என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மாநாட்டில் பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி பேசும் போது தொற்றா நோய்கள் சமூகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியது.
    • புதுச்சேரியில் தொற்றா நோய் குறித்த திறன் மேம்பாட்டில் மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்றார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் ஆஸ்பத்திரி மற்றும் எக்கோ இந்தியா அமைப்பு சார்பில் பெருகி வரும் தொற்றா நோய் குறித்து விவாதிக்க வட்ட மேசை மருத்துவ மாநாடு கல்லுாரி அரங்கில் நடந்தது.

    பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். பிம்ஸ் மருத்துவமனை முன்னாள் சமுதாய மருத்துவ பேராசிரியர் ஜில்லே சிங் கலந்து கொண்டு மாநாட்டின் கையேட்டை வெளியிட்டார்.

    மாநாட்டில் பிம்ஸ் முதல்வர் அனில் பூர்த்தி பேசும் போது தொற்றா நோய்கள் சமூகத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த கூடியது.

    ஒருங்கிணைந்த கூட்டு முயற்சி மற்றும் அறிவு பகிர்வு ஆகியவையால் மட்டுமே நோயை தடுக்க முடியும்.

    எக்கோ இந்தியாவுடான இந்தஒத்துழைப்பு மற்றும் முன்னெடுப்பு புதுச்சேரியில் தொற்றா நோய் குறித்த திறன் மேம்பாட்டில் மிக முக்கியமான ஒன்றாக அமையும் என்றார்.

    மாநாட்டில், எக்கோ இந்தியாவின் துணை தலைவர் டாக்டர் சந்தீப் பல்லா, பிம்ஸ் மருத்துவமனை துணை முதல்வர் ஸ்டாலின், மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், பிரபல மருத்துவ நிபுணர்கள் டாக்டர் தாஸ், சி.எம்.சி., மருத்துவமனை பேராசிரியர் சாமுவேல், டாக்டர் ஜெரால்ட் மற்றும் டாக்டர் விஜய் பாஸ்கர் ரெட்டி உள்ளிட்ட தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த முன்னணி மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பரமித்தா தாஸ் நன்றி கூறினார்.

    • வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில் திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    • மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கோடைகாலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.

    நேற்று முன்தினம் நள்ளிரவு 12.15 மணி முதல் அதிகாலை 2.15 மணி வரை பலத்த மழை பெய்தது. நேற்று காலை முதல் வறண்ட வானிலை நிலவியது. பகலில் வெயில் கொளுத்திய நிலையில் மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்று வீசியது.

    மாலை இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 1½ மணி நேரம் இடைவிடாது கொட்டித்தீர்த்த மழையால் சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது.

    புஸ்சி வீதி, செயின்தெரேஸ் வீதி, காந்தி வீதி, லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட அனைத்து சாலைகளும் வெள்ளக்காடாக காட்சியளித்தன. பாவாணர் நகர், பூமியான்பேட்டை குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

    புதுவையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று இரவு வரை 10 செ.மீ. மழை பதிவானது. வெயில் மக்களை வாட்டி வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    பாகூர் பகுதியில் இடி மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் பாகூர், கிருமாம்பாக்கம், கன்னியக்கோவில், பிள்ளையார்குப்பம், குருவிநத்தம், சேலியமேடு பகுதியில் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகினர். மேலும் பாகூர் பகுதியில் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் மழை வெள்ளத்தில் மூழ்கி சேதமடைந்தது. வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அறுவடை பணிகள் பாதிப்படைந்துள்ளது.

    • மகளிர் கல்லூரி பேராசிரியை பர்வீன் சுல்தானா கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார்.
    • மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலை டு ஹெல்த் சயின்ஸ் துறையில் நடப்பு கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.

    விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் ஏ.எஸ்.கணேசன், இயக்குனர் டாக்டர் அனுராதா கணே சன் ஆகியோர் வழிக்காட்டு தலின்படி நடைபெற்ற இந்த விழாவுக்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி பிரிவு இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்றார்.

    விழாவில் பேசிய டீன் செந்தில் குமார், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தோற்றம், கடந்த ஆண்டுகளில் செய்த சாதனைகள், மாணவர்களின் வேலை வாய்ப்பு, விளையாட்டுத்துறையில் மாணவர்களின் சாதனை பற்றி எடுத்துரைத்தார்.

