என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • கியாஸ் சிண்டர் விலையை பிரதமர் மோடி ரூ.200 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
    • தொகுதி செயலாளர் ஆனந்திராமு, சுஜதா, சுகந்தினி மற்றும் ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் கியாஸ் சிண்டர் விலையை பிரதமர் மோடி ரூ.200 குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

    இதனை நாடுமுழுவதும் உள்ள பொதுமக்கள் வரவேற்று பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    இதன் ஒரு பகுதியாக புதுவை உழவர்கரை மாவட்டம் தட்டாஞ்சாவடி தொகுதியில் தொகுதி தலைவர் பசுபதி தலைமையில் உழவர்கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன் முன்னிலையில் வீதியெங்கும் பெண்கள் ரங்கோலி கோலமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பா.ஜனதா மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் கலந்துகொண்டு பெண்களுக்கு பாராட்டையும் மகிழ்ச்சியும் தெரிவித்தார்

    இந்நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைதலைவர் முருகன், தேசிய மகளிர் அணி செயற்குழு உறுப்பினர் தாமரை செல்வி, மாவட்ட மகளிர் அணி தலைவி வள்ளி, உழவர்கரை மாவட்ட முழுநேர ஊழியர் ரமணாஷங்கர், தொகுதி செயலாளர் ஆனந்திராமு, சுஜதா, சுகந்தினி மற்றும் ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • சி.டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே புதுவை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.
    • கான்ட்ராக்ஸ் பணியிடத்தை நிரப்ப 90 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் 10-ம் வகுப்புக்கும், 10 சதவீதம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டிக்கும் ஏற்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை பள்ளிக்கல்வித்துறையில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

    இதற்கு விண்ணப்பிக்க கல்வி தகுதிகளை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. சி.டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே புதுவை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலை இருந்தது.

    அதை மாற்றி, தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆசிரியர் தகுதி தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் பொது 90, எம்.பி.சி, மீனவர், ஓ.பி.சி, முஸ்லீம் பிரிவினர் 82, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளிகள் 75 மதிப்பெண் பெற்றிருந்தால் விண்ணப்பிக்கலாம்.

    இதன்படி விண்ணப்பங்கள் பெற்றதும் தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட உள்ளது. இதேபோல வழிமுறைகள், வெயிட்டேஜ் மதிப்பெண்களும் வெளியிடப்பட்டுள்ளன. ஆரம்ப பள்ளி ஆசிரியர் பணிக்கு பிளஸ்-2, டிப்ளமோ ஆசிரியர் படிப்பில் 70 சதவீதம், டெட் தகுதியில் 20 சதவீதம், வேலைவாய்ப்பு சீனியாரிட்டியில் 10 சதவீதம் வெயிட்டேஜ் அளிக்கப்படும். பட்டப்படிப்பு, பிஎட் படிப்பில் 70 சதவீதம், டெட் தேர்வில் 20 சதவீதம், வேலைவாய்ப்பு சீனியாரிட்டியில் 10 சதவீதம் வெயிட்டேஜ் தரப்படும். பள்ளிநூலகம், உடற்கல்வி விரிவுரையாளர், ஆசிரியர், பல்வேறு பாட விரிவுரையாளர் பணிக்கு அவர்களின் படிப்பில் 90 சதவீதம், வேலைவாய்ப்பில் 10 சதவீதம் வெயிட்டேஜ் தரப்படும்.

    பாலசேவிகா பணிக்கு பிளஸ் 2 படிப்பில் 50 சதவீதம், பாலசேவிகா அல்லது டிப்ளமோ சான்றிதழில் 50 சதவீதம் வெயிட்டேஜ் தரப்படும். தொடர்ந்து இந்த மதிப்பெண்கள் 90 சதவீதமாக ஆசிரியர் தகுதிக்காக மாற்றப்படும். மீதமுள்ள 10 சதவீதம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டி கவனத்தில் கொள்ளப்படும். கான்ட்ராக்ஸ் பணியிடத்தை நிரப்ப 90 சதவீதம் வெயிட்டேஜ் மதிப்பெண் 10-ம் வகுப்புக்கும், 10 சதவீதம் வேலைவாய்ப்பு சீனியாரிட்டிக்கும் ஏற்கப்படும்.

    ஆசிரியர் அல்லாத பணிக்கான பால்பவன் பயிற்றுநர், நுண்கலை ஆசிரியர், கலை ஆசிரியர், நிகழ்கலை ஆசிரியர், தையல் ஆசிரியர் பணிகளுக்கு 50 சதவீத மதிப்பெண், 40 சதவீத கலை தேர்வு, 10 சதவீத வேலைவாய்ப்பு சீனியாரிட்டி அடிப்படையில் வெயிட்டேஜ் தரப்படும்.

