என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சமாதானம் பேச வந்த இடத்தில் இரு தரப்பினர் மோதல்
    X

    கோப்பு படம்.

    சமாதானம் பேச வந்த இடத்தில் இரு தரப்பினர் மோதல்

    • சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாய்த்தகராறு முற்றியது.
    • போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    திருபுவனை அருகே மதகடிப்பட்டு பகுதியை சேர்ந்தவர் கனிமொழி (வயது30). இவருக்கும் மரக்காணம் அருகே செட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த மதன் என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    திருமணம் முடிந்து 6 மாதத்தில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். கனிமொழி தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் உறவினர்கள் தலையிட்டு இருவரும் சமாதானம் பேசி குடும்பம் நடத்துமாறு அறிவுரை கூறியதின் பேரில் மதன் தனது அண்ணன் குணசேகர், உறவினர் நாகராஜ் மற்றும் நண்பர் ஆனந்த் ஆகியோருடன் மாமியார் வீட்டுக்கு சமாதானம் பேச வந்தார்.

    அவர்களை கனிமொழி யின் தாய் லட்சுமி அன்போடு வரவேற்றார். சமாதானம் பேசிக்கொண்டிருந்த போது சிறிது நேரத்தில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வாய்த்தகராறு முற்றியது.

    இதில் இருதரப்பினரும் மாறி மாறி தாக்கி கொண்ட னர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே திருபுவனை போலீசில் புகார் செய்தனர். போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×