search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியது மாணவர்கள் கடமை
    X

    இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் மாசுக்காட்டுப்பாட்டு குழுமத்தின் உறுப்பினர் செயலர் ரமேஷ் பேசிய காட்சி.

    பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டியது மாணவர்கள் கடமை

    • மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் ரமேஷ் அறிவுரை
    • வசந்தகாலத்தில் பூக்கள் மலரும், வண்டுகள், பட்டாம்பூச்சி, தும்பிகள் சிறகை விரித்து பறக்கும்.

    புதுச்சேரி:

    இந்திராநகரில் உள்ள இந்திராகாந்தி அரசு மேல்நிலைப்பள்ளியில் ராமன் அறிவியல் மன்றம் சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு முகாம், டெலஸ்கோப் வடிவமைத்தல் கருத்தரங்கம், சுற்றுச்சூழலுக்கான வாழ்வியல் மாற்றம் குறித்த நிகழ்ச்சிகள் நடந்தது.

    பள்ளி முதல்வர் சந்திரன் தலைமை வகித்தார். புதுவை மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் சிறப்பாக டெலஸ்கோப் வடிவமைத்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

    புதுவையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாணவர்களின் கையில் உள்ளது. குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மாணவர்களால் ஏற்படுத்த முடியும். தற்போது வசந்தகாலத்தில் பூக்கள் மலரும், வண்டுகள், பட்டாம்பூச்சி, தும்பிகள் சிறகை விரித்து பறக்கும். கடந்த காலத்தை போல சுற்றுச்சூழல் தற்போது இல்லை.

    பச்சைக்கிளிகள் மறைந்து வருகிறது. மின்மினி பூச்சிகளை காண முடியவில்லை. பருவநிலை மாற்றத்தால் பல ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட பரிணாம மாற்றங்களால் உருவான உயிரினங்கள், மனிதனின் இயற்கைக்கு எதிரான செயல்பாடுகளால் அழிந்து வருகின்றன. பிளாஸ்டிக் பொருட்களால் நிலம், நீர், காற்று பாதிக்கப்படுகிறது. இவற்றை தவிர்ப்பது மாணவர்களின் கடமை என பேசினார்.

    விரிவுரையாளர் செல்வசீனா மரியா மோனிகா வரவேற்றார். விரிவுரையாளர்கள் லட்சுமிநாராயணன், கந்தசாமி நன்றி கூறினர்.

    Next Story
    ×