என் மலர்
புதுச்சேரி
- கண்டமங்கலம் அருகே போக்குவரத்து பாதிப்பு
- போதிய சிகிச்சை அளிக்கப்படா ததால் தற்பொழுது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே உள்ள நவமாள்மருதூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் வாந்தி-பேதி ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷியாமளா (வயது 40) ஜமுனா (50) பிரகதி (7) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படா ததால் தற்பொழுது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த நவம்மாள் மருதூர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மாரிமுத்துவின் தலைமையில் கண்டமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை உடனடியாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத் தங்கம் மற்றும் போலீ சார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட வர்க ளுக்கு இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- கணவர் மீது மனைவி போலீசில் புகார்
- மழை விட்டதும் கொண்டு வந்து விடுவதாக பூம்பொழில் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினம் காமன்கோவில் தெருவைச்சேர்ந்தவர் பூம்பொழில் (வயது 37). இவருக்கும், சீர்காழி தென்பாதியைச்சேர்ந்த சிவா (40) என்பவருக்கும், கடந்த 2011-ல் திருமணம் ஆனது. இவர்களுக்கு நித்திக் சூரியா(12), பிரணவ் சூரியா(4) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், கணவன் மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதனால், பூம்பொழில் தனது தந்தை ஊமைத்துரை, தாய் அமுதா ஆகியோருடன் தனியே வசித்து வருகிறார். கணவர் சிவா, திரு.பட்டினம் வரதராஜப்பெருமாள் கோவில் தெருவில் 2 குழந்தைகளுடன் தனியே வசித்து வருகிறார். இந்நிலையில், பூம்பொழிலுக்கு கடந்த 29-ந் தேதி பிறந்தநாள் வந்ததால், 2 மகன்களையும் தனது வீட்டில் கொண்டு வந்து விடும்படி, கணவர் சிவாவிடம் பூம்பொழில் கேட்டுள்ளார்.
அதன்படி, மதியம் பள்ளி விட்டதும், இளைய மகன் பிரணவ் சூரியாவை சிவா பூம்பொழில் வீட்டில் கொண்டு சென்று விட்டுள்ளார். மாலை மூத்த மகனுடன் சென்ற சிவா, இளைய மகனை அனுப்பும்படி கூறியுள்ளார். அப்போது மழை பெய்ததாலும், இளைய மகன் தன்னை விட்டு செல்ல மறுத்ததாலும், மழை விட்டதும் கொண்டு வந்து விடுவதாக பூம்பொழில் கூறியுள்ளார்.இதனால் கோபம் அடைந்த சிவா, வீட்டுக்குள் நுழைந்து, பூம்பொழிலை தகாதவார்த்தைகளால் திட்டி, அடித்து கீழே தள்ளியுள்ளார். தடுக்க வந்த மாமனார், மாமியாரையும் சிவா தாக்கி விட்டு, 2 மகன்களுடன் தனது வீட்டுக்கு சென்று விட்டார்.
இதில் காயம் அடைந்த பூம்பொழில் மற்றும் அவரது தாய், தந்தை ஆகியோர் திரு.பட்டினம் அரசு ஆரம் சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு, அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், திரு.பட்டினம் போலீசார், சிவா மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- கோவாவில் கட்டப்பட்டுள்ள புதிய சட்டமன்ற வளாகத்தை பார்வையிட்டு அதில் உள்ள வசதிகளை பார்வையிட சென்றிருப்பதாக அவர் கூறினார்.
- கோவா பயணத்தை முடித்து கொண்டு எம்.எல்.ஏ. புதுவை திரும்புகின்றனர்.
புதுச்சேரி:
கோவா மாநிலத்திற்கு என்ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா, தி.மு.க, காங்கிரஸ் என கட்சி வித்தியாசமின்றி புதுவை எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் 2 நாள் அரசு முறை பயணமாக சென்றனர்.
கோவா சட்டமன்றத்தை நேற்றைய தினம் அவர்கள் சுற்றிப்பார்த்தனர். பின்னர் கோவா கவர்னர், முதல்-அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து பேசினர். இன்றும் அவர்கள் கோவாவில் முகாமிட்டு பார்வையிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதுவை எம்.எல்.ஏ.க்கள் கோவா பயணத்தை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. விமர்சித்திருந்தார். அப்போது எம்.எல்.ஏ.க்கள், கோவாவில் சூதாட்ட கிளப்புகளை பார்வையிட சென்றி ருப்பதாக கூறியிருந்தார்.
