என் மலர்
புதுச்சேரி

மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.
பொது மக்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க கோரி சாலை மறியல்
- கண்டமங்கலம் அருகே போக்குவரத்து பாதிப்பு
- போதிய சிகிச்சை அளிக்கப்படா ததால் தற்பொழுது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே உள்ள நவமாள்மருதூர் பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கழிவு நீர் கலந்த குடிநீரை குடித்ததால் வாந்தி-பேதி ஏற்பட்டு 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷியாமளா (வயது 40) ஜமுனா (50) பிரகதி (7) தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் அவர்களுக்கு போதிய சிகிச்சை அளிக்கப்படா ததால் தற்பொழுது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் ஆவேசமடைந்த நவம்மாள் மருதூர் பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் அப்பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மாரிமுத்துவின் தலைமையில் கண்டமங்கலம் ரெயில்வே கேட் பகுதியில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உரிய சிகிச்சை உடனடியாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத் தங்கம் மற்றும் போலீ சார்சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.
மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட வர்க ளுக்கு இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு தங்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும் என்று உறுதி அளித்தனர். அதனை ஏற்று பொதுமக்கள் மறியலை கைவிட்டு களைந்து சென்றனர்.
இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