    இந்த படிப்புகளில் மதிப்பெண் தராமல் கிரேடு தரப்பட்டிருந்தால் 50 சதவீதம் மேல் முதல் வகுப்பு, 45 சதவீதத்துக்கு மேல் 2-ம் வகுப்பு, 40 சதவீதத்துக்கு மேல் 3-ம் வகுப்பு தேர்ச்சியாக கவனத்தில் கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்படும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.

    • அன்னை ஆலயத்தில் 333 ஆண்டு ஆடம்பரத் தேர் பவனி வருகின்ற 10-ம் தேதி நடக்கிறது.
    • புதுவை வட்டார முதன்மை குரு ரொசாரியோ சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் 333 ஆண்டு ஆடம்பரத் தேர் பவனி வருகின்ற 10-ம் தேதி மாலை நடக்கிறது. அதனை முன்னிட்டு நாளை காலை 6 மணி அளவில் திருப்பலி நடைபெற்று கொடியேற்றம் நடக்கிறது.

    இதில் புதுவை வட்டார முதன்மை குரு ரொசாரியோ சிறப்பு அழைப்பாக கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார். பங்குத்தந்தை அந்தோணிரோச் தலைமை தாங்குகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் பங்கு நிர்வாக குழு பொறுப்பாளர்கள் லூர்துசாமி, அந்தோணிராஜ், மில்கி, பங்கு மக்கள், தன்னார்வலர்கள் குழு உள்ளிட்ட பொதுமக்கள் பலர் கலந்து கொள்கிறார்கள்.

    • மார்க்சிஸ்டு, கம்யுனிஸ்டு கண்டனம்
    • பணி நியமன அறிவிப்பாணை வெளி யிட்டு 6 மாதங்களுக்குள் பணி தேர்வை முடித்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு காலி பணியிடங்கள் உள்ளன. மத்திய பா.ஜனதா அரசு புதுவை அரசு காலி பணியிடங்களை நிரப்ப அனுமதிக்கவில்லை. நிர்வாக செயல்பாட்டில் ஏற்பட்ட மந்தம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற அரசியல் அழுத்தம் காரணமாக தற்போது சில காலி பணியிடங்கள் நிரப்பப்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் ஓட்டுநர் பதவிக்கு 31 .3.2023-ல் உடல் தகுதி, திறன் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் எழுத்துத் தேர்வு இதுவரை நடத்தப்பட வில்லை. பணி நியமன அறிவிப்பாணை வெளி யிட்டு 6 மாதங்களுக்குள் பணி தேர்வை முடித்திருக்க வேண்டும். அறிவித்து 10 மாதங்கள் ஆகியும் பணி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வை நடத்தாதது கடும் கண்டனத்திற்குரியது.

    தேர்வை உடனே நடத்த வேண்டும். காலியாக உள்ள அரசு பணியிடங்களில் 10 சதவீத அளவில்தான் பணி நியமன அறிவிப்பும் நியமனங்களும் நடந்துள்ளன.

    90 சதவீத காலி பணியிடங்களுக்கு அரசு பணி நியமன அறிவிப்பு வெளியிடவில்லை. மாநில அரசு காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சாய்பாபாவுக்கு மூல மந்திர ஹோமம் மற்றும் மிருஞ்சயாகத்தில் கருங்காலி, வெள்ளை எருக்கன், துளசி, வில்வம் ஆகிய பொருள்கள் இடப்பட்டன.
    • விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    கோரிமேடு அருகே பட்டானூர் கிராமத்தில் ஓம் ஸ்ரீ வழி காட்டும் சாய்பாபா கோவில் 6-ம் ஆண்டு தொடக்க விழா கோ பூஜை, கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

    அதைத்தொடர்ந்து சாய்பாபாவுக்கு மூல மந்திர ஹோமம் மற்றும் மிருஞ்சயாகத்தில் கருங்காலி, வெள்ளை எருக்கன், துளசி, வில்வம் ஆகிய பொருள்கள் இடப்பட்டன.