இதற்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். கோவாவில் கட்டப் பட்டுள்ள புதிய சட்டமன்ற வளாகத்தை பார்வையிட்டு அதில் உள்ள வசதிகளை பார்வையிட சென்றி ருப்பதாக அவர் கூறினார்.
இதனிடையே கோவாவுக்கு சென்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நிகழ்ச்சிகளை புறக்கணித்தனர்.
நேற்றைய தினம் கவர்னர், முதல்- அமைச்சர் சந்திப்பில் அவர்கள் பங்கேற்கவில்லை. புதுவை எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் ஒட்டுமொத்தமாக வைத்திலிங்கம் எம்.பி விமர்சித்திருப்பது
எம்.எல்.ஏ.க்களிடையே அதிருப்தியையும், ஆதங்கத்தையும் ஏற்ப டுத்தியுள்ளது. இதனால் ஆரம்பத்தில் கோவா பயணத்தில் பெயர் கொடுத்த எம்.எல்.ஏ.க்கள் சிலர் அந்த பயணத்தை வைத்திலிங்கம் விமர்சனத்தால் தவிர்த்தனர்.
கோவா பயணத்தை முடித்து கொண்டு எம்.எல்.ஏ. புதுவை திரும்புகின்றனர்.
- வையாபுரி மணிகண்டன் எதிர்ப்பு
- ஆட்சியாளர்கள் இந்த திட்டத்திலும் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
ஏழை எளிய நடுத்தர மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று கவர்னர், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று புதுவை அரசு, மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோப்பு தயாரித்து கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் இதற்கான ஒப்புதல் வழங்க முன்வந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்ற உயர்ந்தநோக்கத்தோடு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படுகிறது.
இதனிடையே ஆட்சியாளர்கள் இந்த திட்டத்திலும் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளது.
லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் அதிகாரிகள், லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் வியாபாரிகளின் குழந்தைகள் படிக்கும் மத்திய அரசின் கேந்திர வித்யாலாயா பள்ளி மாணவர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர்.
இந்த சதி எந்த நோக்கத்திற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தையே சிதைப்பதாக அமையும்.
புதுவை மாநில அரசு வழங்கும் 10 சதவீத மருத்துவக்கல்வி இடஒதுக்கீடு ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வசதியில்லாத மண்ணின் மைந்தர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- பல்கலைக்கழக சட்டத்தின் படி பல்கலைக்கழகம் ஆரம்பித்த உடனே அதற்கான ஆட்சி மன்றக்குழுவை கவர்னர் அமைத்திருக்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுவை தொழில்நுட்பப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பணிகளை புறக்கணித்து அடையாள உண்ணாவிரதம் இருந்திருப்பது வருத்தத்திற்குரியது. அவர்களை இந்த நிலைக்கு தள்ளியது புதுவை அரசுதான்.
இந்தப் பல்கலைக்கழகம் புதுவையின் முதல் பல்கலைக்கழகம். இதை கண்ணும் கருத்தோடும் வளர்த்து ஒரு தரமான பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டியது அரசின் தலையாய கடமை. பல்கலைக்கழகமாக மாற்றிய பிறகும் அதை ஒரு கல்லூரியாகவே நடத்துவது முறையற்ற செயலாகும். பல்கலைக்கழக சட்டத்தின் படி பல்கலைக்கழகம் ஆரம்பித்த உடனே அதற்கான ஆட்சி மன்றக்குழுவை கவர்னர் அமைத்திருக்க வேண்டும்.
3 ½ ஆண்டுக்கு பிறகும் ஆட்சி மன்றக்குழுவை நியமிக்காதது அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறிய ஒரு செயல். ஆட்சிமன்ற குழு இல்லாமல் பல்கலைக்கழகம் ஒரு கல்லூரியாகத்தான் திகழும். எந்த வளர்ச்சியும் ஏற்படாது. தொழில்நுட்பக் கல்வியின் தரம் உயராது. அதனால்தான் தேசிய தரவரிசையில் கல்லூரியாக இருந்தபோது 34-வது இடத்தில் இருந்த நிறுவனம், பல்கலைக்கழகமாக மாறிய பிறகு 200-வது வரிசைக்கு கீழே தள்ளப்பட்டுள்ளது.
