என் மலர்
நீங்கள் தேடியது "Speaker Rajavelu"
- துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
- ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட என்.ஆ பிரமுகர் தனபூபதி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இவ்விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் ஜெயபிரகாஷ் வரவேற்று பேசினார்.
விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட என்.ஆ பிரமுகர் தனபூபதி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மடுகரை வி.எஸ்.ஆர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி, பண்ட சோழநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு நிதியுதவி ஆகியவற்றை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
- சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
- துணை சபாநாயகர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் துணை சபாநாயகராக இருப்பவர் ராஜவேலு(64). இவருக்கு திடீ ரென தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்து சிகிச்சை அளித்த டாக்டர்கள், துணை சபாநாயகரின் உடல்நிலை சீராக உள்ள தாக தெரி வித்துள்ளனர். இருப்பினும், துணை சபாநாயகர் ராஜவேலு ஏற்கனவே இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் என்பதால் முழு உடல் பரிசோதனை செய்ய டாக்டர்கள் அறிவுருத்தியுள்ளனர். பரிசோதனைக்கு பின் இன்னும் ஒரிரு நாளில் துணை சபாநாயகர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
- அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது உறுதியானது.
- ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்க டாக்டர்கள் திட்ட மிட்டுள்ளனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் துணை சபாநாயகராக இருப்பவர் ராஜவேலு(64).
இவர் கடந்த 21-ந் தேதி சென்னை விமான நிலையத்துக்கு சென்றபோது திடீரென தலைவலி, வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.
இதன்பின் அவர் சென்னையில் மகள் வீட்டில் ஓய்வெடுத்தார். துணை சபாநாயகர் ராஜவேலு சில ஆண்டுகளுக்கு முன் இதய நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளார். எனவே அவருக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு இருதயத்தில் அடைப்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து மீண்டும் அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி செய்து ஸ்டென்ட் வைக்க டாக்டர்கள் திட்ட மிட்டுள்ளனர்.
சிகிச்சை வெற்றிகரமாக நடைபெறவும், துணை சபாநாயகர் ராஜவேலு நலம் பெற வேண்டியும் மணக்குள விநாயகர் , சமயபுரம் மாரியம்மன் கோவில், துணை சபாநாயகரின் குலதெய்வ கோவிலான மோட்சகுளம், நெட்டப்பாக்கம் தொகுதி யில் உள்ள கோவில்கள், கிருமாம்பாக்கத்தில் உள்ள மாரியம்மன் கோவில்களில் அபிஷேகம் மற்றும் சிறப்பு பிரார்த்தனைகளை அவரது உறவினர்கள், ஆதரவா ளர்கள் செய்தனர்.






