என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
விவசாயிகளிடம் சட்டவிரோத வசூல்
- வாழ்வுரிமை இயக்கம் கண்டனம்
- விவசாயிகள் இயற்கை பேரிடர்களால் பெற்ற கடனை காலத்தோடு செலுத்த முடியவில்லை.
புதுச்சேரி:
மக்கள் வாழ்வுரிமை இயக்க செயலாளர் ஜெகன்நாதன் வெளி யிட்டுள்ள அறிக்கை யில் கூறியி ருப்பதாவது:-
தமிழகம், புதுவையில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சிறு, குறு மற்றும் நடுத்தர விவசாயிகள் தங்களது நிலம் உள்ளிட்ட சொத்துக்களை அடமானம் வைத்து விவசாய டிராக்டர்கள் மற்றும் உழவடை கருவிகள் வாங்க கடன் பெற்றுள்ளனர்.
விவசாயிகள் இயற்கை பேரிடர்களால் பெற்ற கடனை காலத்தோடு செலுத்த முடியவில்லை.
வங்கிகள் எவ்வித முன்னறிவிப்புமின்றி தடாலடியாக வாகனங்களை ஜப்தி செய்து அடிமாட்டு விலைக்கு ஏலம் விடுகின்றன.
அதோடு இல்லாமல், விவசாயிகள் கடனுக்கு பெரும் தொகையை வட்டியாக செலுத்த நிர்பந்தம் செய்கின்றனர். இந்த தொகையை தனியார் வசூலிப்பு நிறுவனங்களை வசூலிக்கும்படி ஒப்படைக்கின்றன.
அவர்கள் கடன் பெற்ற விவசாயிகளையும், குடும்பத்தினரையும் மிரட்டி மன அழுத்த த்திற்கும், உளைச்ச லுக்கும் ஆளாக்கி வரு கின்றனர். இது கடும் கண்ட னத்திற்கு ரியது. விவசாயி களிடம் சட்ட விரோதமாக மிரட்டி வசூ லிப்பதை வங்கிகள் நிறுத்த வேண்டும். அனைத்து வங்கி நிர்வா கத்தையும் அழைத்து பேசி, விவசாயிகள் செலுத்த வேண்டிய அசல் கடன்களை மட்டும் உரிய வகையில் திருப்பி ச்செலுத்த தமிழக, புதுவை அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






