என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ஆண் மற்றும் பெண் இரு பாலரும் விளையாடிய கூடிய மிக்சர் பிரிவில் 3-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தார்.
    • மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    புதுச்சேரி, செப்.4-

    புதுச்சேரி இறகுபந்து சங்கத்தின் சார்பில் மேரி பேட்மிட்டன் டிரைனிங் சென்டரில் நடைபெற்ற புதுச்சேரி மாநில அளவிலான தரவரிசை பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது.

    இப்போட்டியில் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி அக்ஷிதா கலந்துகொண்டு 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும், ஒற்றையர் பிரிவில் 2-ம் இடத்தையும், ஆண் மற்றும் பெண் இரு பாலரும் விளையாடிய கூடிய மிக்சர் பிரிவில் 3-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தார்.

    மேலும் இம் மாணவி பெங்களூருவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பேட்மிட்டன் போட்டியில் தேர்வாகி உள்ளார். சாதனை படைத்த மாணவி பள்ளி தாளாளர் டாகடர் ரத்தின ஜனார்தனன் மற்றும் புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

    • தேசிய விளையாட்டு நாள் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது.
    • மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    செல்லிப்பட்டு அரசுப் உயர்நிலைப் பள்ளியில் தேசிய விளையாட்டு நாள் விழா பள்ளி வளாகத்தில் கொண்டாடப்பட்டது. ஆசிரியர் மணிகண்டன் வரவேற்றார். தலைமை யாசிரியர் அனிதா தலைமை தாங்கினார்.

    விழாவில் தேஷ்னா தொண்டு நிறுவனம் சார்பில் அமலா, நந்தகுமார், இளம்பரிதி மற்றும் ரிஷி ஆகியொர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்கள். ஆசிரியை அமலா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியை ஆசிரியர் சாந்தகுமார் தொகுத்து வழங்கினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை ஆசிரியைகள் ராஜேஷ்வரி, மீனா, அமுதா, ஜான்சி, விமலி மற்றும் இளவரசி ஆகியோரும் பள்ளி ஊழியர்களும் செய்திருந்தனர். முடிவில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆசிரியை வசந்தி நன்றி கூறினார்.

    • சாய்ராம் வீட்டில் பேக்கில் வைத்திருந்த 4,800 யூரோ பணம் மாயமாகி இருந்தது.
    • போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை நெல்லித்தோப்பு அண்ணாநகர் 12-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் சாய்ராம் (வயது60). பிரெஞ்சு குடியுரிமை பெற்ற இவர் பிரான்சில் வசித்து வருகிறார்.

    அவ்வப்போது புதுவைக்கு வந்து சொந்த வீட்டில் தங்கி செல்வது வழக்கம்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சாய்ராம் புதுவையில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து வந்தார். வீட்டு வேலைக்காக 2 பெண்களை பணிக்கு அமர்த்தியிருந்தார்.

    இந்நிலையில் சாய்ராம் வீட்டில் பேக்கில் வைத்திருந்த 4,800 யூரோ பணம் மாயமாகி இருந்தது.

    யாரோ அதனை திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து சாய்ராம் உருளையன்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் பாபுஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    மேலும் அங்குள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர். ஆனால் வெளிநபர்கள் யாரும் சாய்ராம் வீட்டுக்குள் வரவில்லை என்பது ஆய்வில் தெரியவந்தது.

    எனவே வீட்டு வேலை செய்யும் பெண்கள் இந்த திருட்டில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதையடுத்து வீட்டு வேலை செய்து வந்த 2 பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • இந்த விபத்தில் லதா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    • காயம் அடைந்த வெங்கட்ரமணி சாலையிலேயே கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறு அருகே நல்லெழுந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணி (வயது 57). இவரது மனைவி லதா (44). வெங்கட்ரமணி தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் இன்று காலை வீட்டிலிருந்து காரைக்கால் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருநள்ளாறு அடுத்த செல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் இருந்து கணவன், மனைவி தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் லதா தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த வெங்கட்ரமணி படுங்காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து விபத்து குறித்து திருநள்ளாறு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். ஆனால் விபத்து நடந்த இடத்திலிருந்து போலீஸ் நிலையம் ஒரு கிலோமீட்டர் தூரம் உள்ளது. தகவல் தெரிவித்து அரை மணி நேரம் கழித்து போலீசாரும், 108 ஆம்புலன்சும் வந்ததால் விபத்தில் உயிரிழந்த லதா, காயம் அடைந்த வெங்கட்ரமணி சாலையிலேயே கிடக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது.

