என் மலர்
நீங்கள் தேடியது "Kias cylinder"
- மஞ்சள் கார்டுக்கு ரூ.350 குறைகிறது
- முழு தொகை அளித்தே கியாஸ் சிலிண்டரை புதுவை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
கச்சா எண்ணைய் விலை உயர்வால் சமையல் கியாஸ் விலை நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது.
வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டருக்கான விலை ரூ.ஆயிரத்து 100-ஐ தாண்டியது. இந்த விலை நிறுவனத்துக்கு நிறுவனம் ரூ.10 முதல் ரூ.20 வரை வித்தியாசம் இருக்கும். இந்நிலையில் மத்திய அரசு வீட்டு உபயோக சிலிண்டருக்கு ரூ.200, மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் ஏழைகள் பயன்படுத்தும் சிலிண்டருக்கு ரூ.400 என கட்டணத்தை குறைத்து அறிவிப்பு வெளி யிட்டுள்ளது.
இந்த கட்டண சலுகை இன்றே உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. புதுவையில் ஏற்கனவே மாநில அரசு சிகப்பு ரேஷன்கார்டுக்கு ரூ.300, மஞ்சள் ரேஷன்கார்டுக்கு ரூ.150 மானியம் வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த மானியம் ஆண்டுக்கு 12 கியாஸ் சிலிண்டருக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மானியம் வழங்கும் திட்டம் சமீபத்தில் கவர்னர் தமிழிசை, முதல்-அமைச்சர் ரங்கசாமியால் தொடங்கி வைக்கப்பட்டது.
ஆனாலும் இதுவரை மாநில அரசின் மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் வந்து சேரவில்லை. முழு தொகை அளித்தே கியாஸ் சிலிண்டரை புதுவை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் மானியம் வழங்கும் திட்டம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. கியாஸ் சிலிண்டர் பதிவு செய்யும்போது மத்திய அரசின் மானியம் நேரடியாக குறைக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்ப டுகிறது. புதுவை அரசும் மானியம் வழங்கும் திட்டத்தை அமல்ப டுத்தினால் சிகப்பு ரேஷன்கார்டுக்கு மத்திய அரசின் மானியம் ரூ.200ம், மாநில அரசின் ரூ.300 சேர்த்து ரூ.500 மானிய விலையில் சிலிண்டர் கிடைக்கும்.
மஞ்சள் கார்டுக்கு மத்திய அரசின் மானியம் ரூ.200 உடன், மாநில அரசின் ரூ.150 சேர்த்து ரூ.350 மானிய விலையில் சிலிண்டர் கிடைக்கும். ஆனால் மாநில அரசின் மானியம் சிலிண்டரை பெற்ற பிறகு பயனாளிகளின் வங்கி கணக்கில்தான் மானியம் வரவு வைக்கப்படும். இதனால் மத்திய அரசின் கட்டண குறைப்பு ரூ.200 தவிர்த்து எஞ்சிய தொகையை செலுத்தியே புதுவை மக்கள் சிலிண்டரை பெற வேண்டும்.
- 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
- 2 வருடங்களுக்கு மேலாகியும் குடோன் இடமாற்றம் செய்யப்பட வில்லை.
கவுண்டம்பாளையம்
கோவை துடியலூரை அடுத்த உருமாண்டம்பா ளையம் பகுதியில் காந்தி நகர் உள்ளது. இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் கியாஸ் சிலிண்டர் குடோன் உள்ளது. இங்கு தினமும் 100 கணக்காக கியாஸ் சிலிண்டர் கையாளப்படுகிறது. இதனால் குடோனை சுற்றி உள்ள மக்கள் அச்சம் அடைந்து வந்தனர்.
இதையடுத்து அந்த பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து கியாஸ் குடோன் உரிமையாளரிடம், கியாஸ் குடோன் குடியிருப்பு பகுதியில் இருப்பது ஆபத்து, எனவே இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.ஆனால் 2 வருடங்களுக்கு மேலாகியும் குடோன் இடமாற்றம் செய்யப்பட வில்லை. இதனால் பொது மக்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் அங்கு சென்று கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்கள் ஜூலை மாதத்தில் மாற்றி விடுவதாக தெரிவித்துள்ளனர்.
இடம் மாற்றுவதாக கூறி 2 மாதங்கள் கடந்தும் தொடர்ந்து கியாஸ் குடோன் செல்பட்டு வந்தது. இதனால் இன்று காலை அந்த பகுதி பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள் கூறும்போது, இங்கு 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். குழந்தைகள், முதியவர்கள் அதிகளவில் உள்ளனர். குடியிருப்பு பகுதியில் இந்த கியாஸ் குடோன் இருப்பதால் தினமும் அச்சத்துடன் வசித்து வருகிறோம்.
சில நேரங்களில் கியாஸ் வாசனை அதிகளவில் வருகிறது. அப்போது பயமாக உள்ளது. ஏதாவது அசம்பாவிதம் ஏற்படும் முன்பு கியாஸ் குடோனை இடமாற்றம் செய்ய வேண்டும். பல முறை உரிமையாளரிடம் கோரிக்கை வைத்தும் பலனில்லை எனவே சாலை மறியலில் ஈடுபட்டோம் என்றனர்.
இதுகுறித்து துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். சாலை மறியலால் 1 மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






