என் மலர்
புதுச்சேரி
- சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாய்த்தகராறு முற்றியது.
- போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனிமொழி (வயது30). இவருக்கும் மரக்காணம் அருகே செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த மதன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
திருமணம் முடிந்து 6 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். கனிமொழி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் உறவினர்கள் தலையிட்டு இருவரும் சமாதானம் பேசி குடும்பம் நடத்துமாறு அறிவுரை கூறியதின் பேரில் மதன் தனது அண்ணன் குணசேகர், உறவினர் நாகராஜ் மற்றும் நண்பர் ஆனந்த் ஆகியோருடன் மாமியார் வீட்டுக்கு சமாதானம் பேச வந்தார்.
அவர்களை கனிமொழி யின் தாய் லட்சுமி அன்போடு வரவேற்றார். சமாதானம் பேசிக்கொண்டிருந்த போது சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாய்த்தகராறு முற்றியது.
இதில் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்ட னர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே திருபுவனை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உப்பளம்பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
- பள்ளி துணை முதல் வர் ஜான்பால் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி பெத்தி செமினார் மேல்நிலைப் பள்ளி யில் 2023-24 கல்வி ஆண் டிற்கான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட் டன. இதில் மாணவர்கள் ஆர்வமாக பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா உப்பளம்பெத்தி செமினார் தொடக்கப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி முதல்வர் தேவ தாஸ்தலைமை தாங்கினார். போலீஸ் சூப்பிரண்டு வம்சீதரா ரெட்டி, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும் விழாவில், ஆசிரியர்க ளுக்கு பல்வேறு போட்டி கள் நடத்தி பரிசு வழங்கப் பட்டது.
பள்ளி துணை முதல் வர் ஜான்பால் நன்றி கூறினார்.
- அ.தி.மு.க.வலியுறுத்தல்
- சென்டாக் கவுன்சிலை நடத்த கவர்னர், முதல்-அமைச்சரும் இணைந்து முடிவெடுத்து அதிகார பூர்வமான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மத்திய அரசின் முடிவை எடப்பாடி பழனிச்சாமியை பின்பற்றி புதுவை மாநில அ.தி.மு.க.வும் வரவேற்கிறது.
மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்க ளுக்கு 10 சதவீதம் உள் ஒதுக்கீடு சம்பந்தமாக முதல்-அமைச்சரும், கவர்னரும் 2 மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க இன்னும் சுமார் 40 தினங்கள் உள்ள நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கு மத்திய அரசின் அனுமதியை பெற்று சென்டாக் கவுன்சிலை நடத்த கவர்னர், முதல்-அமைச்சரும் இணைந்து முடிவெடுத்து அதிகார பூர்வமான அறிவிப்பினை வெளியிட வேண்டும்.
அகில இந்திய அளவில் காங்கிரஸ், தி.மு.க., கம்யூனிஸ்ட்டு, உள்ளிட்ட தேசிய அளவிலான 20-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து 3-வது கூட்டத்தை கூட்டியு ள்ளனர். இந்த கூட்டம் அரசியல் லாபத்திற்காக மட்டுமே கூட்டப்பட்டது. இதில் இந்தியா வளர்ச்சி குறித்து எதுவும் பேசப்பட வில்லை.
எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் பாராளு மன்ற தேர்தலில் வெற்றி பெறும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார். பேட்டியின் போது மாநில அவைத்தலைவர் அன்பானந்தம், மாநில இணைச்செயலாளர் திரு நாவுக்கரசு, பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர் நாகமணி, புதுச்சேரி நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
- விவசாய தொழிலாளர் சங்கம் தீர்மானம்
- கூட்டத்தில் கிராம சங்க நிர்வாகிகள் ஏம்பலம் தொகுதி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை விவசாய தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் கரிக்கலாம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு ஏகாம்பரம் தலைமை வகித்தார். ஜி.சுகுணா, எம்.சுகுணா முன்னிலை வகித்தனர்.
வேலை அறிக்கையை நாகராஜ் சமர்பித்தார். சங்கத்தின் தேசிய துணைத்தலைவர் ராம மூர்த்தி, பொதுச்செயலாளர் விஜயபாலன், இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தொகுதி செயலாளர் பெருமாள், மாநில தலைவர் ராஜா, பாகூர் தொகுதி நாராயணன் ஆகியோர் உரையாற்றினர்.