    மேலும் காலதாமதமாக போலீசாரும், ஆம்புலன்சும் வந்தனர். ஆனால் ஆம்புலன்சில் உதவி செவிலியர் இல்லை. டிரைவர் மட்டுமே ஆம்புலன்சில் வந்து உயிருக்கு போராடிய வரை முதல் உதவி எதுவும் செய்யமுடியாமல் காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். விபத்தில் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு போலீசார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து திருநள்ளாறு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிளில் சென்றபோது வாகனம் மோதி பெண் பலியானது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலை முன்னே செல்ல பக்தர்கள் பின் தொடர்ந்து பாத யாத்திரையாக சென்றனர்.
    • பாத யாத்திரை அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவிலை அடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

    புதுச்சேரி:

    விநாயகருக்கு உகந்த நாளாக ஒவ்வொரு மாத மும் சங்கடஹர சதுர்த்தி நிகழ்ச்சி நடைபெறும். ஆவணி மாதத்தில் நடை பெறும் சங்கடஹர சதுர்த்தி மிக சிறப்பு வாய்ந்ததாகும்.

    இதனை மகா சங்கடஹர சதுர்த்தி என அழைப்பது உண்டு. இந்த மகா சங்கடஹர சதுர்த்தியன்று ஒவ்வொரு ஆண்டும் புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவில் வரை பக்தர்கள் பாத யாத்திரை செல்வது வழக்கம்.

    அதுபோல் இன்று மகா சங்கடஹர சதுர்த்தியை யொட்டி புதுவை மணக்குள விநாயகர் கோவிலில் இருந்து அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவிலுக்கு பக்தர்கள் பாத யாத்திரை சென்றனர்.

    அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் விநாயகர் சிலை முன்னே செல்ல பக்தர்கள் பின் தொடர்ந்து பாத யாத்திரையாக சென்றனர்.

    இந்த பாத யாத்திரை நிகழ்ச்சியை முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. ஜெயமூர்த்தியின் மனைவி விஜயலட்சுமி ஜெயமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த பாத யாத்திரையில் 700-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். பாத யாத்திரை அரியாங்குப்பம் மணக்குள விநாயகர் கோவிலை அடைந்ததும் அங்கு சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

    இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • காரைக்கால் தொடக்க பள்ளி ஆசிரியர்கள் முடிவு
    • ஆசிரியர் தினத்தன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என முடிவு எடுத்துள்ளோம்.

    புதுச்சேரி:

    புதுவை யூனியன் பிரதேச ஆசிரியர் காரைக்கால் சங்க தலைவர் ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வின் போது காரைக்கால் பகுதியை ஏ.பி. என பிரிக்காமல் ஒரே பகுதியாக கொண்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கலந்தாய்வின்போது காரைக்கால் பகுதியில் பணி மூப்பு அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும்.

    கருப்பு பேட்ஜ் அணிந்து...

    காரைக்கால் பகுதி தொடக்கப் பள்ளிகளில் வகுப்புக்கு ஓர் ஆசிரியர் வீதம் நியமனம் செய்ய வேண்டும்.பணி நிரவல் என்ற பெயரில் காரைக்கால் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்களை குறைக்க கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட நிலையில் கோரிக்கை கடிதம், போராட்டங்கள் நடத்தியும் கல்வித்துறை செவிசாய்க்க வில்லை.

    எனவே ஆசிரியர் தினத்தன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றுவது என முடிவு எடுத்துள்ளோம்.

