என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பிளம்பர் தூக்கிட்டு சாவு
    X

    கோப்பு படம்.

    பிளம்பர் தூக்கிட்டு சாவு

    • மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு உயிரை மாய்த்த பரிதாபம்
    • கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    புதுச்சேரி:

    நெட்டப்பாக்கம் நேரு நகரை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 32) பிளம்பர் வேலை செய்து வந்தார். இவரது மனைவி வனிதா (36) இவர்களுக்கு 2 குழந்தைகள உள்ளனர்.

    வனிதா வீட்டிலேயே பெட்டிகடை வைத்து நடத்தி வருகிறார். இதற்கிடையே கலிய பெருமாள் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்தார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதன் காரணமாக கலியபெருமாள் கடந்த 3 மாதத்துக்கு முன்பு 2 முறை அரளி விதை அரைத்து குடித்தும், தூக்குபோட்டும் தற்கொலைக்கு முயன்றார். அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்றினர்.

    இந்த நிலையில் நேற்று காலை வேலைக்கு சென்றுவிட்டு மதியம் கலியபெருமாள் வீட்டுக்கு வந்தார். அப்போது வனிதா வீட்டின் கதவை உள்பக்க மாக பூட்டிக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தார். இதனை அறியாமல் கலியபெருமாள் அருகில் உள்ள வனிதாவின் தாய் வீட்டுக்கு சென்று விசாரித்தார்.

    அங்கு மனைவி இல்லாததால் மீண்டும் கலியபெருமாள் வீட்டுக்கு வந்தார். அப்போது அங்கு வனிதா வீட்டில் இருந்ததால் அவரை எங்கு சென்றாய் என கேட்டு அவரது நடத்தையில் சந்தேக மடைந்தார்.

    இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வனிதா பள்ளிக்கு சென்று குழந்தைகளை அழைத்து வர சென்றார். அந்த நேரத்தில் கலியபெருமாள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து மின் விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.

    பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டுக்கு வந்த வனிதா கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    பின்னர் இது குறித்து நெட்டப்பாக்கம் போலீசில் வனிதா புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×