கூட்டத்தில் கிராம சங்க நிர்வாகிகள் ஏம்பலம் தொகுதி விவசாய தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
100 நாள் வேலை திட்டத்தை ஆண்டுதோறும் வழங்கி, நாள் கூலியாக ரூ.600 வழங்க வேண்டும். விவசாய தொழிலாளர் நல வாரியத்தை செயல்படுத்தி நலத்திட்டங்கள் வழங்க வேண்டும். பணியில் இறக்கும் தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
ரேஷன்கடைகளை திறந்து அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் வழங்க வேண்டும். நத்தமேடு கிராமத்துக்கு இலவச மனைப்பட்டா வழங்க வேண்டும். ஏம்பலத்தில் நவீன திருமண மண்டபம் கட்ட வேண்டும். தார்சாலை அமைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அதிகாரிகள் 2 பேர் கொடுக்கும் தகவல்கள் படி மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை காமாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான சுமார் ரூ.50 கோடி மதிப்புள்ள நிலம் போலி பத்திரங்கள் மூலம் அபகரிக்கப்பட் டது.
இது தொடர்பாக புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து சார்பதிவாளர் சிவசாமி உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த மோசடிக்கு நில அளவை மற்றும் பத்திரப்பதிவேடுகள் துறை இயக்குனர் ரமேஷ் (வயது 53), அப்போதைய செட்டில் மெண்ட் அதிகாரியாக இருந்த மீன்வளத்துறை இயக்குனர் பாலாஜி ஆகியோருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாக அவர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் சூப்பிரண்டு மோகன்குமார் தலைமையிலான போலீசார் கடந்த 30-ந் தேதி சென்னை கோயம்பேட்டில் பதுங்கி இருந்த மீன் வளத்துறை இயக்குனர் பாலாஜியை கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாக இருந்த ரமேசை தேடி வந்தனர். இதற்கிடையே ரமேஷ் நேற்று மாலை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக 2 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
அதிகாரிகள் 2 பேர் கொடுக்கும் தகவல்கள் படி மேலும் சிலர் இந்த வழக்கில் சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- புதுவை சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
- வாகனங்களில் அதிவேகமாக வருபவர்களை கண்டுபிடிக்க அதிநவீன 4 ஸ்பீடுகன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன.
புதுச்சேரி:
புதுவையில் வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களால் விபத்துகள் பெருகி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறியதாவது:-
புதுவை சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் வாகனங்களை ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட உள்ளது. அதாவது மோட்டார் சைக்கிள்கள், கார்களுக்கு ரூ.1,000-மும், வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கு ரூ.2 ஆயிரமும், பந்தயங்களில் ஈடுபட்டால் ரூ.5 ஆயிரமும் அபராதம் விதிக்கப்படும். இதற்காக புதுவை சாலைகளில் எவ்வளவு வேகத்தில் வாகனங்களை இயக்கவேண்டும் என்று முன்பே அறிவிப்புகள் வெளியிடப்பட்டு உள்ளன.
புதுவை கடற்கரை சாலை பகுதியில் மணிக்கு 20 கி.மீ. வேகத்திலும், டவுண் பகுதியில் சர்தார் வல்லபாய் படேல் சாலை, சுப்பையா சாலை, அண்ணா சாலை, கடலூர் சாலை (வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை முதல் அரியாங்குப்பம் பாலம் வரை), கடற்கரை சாலை முதல் வில்லியனூர் ஆரிய பாளையம் பாலம் வரை, காமராஜர் சாலை , ராஜீவ்காந்தி சிலை முதல் பாண்லே வரை மரப்பாலம் சந்திப்பு முதல் முத்தியால்பேட்டை மார்க்கெட் வரை 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.
அரியாங்குப்பம் பாலம் முதல் முள்ளோடை சந்திப்பு வரை, ஆரிய பாளையம் பாலம் முதல் மதகடிப்பட்டு எல்லை வரை, முத்தியால்பேட்டை மார்க்கெட் முதல் கனகசெட்டிகுளம் எல்லை வரை, 50 கி.மீ. வேகம் வரை இயக்கலாம். அதே நேரத்தில் இந்த பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், குடியிருப்பு பகுதிகள், மார்க்கெட் பகுதிகளில் 30 கி.மீ. வேகத்திலேயே வாகனங்களை இயக்க வேண்டும்.
வாகனங்களில் அதிவேகமாக வருபவர்களை கண்டுபிடிக்க அதிநவீன 4 ஸ்பீடுகன் கருவிகள் வாங்கப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்துவது குறித்து போக்குவரத்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இவ்வாறு போலீஸ் சூப்பிரண்டு மாறன் கூறினார்.