முதல் தர பல்கலைக்கழகமாக மாற்ற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்தான் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தங்களது போராட்டங்களை கையில் எடுத்துள்ளனர். இதை உணர்ந்து புதுவை அரசு பல்கலைக்கழகத்திற்கு ஒரு நல்ல திறமையான அனுபவம் வாய்ந்த பதிவாளரை நியமிப்பதோடு, ஆட்சிமன்றக் குழுவையும் உடனடியாக துணைவேந்தர் தலைமையில் நியமித்து ஆணை பிறப்பிக்க வேண்டும்.
தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தை சரியான பாதையில் செயல்படுத்த வைக்க வேண்டியது கவர்னர், முதல்-அமைச்சரின் கடமை.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- உழவர்கரை நகராட்சி எச்சரிக்கை
- காலி மனை உரிமையாளர்கள் தங்கள் மனைகளை சுத்தம் செய்து தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும்.
புதுச்சேரி:
உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உழவர்கரை நகராட்சி யின் பல பகுதிகளில் காலி மனைகள் உரிமை யாளர்களால் பராமரிக் கப்படவில்லை. இதனால் புதர் மண்டி விஷ பூச்சி, தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி அருகில் வசிப்பவர்களுக்கு அச்சுறுத்தல், சுகாதார கேடு விளைவிக்கிறது.
பாதாள சாக்கடை வசதி இருந்தும், இணைப்பு தராமல் பல வீடுகளின் கழிவுநீர் திறந்தவெளி கால்வாயில் விடப்படுவதால் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது.
டெங்கு, மலேரியா போன்ற நோய் தொற்று பரவும் அபாயமும் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி காலி மனை உரிமையாளர்கள் தங்கள் மனைகளை சுத்தம் செய்து தண்ணீர் தேங்காமல் பாதுகாக்க வேண்டும்.
கழிவுநீரை பாதாள சாக்கடையில் இணைக்க வேண்டும். தவறினால் சுற்றுப்புற சீர்கேடு தடுப்பு நடவடிக்கையின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டன.
- நாளையும் வக்கீல்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை வக்கீல்கள் சங்கத்தினர் இன்று கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுவை வக்கீல்கள் சங்க தலைவர் குமரன் தலைமையில் பொதுச்செயலாளர் கதிர்வேல், இணை செயலாளர்கள் சம்பத், திருமலை, ராஜன், பொருளாளர் லட்சுமிநாராயணன் முன்னிலையில் வக்கீல்கள் கோர்ட்டு பணிகளில் ஈடுபடாமல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பால் பணிகள் பாதிக்கப்பட்டன. வழக்குகள் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டன.
மத்திய அரசு புதிய சட்டங்களின் பெயர்களை அந்தந்த மாநில மொழியிலும், பொது மொழியான ஆங்கிலத்திலும் தாக்கல் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்த கோர்ட்டு புறக்கணிப்பு நடந்தது.நாளையும் வக்கீல்கள் இக்கோரிக்கையை வலியுறுத்தி கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
- 38-வது கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
- விழிப்புணர்வு பதாகைகளை எடுத்துச் சென்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்ட நலவழித்துறை சார்பில், காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 38-வது கண் தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, நிலைய டாக்டர் அரவிந்த் தலைமை தாங்கினார். செவிலிய அதிகாரி ஜெகதீஷ் அனைவரையும் வரவேற்றார். சித்த மருத்துவர் மலர்விழி, திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் ஞான பிரகாசி, சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் ஆகியோர் முன்னில வகித்தனர். தொடர்ந்து, மருத்துவ அதிகாரி அரவிந்த் விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
விழிப்புணர் பேரணியில் கலந்து கொண்ட அம்பகரத்தூர் திருவள்ளுவர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கண்தானத்தை ஊக்குவிக்கும் விதமாக பார்வை இழந்தோர் பார்த்து மகிழ கண்களை தானம் செய்யுங்கள் என்று தங்கள் கண்களை கருப்பு ரிப்பன்னால் கட்டிக்கொண்டு பார்வையற்றவர்கள் நடப்பது போல் நடந்து விழிப்புணர்வு பதாகைகளை எடுத்துச் சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராமப்புற செவிலியர் பரமேஸ்வரி, விவேதா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சி இறுதியில் கண்தான விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.. முடிவில் பள்ளி தமிழ் ஆசிரியர் வெங்கடேஷ் நன்றி கூறினார்.
