய ஜனதா கட்சி எந்த கருத்தை சொன்னாலும் அதை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் மட்டுமே எதிர்க்கட்சிகள் செயல்பட்டு கொண்டுள்ளதை புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நல்ல குடிமக்களை உருவாக்கி சிறந்த தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது.
    • ஆசிரியர் பெருமக்களின் கடமையுணர்வையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதோடு இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் நமது கடமையாகும்.

    புதுச்சேரி:

    நாடுமுழுவதும் நாளை (செவ்வாய்கிழமை) ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கவர்னர் தமிழிசை, முதல்- அமைச்சர் ரங்கசாமி மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    கவர்னர் தமிழிசை:- வளரும் தலை முறையினருக்கு கல்வியையும் ஒழுக்கத்தையும் புகட்டி சிறந்த சமுதாயத்தை உருவாக்க அர்ப் பணிப்போடு பணியாற்று பவர்கள் ஆசிரியர்கள்.

    மாணவர்களின் ஒளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டியாக திகழ்வதோடு நல்ல குடிமக்களை உருவாக்கி சிறந்த தேசத்தை கட்டமைப்பதில் ஆசிரியர்களின் பங்கு மகத்தானது.

    அத்தகைய ஆசிரியர்களுக்கு இந்த நாளில் மரியாதையும் நன்றியும் செலுத்த வேண்டியது நம்முடைய கடமை. சமுதாய முன்னேற்றத்திற்கு பாடுபடும் ஆசிரியர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி:- ஏழ்மையை போக்க உதவுவதோடு மட்டுமல்லாது, சிறந்த குடிமக்களை கொண்ட சமுதாயத்தை கட்டமைக்க உதவும் முக்கிய காரணிகளில் ஒன்றாக கல்வி உள்ளது. அந்த கல்வியை போதிப்பதோடு மட்டுமில்லாமல் ஒழுக்கம், தன்னம்பிக்கை, தலைமைத்துவம் ஆகிய நற் பண்புகளை ஊட்டி மாணவர்களை சிறந்த குடிமக்களாக உருவாக்கித்தரும் உன்னத பொறுப்பை வகிப்பவர்களாக ஆசிரி யர்கள் திகழ்கின்றனர்.

    அவர்களின் பணி அறப்பணிக்கு நிகரானது. ஆசிரியர் பெருமக்களின் கடமையுணர்வையும், அர்ப்பணிப்பையும் போற்றுவதோடு இத்தருணத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதும் நமது கடமையாகும்.

    இளைய சமுதாயத்தை உருவாக்கி தருவதில் முக்கிய பங்காற்று பவர்களாக திகழும் ஆசிரியர் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளம் நிறைந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். .

    • முதல் கால யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. 3-ந் தேதி , 2-ம் காலயாக பூஜை நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே பாக்கம் கிராமத்தில் உள்ள விநாயகர், முருகர், ஊத்து காட்டம்மன் கோயில் கும்பாபிஷேகம்  நடந்தது.

    இதையொட்டி கடந்த 1-ந் தேதி கணபதி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜைகளுடன் தொடங்கியது. 3-ந் தேதி , 2-ம் காலயாக பூஜை நடைபெற்றது.

    இன்று காலை 10 மணிக்கு மேளதாளங்களுடன் யாக சாலையில் இருந்து கலசம் புறப்பட்டு சன்னதியில் உள்ள அனைத்து பரிவார மூர்த்திகள் மற் றும் விமான கோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டது.

    இதில் கண்டமங்கலம் பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருப்பணிக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • மெயின் ரோட்டில் ஒரு வாலிபர் கையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்ததை கண்டனர்.
    • போலீசார் அவனிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை பெரியக்கடை சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார்  ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது கோவிந்தசாலை பாரதிபுரம் மெயின் ரோட்டில் ஒரு வாலிபர் கையில் கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிக்கொண்டிருந்ததை கண்டனர். அவரை பிடித்து விசாரித்தபோது அவர் கோவிந்தசாலை அந்தோனியார் கோவில் வீதியை சேர்ந்த பரத் (வயது 34) என்பது தெரியவந்தது.