    இதன் பின்னர் பாலாம்பிகை பூஜை, சுமங்கலி பூஜை, சாய்பாபா விற்கு ஆரத்தி காண்பிக்கப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைத்து பக்தர்களுக்கும் பாபாவின் பிரசாதம் வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு புதுவை ஆதீனம் ஸ்ரீ ல ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் 108 பெண்களுக்கு வஸ்திர தானம் வழங்கினார். விழா ஏற்பாடுகளை ஆலய டிரஸ்டி சாய் சசி அம்மையார் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார்.
    • கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவையில் ஆன்லைன் மூலம் பணத்தை இழப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போலீசார் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை பொருட்டாக கருதாமல் தொடர்ந்து ஆன்லைன் மோசடியில் சிக்கி வருகின்றனர்.

    இந்த நிலையில் புதுச்சேரி கனகசெட்டி குளம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகிருஷ்ணன் (வயது 34). இவர் நேருவீதியில் கடை வைத்துள்ளார். இவருடைய செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி வந்தது. எதிர் முனையில் சாட்டிங் செய்த நபர் பிட்காயினில் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.

    மேலும் பிட்காயின் விலை தற்போது மிகவும் குறைந்துள்ளது. எனவே பிட்காயின் வாங்குவதற்கு தற்போது சரியான தருணம், அதில் முதலீடு செய்தால் பல மடங்கு சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தை கூறினார்.

    இதனை நம்பிய ஹரிகிருஷ்ணன், செல்போனில் வந்த வங்கி கணக்கிற்கு ஒரே தவணையில் ரூ.21 லட்சம் அனுப்பி வைத்தார். ஆனால் அவருக்கு பிட்காயின் எதுவும் வரவில்லை.

    இதையடுத்து, தனக்கு செல்போனில் குறுஞ்செய்தி வந்த எண்ணை தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டு இருந்தது.

    இதனால் தான் மோசடி செய்யப்பட்டதை அறிந்த ஹரிகிருஷ்ணன் புதுவை சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ராமதாஸ் (42) என்பவர் பிட்காயின் வாங்குவதற்காக சென்னையை சேர்ந்த ஒரு நபருக்கு ரூ.10 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். அதன் பின்னர் அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை .

    இதுபோல் புதுச்சேரியை சேர்ந்த ஜான்பால் என்பவர் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஆன்லைனில் முதலீடு செய்ததன் மூலம் ரூ.6 லட்சத்து 98 ஆயிரத்தை இழந்துள்ளார்.

    கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவையில் 13 பேரிடம் ரூ.40 லட்சம் ஆன்லைன் மோசடி செய்யப்பட்டதாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை.
    • தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் திருநள்ளாறை அடுத்த செல்லூர் கிராமத்தில், கடந்த பல ஆண்டுகளாக சாலைகள் சேதம் அடைந்து, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேற்கண்ட சாலையை சரிசெய்ய வலியுறுத்தி, கிராமமக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில், 25-க்கும் மேற்பட்டோர் காரைக்கால்- கும்பகோணம் சாலையில் முன் அறிவிப்பு இன்றி, திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். விபரம் அறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் எடுத்து கூறுவதாக உறுதியளித்தும் சாலை மறியலை தொடர்ந்ததால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர் பேச்சுவார்த்தைக்கு பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.

    இது குறித்து, அப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மாதவன் கொடுத்த புகாரின் பேரில், போக்குவரத்து மற்றும் பாதசாரிகளுக்கு இடை யூறாக நின்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, செல்லூர் தமிழ்மணி (வயது20), சுபாஷ் (20), பாலசந்தர் (53), ஜான்மதியழகன் (28), யோகேஷ் (21), நிரஞ்சன் (19), மணிகண்டன் (20), வீ.மணிகண்டன் (20) சந்துரு (20), மனோகர் (20), ஐஸ்வரியா (40), சசி (41), ஜோதி (43), மர்லீஸ் (41), சுதா (41), வனிதா (41) உள்ளிட்ட 10 ஆண்கள், 6 பெண்கள் என மொத்தம் 16 பேர் பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • மஞ்சள் கார்டுக்கு ரூ.350 குறைகிறது
    • முழு தொகை அளித்தே கியாஸ் சிலிண்டரை புதுவை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    கச்சா எண்ணைய் விலை உயர்வால் சமையல் கியாஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.

    வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கான விலை ரூ.ஆயிரத்து 100-ஐ தாண்டியது. இந்த விலை நிறுவனத்துக்கு நிறுவனம் ரூ.10 முதல் ரூ.20 வரை வித்தியாசம் இருக்கும். இந்நிலையில் மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.200, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400 என கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.

    இந்த கட்டண சலுகை இன்றே உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. புதுவையில் ஏற்கனவே மாநில அரசு சிகப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.300, மஞ்சள் ரேஷன்கார்டுக்கு ரூ.150 மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த மானியம் ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மானியம் வழங்கும் திட்டம் சமீபத்தில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.

