என் மலர்
புதுச்சேரி
- முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் உறுதி
- கட்சியை மீட்டெடுக்க தனது புரட்சி பயணத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்க உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தொண்டர்களுக்காக தொண்டர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. ஒரு குடும்ப ஆதிக்கத்தில் இருந்து கட்சியை மீட்டார்
எம்.ஜி.ஆர். அவரைத் தொடர்ந்து தமிழக மக்களை காத்திட தீய சக்தியின் குடும்ப ஆதிக்கத்திலிருந்து ஜெயலலிதா கட்சியை இரும்புக்கோட்டையாக மாற்றினார்.
சோதனைக்காலத்தில் ராஜ விசுவாசியாக ஓ.பன்னீர்செல்வம், ஜெய லலிதாவால் அடையாளப் படுத்தப்பட்டார். அரியாசனத்தை எந்த வித பதிலும் இல்லாமல் மீண்டும் ஒப்படைத்த ஒரே தலைவர் அவர். சில சுய நல சக்திகள் அவர் கட்சியில் நீடித்தால் தொண்டர்களின் ஆதரவை பெற்று விடுவாரோ என பயந்து, கட்சியை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.
இதனை தடுக்க தொண்டர்களின் ஆதர வோடு கட்சியை மீட்கும் மிகப்பெரிய போரை தொடங்கியுள்ளார்.
திருச்சி மாநாடு மூலம் தொண்டர்கள் செல்வாக்கு தனக்கு இருப்பதை நிரூபித்துள்ளார். இப்போது கட்சியை மீட்டெடுக்க தனது புரட்சி பயணத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்க உள்ளார்.
அவரின் இந்த புரட்சிப்பயணம் வெற்றிப் பயணமாக அமையும். அவர் தனது முயற்சியில் வெற்றி பெறுவார். இந்த புரட்சிப் பயணத்தில் புதுவை மாநிலம் என்றென்றும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- போலீஸ் நிலையத்தில் பணியின் போது போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீஸ்காரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி நெட்டப்பாக்கம் அருகே மொளப்பாக்கத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது42). இவர் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற போலீஸ்காரர்கள் அரிகிருஷ்ணனை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அரிகிருஷ்ணன் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அரிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார்.
பணிச்சுமை காரணமாக அரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சனையில் இந்த முடிவை மேற்கொண்டாரா? என்பது உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையத்தில் பணியின் போது போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீஸ்காரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- மாதவனை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும், அமைச்சர் அனுராக் தாகூருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
- சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
இந்தியத் திரையுலகின் முன்னணி நடிகர் மாதவன், தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவராகவும், நிர்வாக குழுவின் தலைவராகவும் நியமிக்கப்பட்டதற்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாதவனை தலைவராக நியமனம் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கும் மத்திய தகவல் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சர் அனுராக் தாகூருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்.
திரைத்துறையில் மாதவனுக்கு இருக்கும் பரந்துபட்ட அனுபவம் தேசிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு வளமை சேர்த்து ஆராக்கியமான வளர்ச்சியை கொண்டு வரும் என்றும் இந்த நிறுவனத்தை மிக உயர்ந்த நிலைக்கு இட்டுச் செல்லும் என்றும் நம்புகிறேன்.
மாதவன் இயக்கி நடித்த "ராக்கெட்ரி-த நம்பி எஃபெக்ட்" திரைப்படம் 2021-ம் ஆண்டுக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதினைப் பெற்றிருப்பதற்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை செய்திகுறிப்பில் கூறியுள்ளார்.
- மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்று சிறப்புரையாற்றினார்.
- சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
புதுச்சேரி:
புதுவை அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் ஆத்மா திட்டத்தின் மூலம் மதகடிப்பட்டு பண்ணைத்தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் நீர் நிர்வாகம், நீர் சிக்கனம், நீர் மூழ்கி மோட்டார் மற்றும் ஆழ்துளை கிணறு பராமரிப்பு பற்றிய பயிற்சி முகாம் நடைபெற்றது.
இம்முகாமில் மதகடிப்பட்டு வேளாண் அலுவலர் நடராஜன் வரவேற்று சிறப்புரையாற்றினார்.
