என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மருத்துவ கல்வி உள் ஒதுக்கீட்டை மத்திய அரசு பள்ளிக்கு வழங்க கூடாது
- வையாபுரி மணிகண்டன் எதிர்ப்பு
- ஆட்சியாளர்கள் இந்த திட்டத்திலும் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
ஏழை எளிய நடுத்தர மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அ.தி.மு.க.வின் கோரிக்கையை ஏற்று கவர்னர், அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்தார்.
இந்த பரிந்துரையை ஏற்று புதுவை அரசு, மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோப்பு தயாரித்து கவர்னர் மூலம் மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது.
மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசும் இதற்கான ஒப்புதல் வழங்க முன்வந்துள்ளது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வி படிக்க வேண்டும் என்ற உயர்ந்தநோக்கத்தோடு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வரப்படுகிறது.
இதனிடையே ஆட்சியாளர்கள் இந்த திட்டத்திலும் சதி செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியா கியுள்ளது.
லட்சக்கணக்கில் சம்பளம் பெறும் அதிகாரிகள், லட்சக்கணக்கில் வருமானம் ஈட்டும் வியாபாரிகளின் குழந்தைகள் படிக்கும் மத்திய அரசின் கேந்திர வித்யாலாயா பள்ளி மாணவர்களையும் இந்த திட்டத்தில் சேர்க்க ஆட்சியாளர்கள் திட்டமிடுகின்றனர்.
இந்த சதி எந்த நோக்கத்திற்காக அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறதோ, அந்த நோக்கத்தையே சிதைப்பதாக அமையும்.
புதுவை மாநில அரசு வழங்கும் 10 சதவீத மருத்துவக்கல்வி இடஒதுக்கீடு ஏழை, எளிய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த வசதியில்லாத மண்ணின் மைந்தர்களின் குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மட்டுமே சென்றடைய வேண்டும்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் குறிப்பிட்டுள்ளார்.