    சிறப்பு விருந்தினராக சென்னை நீதிபதி பஷீர் அகமது செய்யது மகளிர் கல்லூரி பேராசிரியை பர்வீன் சுல்தானா கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார். இதில் 350-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறையின் நிர்வாக அதிகாரி சந்துரு மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் முயற்சியில் நடந்தது
    • அரசுக்கும் இருந்த பிரச்சினை தொடர்பாக ஒப்பந்ததாரர் கட்டுமான பணியை மேற்கொள்ளவில்லை.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலம் ஊசுடு தொகுதி, தொண்டமாநத்தம் கிராமத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டி கட்டுமான பணி தொடங்கியது. ஒவ்வொரு 5 ஆண்டுகளிலும் கட்டுமான பணி இடையில் இடையில் நிறுத்தப்பட்டது.

    முதலில் கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்த தாரருக்கும் அரசுக்கும் இருந்த பிரச்சினை தொடர்பாக ஒப்பந்ததாரர் கட்டுமான பணியை மேற்கொள்ளவில்லை.

    மற்றவருக்கு கட்டுமான பணி அரசு வழங்கிய நிலையில், முதலாவதாக கட்டுமான பணியில் ஈடுபட்ட ஒப்பந்ததாரர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததையடுத்து 2017-க்கு பிறகு மேல்நிலை நீர் தேக்கு தொட்டி கட்டுமான பணி முழுமை அடையாமல் பாதியிலேயே நின்றது.

    தற்போது தொண்டமாநத்தம் சுற்றியுள்ள பகுதியில் குடிநீர் தேவை அதிகமாக இருப்பதால் தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் இந்தப் பிரச்சினையில் தலையிட்டு அவரது தீவிர முயற்சியில் வழக்கு முடிவுக்கு வந்தது.

    இந்நிலையில் மீதமுள்ள பணிக்கு திட்டம் வகுக்கப்பட்டு ரூ.63.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டுமான பணியினை மேற்கொள்ள பூமி பூஜை நடந்தது. அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், ஊசுடு தொகுதி பாரதீய ஜனதா கட்சி தலைவர் சாய். தியாகராஜன், தொகுதி குடிநீர் வழங்கல் தலைவர் பாலு, துணைத் தலைவர் சதாசிவம், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. அலுவலகத்தில் முதல் முறையாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் அங்கு நிருபர்கள் சந்திப்பு நடத்தியது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.
    • நான் எந்தக் கட்சிக்கு சென்றாலும் என்னை வரவேற்க அந்த கட்சியினர் காத்திருக்கின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உப்பளம் அ.தி.மு.க. அலுவலகத்தில் முதல் முறையாக கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் அங்கு நிருபர்கள் சந்திப்பு நடத்தியது மிகப்பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது.

    என்னை நம்பி உள்ள கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் எப்போதும் எந்த பிரச்சினை யிலும் மாட்டி விட மாட்டேன். நானே எதுவாக இருந்தாலும் எதிர்கொள் வேன். நான் எப்போதும் யாரையும் அரசியல்ரீதியாக மட்டுமே விமர்சனம் செய்வேன், தொழில் ரீதியாக விமர்சனம் செய்வது நல்லதல்ல. நான் ஏதோ ஒரு கட்சியில் பேசி வருவதாக தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர். நான் எந்தக் கட்சிக்கு சென்றாலும் என்னை வரவேற்க அந்த கட்சியினர் காத்திருக்கின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • லாபத்தில் இயங்கும் மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்.
    • டிராக்டர் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது.

    புதுச்சேரி:

    அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுவை மாநிலக்குழு சார்பில் டிராக்டர் பேரணி  நடந்தது.

    புதுவை ரோடியர் மில் திடலில் தொடங்கிய பேரணிக்கு சங்க தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். செயலாளர் சங்கர், பொருளாளர் சதாசிவம் முன்னிலை வகித்தனர். லாபத்தில் இயங்கும் மின்துறையை தனியாருக்கு தாரைவார்க்கும் முடிவை கைவிட வேண்டும்.

    விவசாயிகள் பயன்படுத்தும் மோட்டாருக்கு மீட்டர் பொருத்தும் நடவடிக்கையை கைவிட வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்ய அரசாணை வெளியிட வேண்டும். காரைக்காலுக்கு உரிய 7 டி.எம்.சி. தண்ணீரை பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். விடுபட்ட காரைக்காலை சேர்ந்த 437 விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்க வேண்டும். புதுவையில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை மாதம் ஒரு முறை கலெக்டர் நடத்த வேண்டும். விவசாயிகள் பயன்படுத்தும் சாலைகளை சீரமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை களை வலியுறுத்தி இந்த பேரணி நடந்தது.