- மாணவிகளை இரட்டை அர்த்தத்தில் பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
- அவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை முத்தியால் பேட்டை-சின்னையாபுரம் சந்திப்பில் நேற்று மாலை ஒருவாலிபர் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை இரட்டை அர்த்தத்தில் பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
அப்போது ரோந்துவந்த முத்தியால் பேட்டை போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் முத்தியால் பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 39) என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
- மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் ரமேஷ் அறிவுரை
- வசந்தகாலத்தில் பூக்கள் மலரும், வண்டுகள், பட்டாம்பூச்சி, தும்பிகள் சிறகை விரித்து பறக்கும்.
புதுச்சேரி:
இந்திராநகரில் உள்ள இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் ராமன் அறிவியல் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், டெலஸ்கோப் வடிவமைத்தல் கருத்தரங்கம், சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல் மாற்றம் குறித்த நிகழ்ச்சிகள் நடந்தது.
பள்ளி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் சிறப்பாக டெலஸ்கோப் வடிவமைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-
புதுவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் கையில் உள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களால் ஏற்படுத்த முடியும். தற்போது வசந்தகாலத்தில் பூக்கள் மலரும், வண்டுகள், பட்டாம்பூச்சி, தும்பிகள் சிறகை விரித்து பறக்கும். கடந்த காலத்தை போல சுற்றுச்சூழல் தற்போது இல்லை.
பச்சைக்கிளிகள் மறைந்து வருகிறது. மின்மினி பூச்சிகளை காண முடியவில்லை. பருவநிலை மாற்றத்தால் பல ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களால் உருவான உயிரினங்கள், மனிதனின் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளால் அழிந்து வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்களால் நிலம், நீர், காற்று பாதிக்கப்படுகிறது. இவற்றை தவிர்ப்பது மாணவர்களின் கடமை என பேசினார்.
விரிவுரையாளர் செல்வசீனா மரியா மோனிகா வரவேற்றார். விரிவுரையாளர்கள் லட்சுமிநாராயணன், கந்தசாமி நன்றி கூறினர்.
- உலக சுற்றுச்சூழ லத்தினத்தையொட்டி வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
- ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாவலர் நாராயணன் செய்திருந்தார்.
புதுச்சேரி:
புதுவை சுற்றுச்சூழல் துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்பம், அன்னை இந்திரா கிராம முன்னேற்ற இளைஞர் நற்பணி மன்றம். சார்பில் உலக சுற்றுச்சூழ லத்தினத்தையொட்டி வாகன விழிப்புணர்வு பிரசாரம் நடத்தப்பட்டது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்தை சட்டசபை வளாகத்தில் அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ. புதுவை மாசு கட்டுப்பாட்டு வாரிய குழும உறுப்பினர் செயலாளர் டாக்டர் ரமேஷ், மற்றும் பாரதி, பிரபாகரன், செல்வம், அஜய் கண்ணன், வாசு, முருகன், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் பாதுகாவலர் நாராயணன் செய்திருந்தார்.
- மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு உயிரை மாய்த்த பரிதாபம்
- கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 32) பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வனிதா (36) இவர்களுக்கு 2 குழந்தைகள உள்ளனர்.
வனிதா வீட்டிலேயே பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கலிய பெருமாள் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கலியபெருமாள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு 2 முறை அரளி விதை அரைத்து குடித்தும், தூக்குபோட்டும் தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றினர்.
இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டு மதியம் கலியபெருமாள் வீட்டுக்கு வந்தார். அப்போது வனிதா வீட்டின் கதவை உள்பக்க மாக பூட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். இதனை அறியாமல் கலியபெருமாள் அருகில் உள்ள வனிதாவின் தாய் வீட்டுக்கு சென்று விசாரித்தார்.
அங்கு மனைவி இல்லாததால் மீண்டும் கலியபெருமாள் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வனிதா வீட்டில் இருந்ததால் அவரை எங்கு சென்றாய் என கேட்டு அவரது நடத்தையில் சந்தேக மடைந்தார்.
இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வனிதா பள்ளிக்கு சென்று குழந்தைகளை அழைத்து வர சென்றார். அந்த நேரத்தில் கலியபெருமாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்த வனிதா கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் இது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் வனிதா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






