என் மலர்
நீங்கள் தேடியது "Vinayaka Mission"
- அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையை தேர்ந்தெடுத்து டைமண்ட் ‘ஏ’ பிளஸ் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது.
- சிறந்த கல்வி முறையினை எங்கள் கல்லூரியில் வழங்கி வருகிறோம்.
புதுச்சேரி:
இந்தியாவின் தர வரிசையில் அரசு சாரா நிறுவனமாக 'ஆர்' உலக நிறுவன தரவரிசை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மாணவர்களின் ஒளி மயமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த துல்லியமான தரவை வழங்கும் வழித்தடமாக செயல்பட்டு அவற்றில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அங்கீகரித்து வருகிறது.
அதன்படி கற்றல் இலக்கு அடிப்படையிலான கல்வி முறையில் சிறந்து விளங்குவதற்காக விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையை தேர்ந்தெடுத்து டைமண்ட் 'ஏ' பிளஸ் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறிய தாவது:-
இன்றைய கால சூழலில் கல்வியானது மாணவர்க ளின் திறனை மேம்படுத்த மட்டுமல்லாமல் வருங்கால தொழில்நுட்ப வளர்ச்சி யினை ஈடு செய்யும் திறனை வளர்க்கும் முறைகளை கையாளுகிறது. குறிப்பாக கற்றல் இலக்கு அடிப்படை யிலான கல்விமுறையானது மாண வர்களின் செயல் திறனை அளவிட்டு அவர்களின் இலக்கை அடையவும் பாடத் திட்டத்தின் முறையான இலக்கை அடையவும் வழிவகை செய்யும் கல்வி முறையாகும்.
இதன் மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி உலகளாவிய சகாக்களுடன் தனித்து நிற்கும் வகையில் புதிய திறன்களை உருவாக்க முடியும். இத்தகைய சிறந்த கல்வி முறையினை எங்கள் கல்லூரியில் வழங்கி வருகிறோம்.
இதனை ஆராய்ந்து 'ஆர்' உலக நிறுவனத் தரவரிசை அமைப்பு டைமண்ட் ஏ ப்ளஸ் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது என்றார். பின்னர் இத்தகைய அங்கீகாரம் கிடைப்பதற்கு சிறப்பான பங்களிப்பினை ஆற்றிய துறை பேராசி ரியர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார்.
மேலும் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன், ஆகியோர் இதற்கு சிறந்த வழிகாட்டியாகவும் உறு துணையாகவும் செய லாற்றிய டாக்டர். செந்தில் குமாருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.
- இவ்வாண்டிற்கான மாநாட்டினையும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளை மருத்துவ தொழிற்நுட்பம் மற்றும் சுகாதார துறை என்ற தலைப்பில் சென்னையில் நடத்தியது.
- மருத்துவ கல்வியில் சிறந்து விளங்கும் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
தென்னிந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைப்பானது இந்திய வணிகத்திற்கு தேசிய மற்றும் சர்வதேச அளவில் சேவை புரிந்து வரும் ஒர் முன்னணி அமைப்பாகும்.
இது ஆண்டுதோறும் புதிய தொழிற்நுட்பம் சார்ந்த பல்வேறு பிரிவுகளில் மாநாடுகளையும், அவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக விருதுகளை வழங்கி வருகிறது.
இதனடிப்படையில் இவ்வாண்டிற்கான மாநாட்டினையும், விருது வழங்கும் நிகழ்ச்சிகளை மருத்துவ தொழிற்நுட்பம் மற்றும் சுகாதார துறை என்ற தலைப்பில் சென்னையில் நடத்தியது.
இதில் விநாயகா மிஷன் நிகர்நிலை பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ கல்வியில் சிறந்து விளங்கும் நிறுவனம் என்ற விருது வழங்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
இவ்விருதானது பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கணேசன் வழிகாட்டுதலின்படியும், இயக்குனர் டாக்டர் அனுராதா கணேசன் ஆலோசனையின்படியும் விண்ணப்பிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் பல்வேறு சுகாதார துறையை சார்ந்த வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கல்வி நிறுவனங்களை சார்ந்த கல்வியாளர்கள் என பலர் பங்கேற்றனர்.
இவ்விருதினை பல்கலைக்கழகத்தின் அலைடு ெஹல்த் சயின்ஸ் துறையின் டீன் பேராசிரியர் டாக்டர். செந்தில்குமார் மற்றும் நிர்வாக பிரிவின் துணைப்பதிவாளர் டாக்டர். ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
- மகளிர் கல்லூரி பேராசிரியை பர்வீன் சுல்தானா கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார்.
- மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் அலை டு ஹெல்த் சயின்ஸ் துறையில் நடப்பு கல்வி ஆண்டின் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.
விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் டாக்டர் ஏ.எஸ்.கணேசன், இயக்குனர் டாக்டர் அனுராதா கணே சன் ஆகியோர் வழிக்காட்டு தலின்படி நடைபெற்ற இந்த விழாவுக்கு துறையின் டீன் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். புதுச்சேரி பிரிவு இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்றார்.
விழாவில் பேசிய டீன் செந்தில் குமார், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தோற்றம், கடந்த ஆண்டுகளில் செய்த சாதனைகள், மாணவர்களின் வேலை வாய்ப்பு, விளையாட்டுத்துறையில் மாணவர்களின் சாதனை பற்றி எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினராக சென்னை நீதிபதி பஷீர் அகமது செய்யது மகளிர் கல்லூரி பேராசிரியை பர்வீன் சுல்தானா கலந்துகொண்டு மாணவர்களுக்கு ஊக்கமளித்து பேசினார். இதில் 350-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்துகொண்டனர். முடிவில் கல்வி ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை துறையின் நிர்வாக அதிகாரி சந்துரு மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.