    மேலும் ரவுடியான பரத் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து பரத்தை கைது செய்த போலீசார் அவனிடமிருந்து கத்தியை பறிமுதல் செய்தனர்.

    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரியை அப்புறப்ப டுத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை - கடலூர் சாலையில் இன்று காலை கடலூரில் இருந்து புதுவை நோக்கி ஒரு கண்டெய்னர் லாரி வந்தது.

    ரெட்டிச்சாவடியை அடுத்த மலாட்டாறு பாலம் அருகே கண்டெய்னர் லாரி வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கி நின்றது.

    இதில் நடுரோட்டில் சாலையை அடைத்து கொண்டு நின்ற கண்டெய்னர் லாரியால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் காலை நேரத்தில் அந்த வழியாக சென்ற அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், கல்லூரி, பள்ளி மாணவ - மாணவிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

    தகவல் அறிந்தவுடன் ரெட்டிச்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு லாரியை அப்புறப்ப டுத்தினர். பின்னர் அந்த லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 11-ந் தேதி வரை கோரிக்கை அட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்து கின்றனர்.
    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரியும், சம்பளம் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுவை சுகாதாரத்துறை 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணிநிரந்தரம் வழங்க வேண்டும். காலத்தோடு மாத சம்பளம் வழங்க வேண்டும். உதவியாளர் நியமிக்க வேண்டும்.

    மருத்துவ விடுப்பு அளிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை, காரைக்கால், ஏனாம் சங்கத்தினர் பல கட்ட போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று முதல் 11-ந் தேதி வரை கோரிக்கை அட்டை, கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்து கின்றனர்.

    இன்று புதுவை சட்டசபை அருகில் உள்ள சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார்.

    புதுவை அரசு ஓட்டுநர்கள் சங்கம் ரவிச்சந்திரன், சங்க நிர்வாகிகள் முருகன், லூர்துமரியநாதன், பிரபாகரன், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பணிநிரந்தரம் செய்யக்கோரியும், சம்பளம் வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

    வருகிற 11-ந் தேதி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

    • மாணவர் திருக்குறள் அரங்கில், திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
    • கற்பதில் முதன்மை கொள் என்ற பாரதிதாசன் கவிதை வரியாக தலைப்பில் நடந்த கவியரங்கில் 24 பேர் கவிதை வாசித்தனர்.

    புதுச்சேரி:

    பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் நடக்கும் திங்கள் விழா, புதுமைக் கவிஞர் பாரதி என்ற தலைப்பில் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார்.

    கலை பண்பாட்டுத்துறை இயக்குநர் கலியபெருமாள்வாழ்த்துரை வழங்கினார். இந்திய தொழில் கூட்டமைப்பு தென் மண்டல துணை தலைவர் சண்முகானந்தம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கவிஞர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார்.செயலாளர் வள்ளி, கிருஷ்ணகுமார், ரமேஷ் பைரவி, லட்சுமிதேவி முன்னிலை வகித்தனர். மாணவர் திருக்குறள் அரங்கில், திருக்குறள் ஒப்புவித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    ஆசிரியர் தினத்தை முன்னிட்டு, எங்கள் ஆசிரியர் என்ற தலைப்பில் பேராசிரியர் விசாலாட்சி, ஜெயந்தி ராஜவேலு, மீனாட்சி தேவி கணேஷ் உரையாற்றினர். கற்பதில் முதன்மை கொள் என்ற பாரதிதாசன் கவிதை வரியாக தலைப்பில் நடந்த கவியரங்கில் 24 பேர் கவிதை வாசித்தனர். முன்னதாக மதன் வரவேற்றார்.

    முடிவில் கோமதி நன்றி கூறினார்.