முன்னதாக ஆத்மா திட்ட துணை இயக்குனர் கலைச்செல்வி தலைமை தாங்கி ஆத்மா திட்டம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விளக்கினார்.
பொறியியல் மற்றும் நிலத்தடி நீர் பிரிவு துணை இயக்குனர் பிரபாகரன் நீர் சிக்கனம் மற்றும் நீர் சேமிப்பு பற்றி விரிவாக விளக்கினார் .
வேளாண் அதிகாரி ஜீவா ஆழ்குழாய் கிணறு பராமரிப்பு ,சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மதகடிப்பட்டு, வாதானூர்,திருவாண்டார் கோவில் , கலிதீர்த்தாள் குப்பம்,திருபுவனை,சன்னியாசிக்குப்பம் ஆகிய வருவாய் கிராமங்களை சேர்நத விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அறிவிப்பு
- புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பில் பிரச்சார இயக்கம் தொடங்கியது.
புதுச்சேரி:
மத்திய பா.ஜனதா, மாநில என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பில் பிரச்சார இயக்கம் தொடங்கியது.
மார்க்சிஸ்ட்டு கம்யூனி ஸ்ட்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பிரச்சாரத்தை மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரச்சாரத்தின் போது மத்திய, மாநில அரசுகளால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு குறித்து பொது மக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சார இயக்கம் வருகிற 6-ந் தேதி வரை புதுவையின் பல்வேறு இடங்களில் நடத்தப்படு கிறது. தொடர்ந்து 7-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட்டு கட்சி அறிவித்துள்ளது.
- சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை
- 5-ஜி சேவைகளை இயக்கவும், சிம்கார்டை மேம்படுத்தவும் டெலிகாம் நிறுவனங்களின் ஓ.டி.பி. நம்பரை கேட்பதில்லை.
புதுச்சேரி:
புதுவையில் ஆன்லைனில் மோசடி செய்யும் கும்பலிடம் ஏமாறுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது 5-ஜி சேவைகளை மேம்படுத்துதல் என்ற பெயரில் ஆன்லைன் மோசடிகள் நடைபெறுவதாக சைபர் கிரைம் போலீசார் எச் சரித்துள்ளனர். 5-ஜி சேவைகளை இயக்கவும், சிம்கார்டை மேம்படுத்தவும் டெலிகாம் நிறுவனங்களின் ஓ.டி.பி. நம்பரை கேட்பதில்லை.
ஆனால் ஏமாற்று பேர்வழிகள் டெலிகாம் நிறுவனங்களில் பேசுவதாக கூறி ஓ.டி.பி. பின் நம்பரை பெற்று மோசடி நடத்த தொடங்கியுள்ளனர்.
எனவே தனிப்பட்ட விபரங்களை யாருடனும் பகிர வேண்டாம். 5-ஜி சேவை மேம்பாடு மோசடி குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
- ஆசிரியைகள் அனைவரும் ஒருங்கிணைந்து திருவாதிரை பாடலுக்கு நடனம் ஆடினார்கள்.
- மாவலிச் சக்கரவர்த்தியின் ஆளுயர ஓவியம் வரையப்பட்டி ருந்தது.அதைக் கொண்டு புராணக்கதையும் எடுத்துச் சொல்லப்பட்டது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம்.வி. பள்ளியில் ஓணம் பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தக்ஷஷீலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்ட ளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
எஸ். எம். வி. பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து வரவேற்புரை ஆற்றினார்.
மேலும் பள்ளியின் வளாகத்தில் அத்தப்பூக்கோலம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சியில் ஆசிரியைகள் அனைவரும் ஒருங்கிணைந்து திருவாதிரை பாடலுக்கு நடனம் ஆடினார்கள். மாணவர்கள் ஓணம் பண்டிகையின் சிறப்புகள் பற்றி கூறினர்.
மாவலிச் சக்கரவர்த்தியின் ஆளுயர ஓவியம் வரையப்பட்டி ருந்தது.அதைக் கொண்டு புராணக்கதையும் எடுத்துச் சொல்லப்பட்டது.
நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் உன்னியப்பம் இனிப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் துணை முதல்வர், நிர்வாக அலுவலர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.
- தமிழர்களின் வரலாறு, திருக்குறளின் நெறிமுறைகள் என்னும் தலைப்பில் பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.
- முடிவில் பொருளாளர் சத் தியநாதன் நன்றி கூறினார்.
புதுச்சேரி:
மொரிசீயஸ் நாட்டில் உள்ள மகாத்மா காந்தி பல்கலைக்கழகத்தின் முகப்பில், 2,470 கிலோ எடையுள்ள திருவள்ளுவர் சிலையை புதுவை தமிழ்ச்சங்கத் தலை வர் வி.முத்து நிறுவி, மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கலந்துரை யாடல் நடந்தது.
பல்கலைக் கழக துணைவேந்தர் ராம்பிரதாப், தமிழ்த்துறை தலைவர் ஜீவேந்திர சீமான், இந்திய மொழிகளின் இயக்குநர் அப்பாடு, இயக்குனர் குன்சால் மேனாள், தமிழ்த்துறை தலைவர் கதிர்வேல் சொர் ணம், 200 தமிழ் கோவில்களின் கூட்டமைப்பு தலைவர் குமரன் செங்கான் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று தமிழ் மொழி, மொரிசீயத் தில் தமிழர் வரலாறு
தொடர்பான பல கருத்துக்களை வழங்கி உரையாற்றினார்கள். முடிவில் வி.முத்து பண்டைத் தமிழர்களின் வரலாறு, திருக்குறளின்
நெறிமுறைகள் என்னும் தலைப்பில் பல்வேறு கருத்துக்களை வழங்கினார்.
மொரிசீயஸ் நாட்டின் மேனாள் குடியரசுத் துணைத் தலைவர் பாலன் வையாபுரி பிள்ளை தமிழ்க்கழகம் மற்றும் தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் குருநாத வைத்திலிங்கம், செயலாளர் லேசினி முனிசாமி, துணைத்தலைவர்கள் பொண்ணுசாமி, கமலநாதன் , வைத்திலிங்கம், பொண்ணையன், ஸ்ரீவீரராகு, ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். முடிவில் பொருளாளர் சத் தியநாதன் நன்றி கூறினார்.
- பணிச்சுமை காரணமாக அரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா?
- தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீஸ்காரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி நெட்டப் பாக்கம் அருகே மொளப் பாக்கத்தை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன்(வயது42). இவர் திருக்கனூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்கா ரராக பணிபுரிந்து வந்தார்.
சம்பவத்தன்று இவர் போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்தார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மற்ற போலீஸ்காரர்கள் அரிகிருஷ்ணனை மீட்டு மண்ணாடிப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத் துக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோ தித்த போது அரிகிருஷ்ணன் விஷம் குடித்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு அரிகிருஷ்ணன் பரிதாபமாக இறந்து போனார்.
பணிச்சுமை காரணமாக அரிகிருஷ்ணன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது குடும்ப பிரச்சினையில் இந்த முடிவை மேற்கொண்டாரா? என்பது உடனடியாக தெரியவில்லை.
இதுகுறித்து திருக்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் நிலையத்தில் பணியின் போது போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சக போலீஸ்காரர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- அமைச்சர் லட்சுமி நாராயணன் தலைமையில் நடந்தது
- ஆரோவில் அருகே அமைத்தால் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் தங்கி செல்ல வசதியாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
புதுச்சேரி:
ஜி-20 தலைமை பொறுப்பேற்றுள்ள இந்தியா உலகம் ஒரே குடும்பம் என்ற உணர்வில் பல்வேறு உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை மேம்படுத்தும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
சென்னை ஐ.ஐ.டி. கடந்த ஜனவரியில் கல்வியில் டிஜிட்டல் தொழில்நுட்ப பங்கு என்ற தலைப்பில் கருத்தரங்கு நடத்தியது. இதில் அனைத்து உறுப்பினர்களின் சமமான பங்குடன் ஐ.ஐ.டி மூலம் ஆராய்ச்சி பூங்கா நிறுவ முடிவு செய்யப்பட்டது. இந்த தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி பூங்காவை சர்வதேச நகரமான ஆரோவில் அருகே அமைத்தால் சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் தங்கி செல்ல வசதியாக இருக்கும் என கருத்து தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்தரவின்பேரில் ஐ.ஐ.டி அதிகாரிகளுடன் புதுவை அமைச்சர் லட்சுமி நாராயணன், தொழில்துறை இயக்குனர் ருத்ரகவுடு, தகவல் தொழில்நுட்பத்துறை இயக்குனர் மோகன்குமார் ஆகியோர் முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர். 2026-க்குள் அமைய திட்டமிடப்பட்டுள்ள சர்வதேச தொழில் பூங்காவில் உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனரங்கம், ஆராய்ச்சியாளர்கள் தங்கள் நிறுவனத்தை அமைப்பர்.