    பேரணியில் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்களுடன் கலந்துகொண்டனர். டிராக்டர் பேரணி முக்கிய வீதிகளின் வழியாக கலெக்டர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு கலெக்டரை சந்தித்து விவசாயிகள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

    • சாலை அமைக்கும் பணியின்போது அந்த பேனர் வைக்கப்பட்ட கம்பத்தை சுற்றிலும் வழிவிட்டு சாலை அமைத்துள்ளனர்.
    • எடையார்பாளையத்தில் வாய்க்கால் அமைக்கும் ேபாது மின்கம்பத்தையும் சேர்த்து கான்கிரீட் அமைத்து வாய்க்கால் அமைக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவையின் பல்வேறு பகுதிகளில் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    அதுபோல் புதுவை-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை அகலப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

    ரெட்டியார்பாளையம் பகுதியில் பேனர் வைத்துள்ளனர். இந்த பேனரை சாலை ஓரத்தில் மின்கம்பத்தோடும், சாலையின் ஓரத்தில் கம்பு நட்டு பேனர் வைத்துள்ளனர்.

    சாலை அமைக்கும் பணியின்போது அந்த பேனர் வைக்கப்பட்ட கம்பத்தை சுற்றிலும் வழிவிட்டு சாலை அமைத்துள்ளனர். நாளை பேனர் அகற்றப்பட்ட பின் அந்த இடத்தில் பெரும் பள்ளம் ஏற்படும்.

    இந்த பள்ளத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் செல்லும்போது தவறி விழுந்து காயம் ஏற்படவும் வாய்ப் புள்ளது. இதே போல எடையார்பாளையத்தில் வாய்க்கால் அமைக்கும் ேபாது மின்கம்பத்தையும் சேர்த்து கான்கிரீட் அமைத்து வாய்க்கால் அமைக்கப் பட்டது. இத்தகைய சம்பவங்கள் கேலிக்குரிய தாகி வருகிறது.

    • மத்திய அரசு வழங்கிய ரூசோ நிதி ரூ.50 கோடியை பதிவாளர் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • பேராசிரியர்கள் கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை பிள்ளைச்சா வடியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரி 2020-ம் ஆண்டு தொழில்நுட்ப பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது.

    உடனடியாக ஆட்சி மன்றக்குழு அமைக்கப்படாததால் பதிவாளர் காலி பணியிடங்களை நிரப்பவில்லை. மத்திய அரசு வழங்கிய ரூசோ நிதி ரூ.50 கோடியை பதிவாளர் தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இந்த குற்றசாட்டுக்களை முன்வைத்து அவரை மாற்றக்கோரி தொழில்நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

    தொழில்நுட்ப பல்கலைக்கழக நுழைவாயில் முன்பு நடந்த போராட்ட த்துக்கு பேராசியர்கள் சங்கத்தின் செயலாளர் கல்பனா, துணை தலைவர் இளம்சேரலாதன் ஆகியோர் தலைமை வகித்தனர். இதில் 100-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், ஊழியர்கள் பங்கேற்றனர்.

    போராட்டம் குறித்து செயலாளர் கல்பனா கூறியதாவது:-

    தொழில்நுட்ப பல்கலைக் கழகத்திற்கு முழு நேர பதிவாளர் இல்லை. தற்போதைய பதிவாளர் அரைமணி நேரம் மட்டுமே பல்கலைக்கழகத்தில் உள்ளார். காலியாக உள்ள 140 பேராசிரியர் பணியிடங்கள், 300 ஊழியர் பணியிடங்கள் நிரப்பப்ப டாமல் உள்ளது.

    இதனால் தேசிய அளவில் 34-வது இடத்தில் இருந்த தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 200-ம் இடத்துக்கு வந்துவிட்டது. எனவே நிரந்தர பதிவாளரை நியமிக்க வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 3 ஆயிரம் மாணவர்கள் படிக்க கூடிய தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் ஆட்சி மன்ற குழுவை கவர்னர், புதுவை அரசு நியமிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேராசிரியர்கள் கோரிக்கையை நிறை வேற்றாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    • அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது உறுதியானது.
    • ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்க டாக்டர்கள் திட்ட மிட்டுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் துணை சபாநாயகராக இருப்பவர் ராஜவேலு(64).

    இவர் கடந்த 21-ந் தேதி சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது திடீரென தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இதன்பின் அவர் சென்னையில் மகள் வீட்டில் ஓய்வெடுத்தார். துணை சபாநாயகர் ராஜவேலு சில ஆண்டுகளுக்கு முன் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். எனவே அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது உறுதியானது.

    இதையடுத்து மீண்டும் அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு  ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்க டாக்டர்கள் திட்ட மிட்டுள்ளனர்.