    • 12-ந் தேதி தொடங்குகின்றனர்
    • 32 ஆண்டு வரை பணிபுரிந்துள்ள தகுதியா னவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை வேளாண் பட்டதாரி அலுவலர்கள் நலச்சங்க செயலாளர் வினோத் கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வேளாண் துறையில் கண்காணிப்பு பணியி டங்களான வேளாண் துணை இயக்குனர் 14, இணை இயக்குனர் 6, கூடுதல் வேளாண் இயக்குனர் 4 பதவிகள் பல ஆண்டாக காலியாக உளளது. பதவி உயர்வு வழங்க நிர்வாகம் தவறி வருகிறது.

    கீழ்நிலையில் பதவி உயர்வுக்கான தகுதிவாய்ந்த அதிகாரிகள் இருந்தும் பதவி உயர்வு வழங்கவில்லை.

    எனவே இன்று (திங்கள்கிழமை) கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம். நாளை (செவ்வாய்க்கிழமை) அலுவலக நுழைவு வாயிலில் கூட்டமும், 6-ந் தேதி வேலைநிறுத்தம், 7-ந் தேதி ஒட்டுமொத்த விடுப்பு எத்தல், 8-ந் தேதி இயக்குனரகத்தில் ஒரு நாள் உள்ளிருப்பு போராட்டம், 11-ந் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்ப டுகிறது.

    மேலும் 12-ந் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே 32 ஆண்டு வரை பணிபுரிந்துள்ள தகுதியா னவர்களுக்கு உடனடியாக பதவி உயர்வு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

    • கிழக்கு கடற்கரை சாலை மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
    • அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கிழக்கு கடற்கரை சாலை மின்பாதையில் பாராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (செவ்வாய்கிழமை) காலை 10 முதல் மாலை 4 மணி வரை மகாலட்சுமி நகர், வி.பி.சிங் நகர், கோரிமேடு காவலர் குடியிருப்பு ஒரு பகுதி, ஸ்ரீராம் நகர், ராதாகிருஷ்ணன் நகர், ஆனந்தா நகர், கதிர்காமம் ஒரு பகுதி, மீனாட்சிபெட் ஒரு பகுதி, வீமன் நகர் ஒரு பகுதி, அமிர்தா நகர், திலாசுப்பேட்டை, ஞானதியாகு நகர், ராகவேந்திர நகர்,

    பேட்டையான்சித்திரம், திலகர் ஒரு பகுதி, காந்தி நகர் ஒரு பகுதி, கவுண்டன் பாளையம் ஒரு பகுதி, கஸ்தூரிபாய் நகர், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை ஒரு பகுதி, சீனுவாசபுரம் கிருஷ்ணா நகர், பழனிராஜா உடையார் நகர், மகாத்மா நகர், லட்சுமி நகர், சேத்திலால் நகர்,

    மேற்கு கிருஷ்ணா நகர், மடுவுப்பேட், கவிக்குயில் நகர், முத்துரங்கசெட்டி நகர், வினோபா நகர், பிலிஸ் நகர், சுந்தரமூர்த்தி நகர், கொக்குபார்க், அரசு அச்சகம் குடியிருப்பு மற்றும் அதனைச்சார்ந்த பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    • தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்
    • மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க. சார்பில் பொதுக்குழு உறுப்பினர் கோபால் ஏற்பாட்டில்

    எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.

    கடந்த ஜூலை 23-ந் தேதி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா ஒத்தவாடை வீதியில் பரிசு தொகையை வழங்கி தொடங்கி வைத்தார்.தொடர்ந்து தொகுதி முழுவதும் 500–-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகளுக்கு வீடு, வீடாக சென்று பரிசு மற்றும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

    இந்த நிலையில், விடுபட்ட மாணவர்களுக்கு தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொதுக்குழு உறுப்பினர் கோபால் வழங்கினார்.

    நிகழ்ச்சியில், மாநில மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், தொகுதி பொருளாளர் சசிகுமார், கிளைச் செயலாளர் விஜயகுமார், வெங்கட், பில்லா, வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×