உலகின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையம் அமைப்பதன் மூலம் புதுவையில் பொருளாதார வளர்ச்சியும், வேலை வாய்ப்பும் பெருகும் வாய்ப்பு உள்ளது. ஆராய்ச்சி பூங்கா அமைக்க 100 ஏக்கர் நிலம் தேவை என சென்னை ஐ.ஐ.டி. தெரிவித்துள்ளது. புதுவை கரசூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இந்த ஆராய்ச்சி பூங்கா அமைக்க புதுவை அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான அனுமதியை வழங்குவது குறித்தும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
- துணைவேந்தர் குர்மீத்சிங் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நூலகர் விஜயகுமார் வரவேற்றார்.
- நிர்வாக பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழக ஆனந்தரங்கப்பிள்ளை நூலகத்தில் ஜி-20 நாடுகளின் கொடி கண்காட்சி நடந்தது.
துணைவேந்தர் குர்மீத்சிங் கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார். நூலகர் விஜயகுமார் வரவேற்றார்.
கண்காட்சியில் ஜி-20 நாட்களின் தேசிய கொடிகள் மட்டுமின்றி, அவற்றின் தனித்துவமான வடிவமைப்புகள், வரலாற்று முக்கியத்துவம், கலாசாரம் குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் பல்கலைக்கழக இயக்குனர் ராஜீவ்ஜெயின், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஆராய்ச்சி அறிஞர்கள் பலர் கலந்துகொண்டனர்.
- புதுவை பல்கலைக்கழக கணினி துறை இணைபேராசிரியர் சுஜாதா தகவல்களை பெறுவது எப்படி என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.
- கருத்தரங்கில் இதயா மகளிர் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவிகள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை சாரதா கங்காதரன் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு செயலாக்கத்தில் வளர்ந்துவரும் போக்குகள் என்ற தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை கல்லூரி துணைத்தலைவர் பழனிராஜா தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் உதயசூரியன் செயற்கை நுண்ணறிவின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் 2 தொழில்நுட்ப அமர்வுகள் நடத்தப்பட்டன. உதவி பேராசிரியை அமுதா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினார். மலேசியா செஜி பல்கலைக்கழகத்தின் தகவல் தொடர்பு பாதுகாப்பு ஆராய்ச்சி மையத்தின் தலைவர் ராஜ்மோகன் செயற்கை நுண்ணறிவின் இன்றியமையாததன்மை குறித்து செயல்விளக்கங்களுடன் தெளிவுபடுத்தினார். புதுவை பல்கலைக்கழக கணினி துறை இணைபேராசிரியர் சுஜாதா தகவல்களை பெறுவது எப்படி என்பதை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.
கருத்தரங்கில் இதயா மகளிர் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரிகளை சேர்ந்த 70 மாணவிகள் கலந்துகொண்டனர்.
அவர்களில் 15 பேர் பல்வேறு தலைப்புகளில் கட்டுரைகளை சமர்ப்பித்தனர். இதில் இதயா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இறுதி ஆண்டு பி.சி.ஏ. மாணவி மோனிகா முதல் பரிசையும், பாரதிதாசன் மகளிர் கல்லுரி பி.எஸ்சி. இறுதி ஆண்டு மாணவி மோக்ஷா 2-வது பரிசையும் பெற்றனர்.