- வங்கி புத்தகத்தை தாய்மார்களிடம் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
- புதுவையில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநிலத்தில் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் ரூ. 50 ஆயிரம் வங்கி கணக்கில் வைப்பு தொகையாக டெப்பாசிட் செய்யப்படும் என கடந்த சட்டமன்ற பட்ஜெட் கூட்ட தொடரில் மார்ச் 17-ந் தேதி முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.
அன்றைய தினத்திலும் அதற்கு பின்பும் பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் கீழ் ரூ.50 ஆயிரம் டெபாசிட் செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். இந்த திட்டத்தின் தொடக்க விழா திலாசுபேட்டையில் உள்ள முதல்-அமைச்சர் இல்லத்தில் நடந்தது.
அமைச்சர்தேனீ.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். முதல்- அமைச்சர் ரங்கசாமி பெண் குழந்தைகளின் தாய்மார்களி டம் ரூ.50 ஆயிரம் டெப்பாசிட் செய்த வங்கி புத்தகத்தை வழங்கினார்.
திட்டம் அறிவிக்கப்பட்ட மார்ச் 17-ந் தேதி மற்றும் அதன் பிறகும் பிறந்த 38 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ 19 லட்சம் டெப்பாசிட் செய்யப்பட்டு வங்கி புத்தகம் வழங்ப்பட்டது.
அதேபோல் புதுவையில் ஏழை குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தட்டாஞ்சாவடி மற்றும் மங்களம் தொகுதியை சேர்ந்த 1 ஆயிரத்து 600 பயனாளிகளுக்கு அதற்கான அடையாள அட்டையையும் முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
ஏற்கனவே 13 ஆயிரம் பெண்கள் இந்த திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள் ளனர். தற்போது புதிதாக 55 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கான அடையாள அட்டை எம்.எம்.ஏ.க்கள் மூலம் அந்தந்த தொகுதியில் வழங்கப்பட உள்ளது.
- நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது
- பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ் அணிவித்தும், வெள்ளியில் பேனா வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பிறந்த நாளை முன்னிட்டு உருளையன் பேட்டை தொகுதியில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மோடி மக்கள் சேவை மையத்தின் நிறுவனர் பிரபு தாஸ் ஏற்பாட்டில் நடந்த விழாவில் பங்கேற்க வந்த அமைச்சர் நமச்சிவாயத்திற்கு பட்டாசு வெடித்தும் மலர் தூவியும் பா.ஜனதாவினர் வரவேற்பு அளித்தனர்.
நிகழ்ச்சிக்கு தொகுதி தலைவி பத்மாவதி என்ற நாகம்மாள் முன்னிலை வகித்தார். அமைச்சர் நமச்சிவாயம் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டா டினார். அவருக்கு ஆளுயர மாலை மற்றும் மலர்களால் ஆன கிரீடத்தை பா.ஜனதா பிரமுகர் பிரபுதாஸ் அணிவித்தும், வெள்ளியில் பேனா வழங்கியும் வாழ்த்து தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து உருளையன்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 300 பெண்க ளுக்கு புடவைக ளையும் அமைச்சர் நமச்சி வாயம் மற்றும் பிரபுதாஸ் ஆகியோர் வழங்கினர்.
விழாவில் மாநில சிறப்பு அழைப்பாளர் சாம்ராஜ், மாநில செயற்குழு உறுப்பி னர்கள் முன்னாள் கவுன்சிலர் ராஜன், ஜெயபிரகாஷ் நாராயணன், மாநில மகளிர் அணி பொரு ளாளர் தேன்மொழி, மாநில பிரச்சார பிரிவு இணை அமைப் பாளர் கிரிஜா, நகர மாவட்ட ஓ.பி.சி. அணி தலைவி லட்சுமி, நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் திருவெற்றிவேல், நகர மாவட்ட ஓ.பி.சி. அணி பொதுச் செயலாளர் கீதா, தொகுதி முன்னாள் தலைவர் சக்திவேல், தொகுதி பொதுச் செயலாளர்கள் மதன் ராஜேந்திரன், தொகுதி துணை தலைவர் பாபு, பொரு ளாளர் பாலமுருகன், செயற்குழு உறுப்பினர்கள் அப்பு, பிரவீன், ஆகாஷ், பிரிவு நிர்வாகிகள் முருகன், ராஜா, நெல்லித்தோப்பு தொகுதி தலைவர் உமாபதி, ஓ.பி.சி. நிர்வாகி முகுந்தன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் ஆலோசனைக் கூட்டத்தில் புகார்
- சாராயம் மற்றும் மதுக்கடையில் இருந்து இலவசமாக ஆட்டோகளில் மது பிரியர்களை அழைத்து வந்து ஏற்றி செல்கின்றனர்.