    அதேபோல் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் நாள் அன்று தொடக்கப்பள்ளி ஆசிரியர் அனைவரும் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து கலந் தாய்வை புறக் கணித்தும், காரைக்கால் ஆசிரியர் கூட்டமைப்புடன் இணைந்து காரைக்கால் முதன்மை கல்வி அதிகாரி அலுவ லகத்தை முற்றுகை யிடவும் முடிவு எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும்.
    • மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கூட்டம் நடத்தினர். கூட்டத்தின் முடிவில், மீன்பிடி துறைமுகத்தின் விரிவாக்கத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகையை கொண்டு உடனடியாக மீன்பிடி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். மீன்பிடி துறை முகத்தின் முகத்துவாரத்தை உடனே தூர்வார வேண்டும். மீனவர்கள் இட ஒதுக்கீட்டில் எம்.பி.சி -யில் இருந்து இ.பி.சி -க்கு மாற்றியதை மீண்டும் எம்.பி.சி -க்கு மாற்ற வேண்டும். டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். மீனவர்களின் தடைக்கால நிதி, படகு பழுது பார்க்கும் நிதியை இரட்டிப்பாக்கவேண்டும்.

    மேற்கண்ட கோரிக்கை களை வலியுறுத்தி, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 11 மீனவ கிராமங்க ளைச் சேர்ந்த மீனவர்களும் வருகின்ற 18-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது, மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது என முடிவு செய்து, புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை மனுவை அனுப்பியுள்ளனர்.

    • படுகாயமடைந்த பிரதாப் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து சாரதியை தேடி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை ஆம்பூர் சாலையில் பிளாட்பார பகுதியில் வசித்து வருபவர் அமுதா. இவரது மகன் பிரதாப்(வயது20). இவருக்கும் புதுவை ஆட்டுப்பட்டியை சேர்ந்த சாரதி என்பவருக்கும் ஏற்கனவே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

    இந்த நிலையில் பிரதாப் செட்டி தெருவில் உள்ள அரசு நிதி உதவி பெரும் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சாரதி பிரதாப்பிடம் தகராறு செய்தார்.

    பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரதாப்பின் கையில் குத்தி விட்டு தப்பியோடி விட்டார்.

    இதில் படுகாயமடைந்த பிரதாப் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் பட்டார்.

    இதுகுறித்து பிரதாப்பின் தாயார் அமுதா பெரியக்கடை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சாரதியை தேடி வருகிறார்கள்.

    • ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.
    • மின்சார தடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் திருபுவனை அமைந்துள்ளது. இப்பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

    மேலும் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 8 மணி முதல் திடீரென மின்சாரம் தடைபட்டது. வெகு நேரம் ஆகியும் மின் இணைப்பு வழங்க வில்லை. இது குறித்து மின்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் தொடர்பு கொண்ட போது எவ்வித பதிலும் அளிக்க வில்லை.

    இன்று அதிகாலை 4 மணி வரை மின்சாரம் வழங்கப்பட வில்லை. இந்த அறிவிக்கப்பட்டாத மின்சார தடையால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் அவதியடைந்தனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் வயது முதிர்ந்த முதியோர்களும் அவதிக்குள்ளாகினர்.

    • மாணவர் சேர்க்கைக்கு பதிவு கட்டணம் செலுத்தி பாட விருப்பங்களை சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
    • புதிய சீட்டு ஒதுக்கப்பட்டால் முதல் சுற்றில் அனுமதிக்கப்பட்ட சீட்டு தானாகவே ரத்தாகிவிடும்.

    புதுச்சேரி:

