என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மதுப்பிரியர்களை இலவச ஆட்டோவில்  அழைத்துச் செல்வதை தடுக்க வேண்டும்
    X

    போலீசார்-ஆட்டோ டிரைவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்ற காட்சி.

    மதுப்பிரியர்களை இலவச ஆட்டோவில் அழைத்துச் செல்வதை தடுக்க வேண்டும்

    • போலீசார் ஆலோசனைக் கூட்டத்தில் புகார்
    • சாராயம் மற்றும் மதுக்கடையில் இருந்து இலவசமாக ஆட்டோகளில் மது பிரியர்களை அழைத்து வந்து ஏற்றி செல்கின்றனர்.

    புதுச்சேரி:

    தெற்குப் பகுதி சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் ஆட்டோ தொழிலாளர்கள் ஆலோசனை கூட்டம் அரியாங்குப்பத்தில் உள்ள தனியார் திருமண மண்ட பத்தில் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமை தாங்கினார். இன்ஸ்பெக்டர்கள் கலைச்செல்வன், கணேசன், இனியன், சப்- இன்ஸ்பெக் டர்கள் முருகானந்தம், திருமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்த கூட்டத்தில் முதலி யார் பேட்டை, அரியாங் குப்பம், தவளக்குப்பம், பாகூர், கிருமாம்பாக்கம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆட்டோ சங்க தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இந்தக் கூட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் பேசும்போது, புதுச்சேரி எல்லைப் பகுதியில் உள்ள சாராயம் மற்றும் மதுக்கடையில் இருந்து இலவசமாக ஆட்டோகளில் மது பிரியர்களை அழைத்து வந்து ஏற்றி செல்கின்றனர்.

    இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.

    இந்த இலவச ஆட்டோவை தடுத்து நிறுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சா பழக்கத்தால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தடுக்க ஆட்டோ ஊழியர்கள் உறுதுணையாக இருப்போம்.

    ஆட்டோ தொழிலாளர்களை போலீசார் அலட்சியப்படுத்தக் கூடாது. தமிழக பகுதியில் இருந்து புதுச்சேரிக்கு வரும் ஆட்டோக்கள் உள்ளூர் சவாரியையும் ஏற்றி செல்கிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. புதுச்சேரி ஆட்டோக்கள் தமிழக பகுதிக்குள் சென்று வர புதுச்சேரி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆட்டோ டிரைவர்கள் வலியுறுத்தினர்.

    போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் பேசும்போது, குற்ற சம்பவங்களை தடுக்க வேண்டியது போலீஸ் கடமையாக இருந்தாலும், அதற்கு உறுதுணையாக ஆட்டோ தொழிலாளர்களும் இருந்தால் மேலும் பல குற்றங்களை குறைக்க முடியும்.

    எந்த தகவல் கிடைத்தாலும் உடனடியாக நம்பகத்தன்மை உள்ள போலீசார் அல்லது அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். தகவலை பாதுகாப்பாக வைத்து நடவடிக்கை எடுக்கப்படும். தகவல் கொடுத்தவரின் விபரம் பாதுகாக்கப்படும் என உறுதியுடன் தெரிவித்தார்.

    Next Story
    ×