புதுச்சேரி:
தெற்குப் பகுதி சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் இன்று நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கணேசன், இனியன், சப்- இன்ஸ்பெக் டர்கள் முருகானந்தம், திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் முதலி யார் பேட்டை, அரியாங் குப்பம், தவளக்குப்பம், பாகூர், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆட்டோ சங்க தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் பேசும்போது, புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள சாராயம் மற்றும் மதுக்கடையில் இருந்து இலவசமாக ஆட்டோகளில் மது பிரியர்களை அழைத்து வந்து ஏற்றி செல்கின்றனர்.
இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
இந்த இலவச ஆட்டோவை தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா பழக்கத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க ஆட்டோ ஊழியர்கள் உறுதுணையாக இருப்போம்.
ஆட்டோ தொழிலாளர்களை போலீசார் அலட்சியப்படுத்தக் கூடாது. தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு வரும் ஆட்டோக்கள் உள்ளூர் சவாரியையும் ஏற்றி செல்கிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. புதுச்சேரி ஆட்டோக்கள் தமிழக பகுதிக்குள் சென்று வர புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தினர்.
போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் பேசும்போது, குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது போலீஸ் கடமையாக இருந்தாலும், அதற்கு உறுதுணையாக ஆட்டோ தொழிலாளர்களும் இருந்தால் மேலும் பல குற்றங்களை குறைக்க முடியும்.
எந்த தகவல் கிடைத்தாலும் உடனடியாக நம்பகத்தன்மை உள்ள போலீசார் அல்லது அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். தகவலை பாதுகாப்பாக வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கொடுத்தவரின் விபரம் பாதுகாக்கப்படும் என உறுதியுடன் தெரிவித்தார்.
- கொம்யூன் ஆணையர் தொடங்கி வைத்தர்
- அரியாங்குப்பம் கம்யூன் பஞ்சாயத்து பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவுண்டன் பாளையம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம் ,ஏரி ,இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 9-வது வாரமாக அரியாங்குப்பம் மனவெளியில் உள்ள கன்னி அம்மன் கோவில் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் கலந்துகொண்டு தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தார்.
இதில் ஒன்றரை டன் அளவிற்கு பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி கழிவுகள் அகற்றப்பட்டன. இதில் 50 நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கலந்து கொண்டார்கள். புதுச்சேரி மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வழிநடத்தினார்.
இளநிலை பொறியாளர் அகிலன் மற்றும் குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்திகேயன் அரியாங்குப்பம் கம்யூன் பஞ்சாயத்து பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மைப்படுத்தும் மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
பள்ளியின் ஆசிரியர் விரிவுரையாளர் நெடுஞ்செழியன் , உடன் இருந்தார்.
நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவுரையாளர் ஜெயந்தி செய்திருந்தார்.
- உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு
- நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே உள்ள நவமாள்மருதூரில் கடலூர் செல்லங் குப்பத்தை சேர்ந்த சுப்பையா என்பவரின் மனைவி சியாமளா (வயது 44). கழிவு நீர் கலந்த நீரை குடித்து விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கடந்த 28-ந் தேதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அங்கு அவருக்கு உயரிய சிகிச்சை அளிக்கப்பட வில்லை என உறவினர்கள் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில் 2 முறை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை 9.45 மணி அளவில் சியாமளா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இருந்தார். இதனை எடுத்து சியாமளாவின் உறவினர்கள் உரிய சிகிச்சை அளிக்காததால் சியாமளா இறந்து விட்டார் என்றும் அதற்கு நீதி கிடைக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
கழிவு நீர் கலந்த நீரை குடித்து பெண் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- அமைச்சர் சந்திரபிரியங்கா தொடங்கி வைத்தார்
- மாணவர்களுக்கு பயிற்சி தொடர்பான கையேடுகளை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.
புதுச்சேரி:
மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் தேசியக் கல்வி வழிகாட்டுதல் சேவை மையம் மற்றும் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து கம்ப்யூட்டர் சாப்ட்வேர் பயிற்சி வகுப்பு தொடக்க விழா நிகழ்ச்சி நடந்தது.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து, தொழிலாளர் நலன் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் சந்திரபிரியங்கா குத்துவிளக்கேற்றி பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பயிற்சியில் பங்கேற்ற மாணவர்களுக்கு பயிற்சி தொடர்பான கையேடுகளை அமைச்சர் சந்திரபிரியங்கா வழங்கினார்.
இதில் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன்,
என்.சி.எஸ்.சி. ஒருங்கி ணைப்பாளர் கோட்டூர்சாமி, கல்லூரியின் முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.