    சிகிச்சை வெற்றிகரமாக நடைபெறவும், துணை சபாநாயகர் ராஜவேலு நலம் பெற வேண்டியும் மணக்குள விநாயகர் , சமயபுரம் மாரியம்மன் கோவில், துணை சபாநாயகரின் குலதெய்வ கோவிலான மோட்சகுளம், நெட்டப்பாக்கம் தொகுதி யில் உள்ள கோவில்கள், கிருமாம்பாக்கத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளை அவரது உறவினர்கள், ஆதரவா ளர்கள் செய்தனர்.

    • வாழ்வுரிமை இயக்கம் கண்டனம்
    • விவசாயிகள் இயற்கை பேரிடர்களால் பெற்ற கடனை காலத்தோடு செலுத்த முடியவில்லை.

    புதுச்சேரி:

    மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியி ருப்பதாவது:-

    தமிழகம், புதுவையில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்களது நிலம் உள்ளிட்ட சொத்துக்களை அடமானம் வைத்து விவசாய டிராக்டர்கள் மற்றும் உழவடை கருவிகள் வாங்க கடன் பெற்றுள்ளனர்.

    விவசாயிகள் இயற்கை பேரிடர்களால் பெற்ற கடனை காலத்தோடு செலுத்த முடியவில்லை.

    வங்கிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தடாலடியாக வாகனங்களை ஜப்தி செய்து அடிமாட்டு விலைக்கு ஏலம் விடுகின்றன.

    அதோடு இல்லாமல், விவசாயிகள் கடனுக்கு பெரும் தொகையை வட்டியாக செலுத்த நிர்பந்தம் செய்கின்றனர். இந்த தொகையை தனியார் வசூலிப்பு நிறுவனங்களை வசூலிக்கும்படி ஒப்படைக்கின்றன.

    அவர்கள் கடன் பெற்ற விவசாயிகளையும், குடும்பத்தினரையும் மிரட்டி மன அழுத்த த்திற்கும், உளைச்ச லுக்கும் ஆளாக்கி வரு கின்றனர். இது கடும் கண்ட னத்திற்கு ரியது. விவசாயி களிடம் சட்ட விரோதமாக மிரட்டி வசூ லிப்பதை வங்கிகள் நிறுத்த வேண்டும். அனைத்து வங்கி நிர்வா கத்தையும் அழைத்து பேசி, விவசாயிகள் செலுத்த வேண்டிய அசல் கடன்களை மட்டும் உரிய வகையில் திருப்பி ச்செலுத்த தமிழக, புதுவை அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் சாய்.இளங்கோவன் பங்கேற்பு
    • விடுதி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கரியமாணிக்கத் தில் உள்ள அரசு ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் இயங்கும் அரசு மாணவர் விடுதியில் விடுதி நாள் விழா கொண்டாடப்பட்டது.

    விடுதி நாள் விழாவில் சிறப்பு விருந்தினராக ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் சாய்.இளங் கோவன் கலந்து கொண்டார். அவர், விடுதி வளாகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் விடுதி நாள் விழாவை யொட்டி மாணவர்களுக்கு இடையே நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு இயக்குனர் சாய்.இளங்கோவன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    பின்னர் விடுதி மாண வர்களுடன் சேர்ந்து உணவ ருந்தினார். இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கண்காணிப்பாளர்கள் பழனி, வேல்முருகன் லெபாஸ், விடுதி காப்பாளர் ஏழுமலை, ஊழியர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
    • போக்குவரத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் விழுப்புரம்-நாகப்பட்டி னம் 4 வழி சாலைப்பணி நடைபெற்று வருகிறது.

    இச்சாலைக்காக சாலை யின் இரு புறங்களிலும் சர்வீஸ் சாலை அமைக்கப்ப ட்டுள்ளது. இந்த சர்வீஸ் சாலை முழுமை பெறாமல் இருப்பதால் ஆங்காங்கே பள்ளமாக உள்ளது.

    இதனால் நேற்று பெய்த மழையின் காரணமாக அந்த பள்ளத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கின்றது. அவ்வழியாக பள்ளி மாணவ-மாணவிகள் கல்லூரி செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்களது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளா னார்கள்.

    மேலும் காலை நேரத்தில் அதிக அளவில் வாகன போக்குவரத்து இருப்பதால் பள்ளப்பகுதியில் தண்ணீர் சூழ்ந்து உள்ளதால் வாகனங்கள் பள்ளத்தில் விழுந்து விபத்தும் ஏற்படுகிறது.

    விபத்தினை தடுக்கும் வண்ணம் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை 2 பக்கங்களில் உள்ள சர்வீஸ் சாலையை சீரமைத்து சீரான போக்குவரத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×