என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பொது இடத்தில் ரகளை செய்த 3 பேர் கைது
- போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
- ஆபாச வார்த்தை களால் பேசி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார்.
புதுச்சேரி:
சூரமங்கலம் பேட் பகுதியை சேர்ந்தவர்கள் சந்தோஷ்(34), மணிகண்டன்(29), மற்றொரு மணிகண்டன்(31) ஆகிய 3 பேரும் சூரமங்கலம் மணி நகர் அருகே நின்று கொண்டு ரகளை செய்து கொண்டி ருந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் மடுகரை புறக்காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இதுபோல் புதுவை கடற்கரை சாலை காந்தி சிலை அருகே நேற்று மாலை ஒரு வாலிபர் நின்றுக் கொண்டு ஆபாச வார்த்தை களால் பேசி பொதுமக்களுக்கு இடையூறாக ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த பெரியகடை போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் சென்னை பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த பிரகாஷ்(35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
Next Story






