என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது
    X

    கோப்பு படம்.

    பெண்களை கிண்டல் செய்த வாலிபர் கைது

    • மாணவிகளை இரட்டை அர்த்தத்தில் பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.
    • அவரை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை முத்தியால் பேட்டை-சின்னையாபுரம் சந்திப்பில் நேற்று மாலை ஒருவாலிபர் நின்று கொண்டு அவ்வழியே செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை இரட்டை அர்த்தத்தில் பாட்டுப்பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது ரோந்துவந்த முத்தியால் பேட்டை போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினார். விசாரணையில் அவர் முத்தியால் பேட்டை கணேஷ் நகரை சேர்ந்த ஆரோக்கியராஜ் (வயது 39) என்பது தெரிய வந்தது.

    இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×