search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மடுகரை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்- சீருடை
    X

    துணை சபாநாயகர் ராஜவேலு மாணவர்களுக்கு இலவச சைக்கிள்- சீருடை வழங்கிய காட்சி.

    மடுகரை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள்- சீருடை

    • துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.
    • ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட என்.ஆ பிரமுகர் தனபூபதி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    மடுகரை ராமமூர்த்தி அரசு உயர்நிலைப் பள்ளியில் 2022-23-ம் கல்வியாண்டில் 9-ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இவ்விழாவில் துணை சபாநாயகர் ராஜவேலு கலந்து கொண்டு மாணவர்களுக்கு இலவச சைக்கிள், சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு தையல் கூலி ஆகியவற்றை வழங்கினார். பள்ளி பொறுப்பாசிரியர் ஜெயபிரகாஷ் வரவேற்று பேசினார்.

    விழாவில் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட என்.ஆ பிரமுகர் தனபூபதி உட்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து மடுகரை வி.எஸ்.ஆர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், பனையடிக்குப்பம் அரசு நடுநிலைப்பள்ளி, பண்ட சோழநல்லூர் அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு சீருடை மற்றும் சீருடை தைப்பதற்கு நிதியுதவி ஆகியவற்றை துணை சபாநாயகர் ராஜவேலு வழங்கினார்.

    Next Story
    ×