என் மலர்
புதுச்சேரி

டைமண்ட் ஏ பிளஸ் தரவரிசை அங்கீகார சான்றிதழை பெற உறுதுணையாக இருந்த பேராசிரியர்களுடன், டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் உள்ளார்.
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு டைமண்ட் ஏ பிளஸ் தரவரிசை அங்கீகாரம்
- அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையை தேர்ந்தெடுத்து டைமண்ட் ‘ஏ’ பிளஸ் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது.
- சிறந்த கல்வி முறையினை எங்கள் கல்லூரியில் வழங்கி வருகிறோம்.
புதுச்சேரி:
இந்தியாவின் தர வரிசையில் அரசு சாரா நிறுவனமாக 'ஆர்' உலக நிறுவன தரவரிசை அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் மாணவர்களின் ஒளி மயமான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்த துல்லியமான தரவை வழங்கும் வழித்தடமாக செயல்பட்டு அவற்றில் சிறந்த நிறுவனங்களை தேர்ந்தெடுத்து அங்கீகரித்து வருகிறது.
அதன்படி கற்றல் இலக்கு அடிப்படையிலான கல்வி முறையில் சிறந்து விளங்குவதற்காக விநாயகா மிஷன் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட சேலம் விம்ஸ் மருத்துவமனை வளாகம், புதுச்சேரி ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி வளாகம், சென்னை ஆறுபடை வீடு தொழில்நுட்ப கல்லூரி வளாகம் ஆகியவற்றில் அமைந்துள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையை தேர்ந்தெடுத்து டைமண்ட் 'ஏ' பிளஸ் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது.
இதுகுறித்து துறைகளின் டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் கூறிய தாவது:-
இன்றைய கால சூழலில் கல்வியானது மாணவர்க ளின் திறனை மேம்படுத்த மட்டுமல்லாமல் வருங்கால தொழில்நுட்ப வளர்ச்சி யினை ஈடு செய்யும் திறனை வளர்க்கும் முறைகளை கையாளுகிறது. குறிப்பாக கற்றல் இலக்கு அடிப்படை யிலான கல்விமுறையானது மாண வர்களின் செயல் திறனை அளவிட்டு அவர்களின் இலக்கை அடையவும் பாடத் திட்டத்தின் முறையான இலக்கை அடையவும் வழிவகை செய்யும் கல்வி முறையாகும்.
இதன் மூலம் மாணவர்களின் திறன்களை மேம்படுத்தி உலகளாவிய சகாக்களுடன் தனித்து நிற்கும் வகையில் புதிய திறன்களை உருவாக்க முடியும். இத்தகைய சிறந்த கல்வி முறையினை எங்கள் கல்லூரியில் வழங்கி வருகிறோம்.
இதனை ஆராய்ந்து 'ஆர்' உலக நிறுவனத் தரவரிசை அமைப்பு டைமண்ட் ஏ ப்ளஸ் தரவரிசை வழங்கி அங்கீகரித்துள்ளது என்றார். பின்னர் இத்தகைய அங்கீகாரம் கிடைப்பதற்கு சிறப்பான பங்களிப்பினை ஆற்றிய துறை பேராசி ரியர்களுக்கு பாராட்டினை தெரிவித்தார்.
மேலும் பல்கலைக் கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் மற்றும் இயக்குனர் டாக்டர். அனுராதா கணேசன், ஆகியோர் இதற்கு சிறந்த வழிகாட்டியாகவும் உறு துணையாகவும் செய லாற்றிய டாக்டர். செந்தில் குமாருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்தனர்.






