என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
சுயநல சக்திகளிடம் இருந்து அ.தி.மு.க.வை ஒ.பி.எஸ். மீட்பார்
- முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் உறுதி
- கட்சியை மீட்டெடுக்க தனது புரட்சி பயணத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்க உள்ளார்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தொண்டர்களுக்காக தொண்டர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. ஒரு குடும்ப ஆதிக்கத்தில் இருந்து கட்சியை மீட்டார்
எம்.ஜி.ஆர். அவரைத் தொடர்ந்து தமிழக மக்களை காத்திட தீய சக்தியின் குடும்ப ஆதிக்கத்திலிருந்து ஜெயலலிதா கட்சியை இரும்புக்கோட்டையாக மாற்றினார்.
சோதனைக்காலத்தில் ராஜ விசுவாசியாக ஓ.பன்னீர்செல்வம், ஜெய லலிதாவால் அடையாளப் படுத்தப்பட்டார். அரியாசனத்தை எந்த வித பதிலும் இல்லாமல் மீண்டும் ஒப்படைத்த ஒரே தலைவர் அவர். சில சுய நல சக்திகள் அவர் கட்சியில் நீடித்தால் தொண்டர்களின் ஆதரவை பெற்று விடுவாரோ என பயந்து, கட்சியை அபகரிக்க தொடங்கி உள்ளனர்.
இதனை தடுக்க தொண்டர்களின் ஆதர வோடு கட்சியை மீட்கும் மிகப்பெரிய போரை தொடங்கியுள்ளார்.
திருச்சி மாநாடு மூலம் தொண்டர்கள் செல்வாக்கு தனக்கு இருப்பதை நிரூபித்துள்ளார். இப்போது கட்சியை மீட்டெடுக்க தனது புரட்சி பயணத்தை பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்க உள்ளார்.
அவரின் இந்த புரட்சிப்பயணம் வெற்றிப் பயணமாக அமையும். அவர் தனது முயற்சியில் வெற்றி பெறுவார். இந்த புரட்சிப் பயணத்தில் புதுவை மாநிலம் என்றென்றும் துணை நிற்கும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