    ஆனாலும் இதுவரை மாநில அரசின் மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வந்து சேரவில்லை. முழு தொகை அளித்தே கியாஸ் சிலிண்டரை புதுவை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    மத்திய அரசின் மானியம் வழங்கும் திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கியாஸ் சிலிண்டர் பதிவு செய்யும்போது மத்திய அரசின் மானியம் நேரடியாக குறைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்ப டுகிறது. புதுவை அரசும் மானியம் வழங்கும் திட்டத்தை அமல்ப டுத்தினால் சிகப்பு ரேஷன்கார்டுக்கு மத்திய அரசின் மானியம் ரூ.200ம், மாநில அரசின் ரூ.300 சேர்த்து ரூ.500 மானிய விலையில் சிலிண்டர் கிடைக்கும்.

    மஞ்சள் கார்டுக்கு மத்திய அரசின் மானியம் ரூ.200 உடன், மாநில அரசின் ரூ.150 சேர்த்து ரூ.350 மானிய விலையில் சிலிண்டர் கிடைக்கும். ஆனால் மாநில அரசின் மானியம் சிலிண்டரை பெற்ற பிறகு பயனாளிகளின் வங்கி கணக்கில்தான் மானியம் வரவு வைக்கப்படும். இதனால் மத்திய அரசின் கட்டண குறைப்பு ரூ.200 தவிர்த்து எஞ்சிய தொகையை செலுத்தியே புதுவை மக்கள் சிலிண்டரை பெற வேண்டும். 

    • போலீசாருடன் வாக்குவாதம்
    • போலீசார் அங்கு நிற்கக்கூடாது பாரதிபூங்கா உள்ளே சென்று காத்திருக்கும்படி தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை திருபுவனை தொகுதி மதகடிப்பட்டில் தனியார் சோப்பு நிறுவனத்தின் பின்புறம் உள்ள திடலில் நரிக்குறவர்கள் வசித்து வருகின்றனர்.

    சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக வசித்து வரும் இவர்களுக்கு மனைப்பட்டா வழங்குவதாக அரசு அறிவித்திருந்தது. தேர்தலின்போதும் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் மனைப்பட்டா வழங்கவில்லை. இன்று காலை 12 மணியளவில் நரிக்குறவர்கள் தங்கள் குழந்தைகளோடும், கைகளில் வெற்று கேண்களுடனும் சட்டசபை வளாகத்தின் முன்பு வந்தனர்.

    இதைக்கண்ட சட்டசபை காவலர்கள், போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் நரிக்குறவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 30 ஆண்டுக்கும்மேல் வசித்து வரும் தங்களுக்கு வாக்குறுதி அளித்தபடி மனைப்பட்டா வழங்கவில்லை. வெயிலிலும், மழையிலும் அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

    முதல்-அமைச்சரை சந்திக்க எங்களை அனுமதிக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். முதல்-அமைச்சர் சட்டசபையில் இல்லை. அவர் வந்தவுடன் அனுமதிபெற்று உள்ளே அனுமதிப்பதாக தெரிவித்தனர். நரிக்குறவர்கள் முதல்- அமைச்சர் வரும் வரை நிற்பதாகக்கூறி பாரதிபூங்கா நுழைவுவாயிலில் காத்திருந்தனர். போலீசார் அங்கு நிற்கக்கூடாது பாரதிபூங்கா உள்ளே சென்று காத்திருக்கும்படி தெரிவித்தனர்.

    அவர்கள் மறுப்பு தெரிவித்து வாக்குவாதம் செய்ததால் 10 நிமிடம் பரபரப்பு நிலவியது. போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி பூங்காவிற்குள் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் முதல்-அமைச்சர் வருகைக்காக காத்திருந்தனர். 

    • வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறிப்பு
    • அம்மா நகரில் நடந்த ரவுடி ராஜா கொலை வழக்கில் அப்பாச்சி பிரகாஷ் முக்கிய கொலையாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூர் அருகே தமிழக பகுதியான வாழப்பட்டாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் என்கிற அப்பாச் பிரகாஷ்.

