என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
விலைவாசி உயர்வை கண்டித்து 7-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம்
- மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு அறிவிப்பு
- புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பில் பிரச்சார இயக்கம் தொடங்கியது.
புதுச்சேரி:
மத்திய பா.ஜனதா, மாநில என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு சார்பில் நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பில் பிரச்சார இயக்கம் தொடங்கியது.
மார்க்சிஸ்ட்டு கம்யூனி ஸ்ட்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். பிரச்சாரத்தை மாநில செயற்குழு உறுப்பினர் பெருமாள் தொடங்கி வைத்தார். மாநில செயலாளர் ராஜாங்கம், மாநில செயற்குழு உறுப்பினர்கள் சீனிவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பிரச்சாரத்தின் போது மத்திய, மாநில அரசுகளால் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு குறித்து பொது மக்களிடையே துண்டு பிரசுரம் வழங்கி பிரச்சாரம் செய்தனர். இந்த பிரச்சார இயக்கம் வருகிற 6-ந் தேதி வரை புதுவையின் பல்வேறு இடங்களில் நடத்தப்படு கிறது. தொடர்ந்து 7-ந் தேதி ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட்டு கட்சி அறிவித்துள்ளது.






