என் மலர்
புதுச்சேரி

புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோரை மாணவி நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற காட்சி.
முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளி மாணவி சாதனை
- ஆண் மற்றும் பெண் இரு பாலரும் விளையாடிய கூடிய மிக்சர் பிரிவில் 3-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தார்.
- மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
புதுச்சேரி, செப்.4-
புதுச்சேரி இறகுபந்து சங்கத்தின் சார்பில் மேரி பேட்மிட்டன் டிரைனிங் சென்டரில் நடைபெற்ற புதுச்சேரி மாநில அளவிலான தரவரிசை பேட்மிட்டன் போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவி அக்ஷிதா கலந்துகொண்டு 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட இரட்டையர் பிரிவில் முதலிடத்தையும், ஒற்றையர் பிரிவில் 2-ம் இடத்தையும், ஆண் மற்றும் பெண் இரு பாலரும் விளையாடிய கூடிய மிக்சர் பிரிவில் 3-ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்தார்.
மேலும் இம் மாணவி பெங்களூருவில் நடைபெற உள்ள தேசிய அளவிலான பேட்மிட்டன் போட்டியில் தேர்வாகி உள்ளார். சாதனை படைத்த மாணவி பள்ளி தாளாளர் டாகடர் ரத்தின ஜனார்தனன் மற்றும் புதுச்சேரி மாநில கோஜூரியோ கராத்தே சங்க மாநில செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.