    இவர் மீது கொலை, வழிப்பறி அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வில்லியனூர் கோபாலன்கடை அருகே உள்ள அம்மா நகரில் நடந்த ரவுடி ராஜா கொலை வழக்கில் அப்பாச்சி பிரகாஷ் முக்கிய கொலையாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் அம்மா நகர் ராஜாவின் கொலைக்கு பழி தீர்க்க சம்பவத்தன்று அப்பாச் பிரகாஷை தீர்த்துக்கட்ட ரவுடி ராஜாவின் கூட்டாளிகளான முத்துப்பிள்ளை பாளை யத்தைச்சேர்ந்த மணி என்கிற மாறு மணி, தினேஷ், பாண்டி, கணுவாப் பேட்டையை சேர்ந்த அசாருதீன் உள்ளிட்ட 9 பேர் வாழப்பட்டாம் பாளையம் சென்று ரவுடி அப்பாச் பிரகாஷை ஆயுதங்களுடன் தேடி உள்ளனர்.

    அப்போது அவர் இல்லாததால் அவரது உறவினரான மெயின் ரோட்டில் டீக்கடை நடத்தி வரும் சக்திவேல் மகன் பிரதாப் (வயது 22) என்பவரை வழிமறித்து அப்பாச் பிரகாஷ் குறித்து தகவலை கேட்டுள்ளனர். அவர், 'எதுவும் தெரியாது நான் டீக்கடை நடத்தி வருகிறேன். அப்பாச்சி பிரகாஷ் பற்றி எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார். பிரதாப் பொய் சொல்வதாக கருதிய அந்த கும்பல் அவரை சரமாரியாக தாக்கி கீழே தள்ளியது. இதில் பிரதாப்புக்கு காயம் ஏற்பட்டது.

    பின்னர் பிரதாப் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் மாறு மணி தலைமையிலான கும்பல் பறித்து சென்றது. பலத்த காயமடைந்த பிரதாப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

    அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து பிரதாப்பை தாக்கிவிட்டு தப்பி ஓடிய மாறுபணி, தினேஷ், பாண்டி, அசாருதீன் மற்றும் அடையாளம் தெரியாத 5 பேர் உள்ளிட்ட 9 பேரை தேடி வருகின்றனர்.

    • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இளநிலை பொறியாளர் ஜோதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், செவிலியர்கள் , ஆதரவாளர்கள் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா தியான மையம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு தியான மையம் அமைப்பதற்கான பணியின் துவக்க விழாவினை இன்று நடந்தது.

    ரூ.17.17 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிக்கான பூமி பூஜையை முத்தியால்பேட்டை தொகுதி பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கி செய்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர். ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் ஆரம்ப சுகாதாரம் டாக்டர்.முரளி, முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர்.அஸ்வினி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் கோட்டம் 1 செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் ஜோதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், செவிலியர்கள் , ஆதரவாளர்கள் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.

    • வையாபுரி மணிகண்டன் புகார்
    • அரசு நிர்ணயித்த இந்த கட்டணத்தை எந்த பொது சேவை மையமும் வசூலிப்பதில்லை.

    புதுச்சேரி:

    புதுவைமாநில அ.தி.மு.க. துணை செயலாளர், வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பொது சேவை மையங்க ளில் ஆதார் எண்ணை புதுப்பித்தல், திருத்தம் உள்ளிட்ட அனைத்து பணிக ளுக்கு எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என ஒவ்வொரு அரசு துறையும் கட்டணத்தை நிர்ணயித்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசு நிர்ணயித்த இந்த கட்டணத்தை எந்த பொது சேவை மையமும் வசூலிப்ப தில்லை.

    தங்கள் இஷ்டத்திற்கு பொதுமக்களிடம் வசூல் வேட்டையில் பொதுசேவை மைய நிர்வாகிகள் ஈடுபடுகின்றனர்.

    எந்த சேவைக்கும் குறைந்த பட்சமாக ரூ.300 முதல் ரூ.500 வரை வசூலிக் கின்றனர். குறிப்பாக முத்தியால் பேட்டை தொகுதியில் இந்த வசூல் வேட்டை அதிகமாக உள்ளது. இதனால் முத்தி யால் பேட்டை தொகுதி மக்கள் மிகுந்த அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.

    அரசு துறையில் நிர்ண யிக்கப்பட்ட கட்டணத் தொகை குறித்த பட்டியலை பொதுமக்கள் பார்வைக்கு பொது சேவை மையத்தில் வெளிப்படையாக அறிவிப்பு பலகை வைத்து, அந்த கட்டணத்தை மட்டுமே வசூலிப்பதை மாவட்ட கலெக்டர் கண்காணிக்க வேண்டும்.

    பாமர ஏழை மக்களிடம் கொள்ளை யடிக்கும் பொது சேவை மையங்களின் அனுமதியை மாவட்ட கலெக்டர் ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு வையாபுரி மணிகண்டன் கூறியுள்ளார்.

    ×