    புதுவை சென்டாக் கூடுதல் ஒருங்கிணை ப்பாளர் அமன்சர்மா வெளி யிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான 2-ம் சுற்று மாணவர் சேர்க்கைக்கு பதிவு கட்டணம் செலுத்தி பாட விருப்பங்களை சமர்ப்பி க்குமாறு அறிவுறுத்த ப்படுகிறார்கள். முதல் சுற்று கலந்தாய்வில் சீட்டு ஒதுக்கப்பட்ட கல்லூரியில் சேர்ந்த மற்றும் சேராத மாணவர்கள் அனைவரும் 2-வது சுற்று கலந்தாய்வில் பங்கேற்க தகுதி உடையவர்கள் நீட் அடிப்படையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கு முதல் சுற்று கலந்தாய்வு மூலம் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் பட்டியல் மற்றும் காலியிட விவரம் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 2-வது சுற்று கலந்தாய்வில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பங்கேற்க பொது பிரிவு ரூ.25 ஆயிரம், ஓபிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி, இடபிள்யூஎஸ், இபிசி, பிசிஎம், பிடி ஆகிய பிரிவினர் ரூ 12 ஆயிரத்து 500-ம், நிர்வாக இடங்களில் பங்கேற்க அனைத்து தரப்பினரும் ரூ.2 லட்சம் பதிவு கட்டணமாக செலுத்த வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆன்லைன் மூலமே பதிவு கட்டணத்தை செலுத்த வேண்டும். பதிவு கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மட்டுமே 2-வது சுற்று கலந்தாய்வுக்கு பரிசீலிக்கப்படுவார்கள். முதல் சுற்று மூலம் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் 2-வது சுற்று கலந்தாய்வில் பதிவு கட்டணம் செலுத்தாமல் பங்கேற்கலாம்.

    2-வது சுற்று கலந்தாய்வில் சீட்டு ஒதுக்கப்படாத மாணவர்களுக்கு பதிவு கட்டணம் திரும்பி தரப்படும் சீட்டு ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு மட்டுமே பதிவு கட்டணம் தக்க வைக்கப்படும். கல்வி கட்டணம் செலுத்தும்போது பதிவு கட்டணத்தை தவிர்த்து விட்டு மீதமுள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும்.

    2-வது சுற்றில் இடம் ஒதுக்கப்பட்டு கல்லூரியில் சேராத மாணவர்கள் பதிவு கட்டணம் பறிமுதல் செய்யப்படும். மேலும் 2-வது சுற்று கலந்தாய்வு பாட விருப்பத்தேர்வு அடிப்படையில் புதிய சீட்டு ஒதுக்கப்பட்டால் முதல் சுற்றில் அனுமதிக்கப்பட்ட சீட்டு தானாகவே ரத்தாகிவிடும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் முதல் கட்ட கலந்தாய்வு முடிவில் முதுநிலை மருத்துவ படிப்பில் காலியாக உள்ள இடங்கள் குறித்த விபரம் வருமாறு:-

    இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி 20, பிம்ஸ் 27 மணக்குள விநாயகர் 40 வெங்கடே ஸ்வரா 43 என அரசு ஒதுக்கீட்டில் மொத்தம் 130 இடங்களும், பிம்ஸ் 28, மணக்குள விநாயகர் 60, வெங்கடேஸ்வரா 60 என நிர்வாக ஒதுக்கீட்டில் மொத்தம் 148 இடங்களும் காலியாக உள்ளது.

    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் சக்திவேல் மது பழக்கத்தை கைவிடவில்லை.
    • போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    பாகூர் அருகே அரங்கனூர் பாலாஜிநகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மகன் சக்திவேல் (வயது37). கூலி தொழிலாளி.

    இவரது மனைவி அஸ்வினி. கருத்து வேறுபாடு காரணமாக அஸ்வினி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். அது முதல் சக்திவேல் குடி பழக்கத்துக்கு ஆளானார்.

    மனைவி பிரிந்து சென்ற வேதனையில் அவர் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார்.

    இதனால் அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் சக்திவேல் மது பழக்கத்தை கைவிடவில்லை.

    இந்த நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள மதுக்கடைக்கு சக்திவேல் மது குடிக்க சென்றார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி சாய்ந்தார். அங்கிருந்தவர்கள் அவருக்கு தண்ணீர் கொடுக்க முயன்றனர்.

    ஆனால் சக்திவேல் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து அவரது தந்தை சுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
    • ஆபாச வார்த்தை களால் பேசி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார்.

    புதுச்சேரி:

    சூரமங்கலம் பேட் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ்(34), மணிகண்டன்(29), மற்றொரு மணிகண்டன்(31) ஆகிய 3 பேரும் சூரமங்கலம் மணி நகர் அருகே நின்று கொண்டு ரகளை செய்து கொண்டி ருந்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதுபோல் புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நேற்று மாலை ஒரு வாலிபர் நின்றுக் கொண்டு ஆபாச வார்த்தை களால் பேசி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த பெரியகடை போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ்(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    ×