என் மலர்
புதுச்சேரி

முத்தியால்பேட்டை தொகுதி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் யோகா மையம் கட்டிடம் கட்டுமான பணிக்கான பூமி பூஜையை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.
ரூ.17.17 லட்சம் செலவில் யோகா மையம் கட்டிடம் கட்ட பூஜை
- பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- இளநிலை பொறியாளர் ஜோதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், செவிலியர்கள் , ஆதரவாளர்கள் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் யோகா தியான மையம் அமைப்பதற்காக திட்டமிடப்பட்டு தியான மையம் அமைப்பதற்கான பணியின் துவக்க விழாவினை இன்று நடந்தது.
ரூ.17.17 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்படவுள்ள பணிக்கான பூமி பூஜையை முத்தியால்பேட்டை தொகுதி பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ தலைமை தாங்கி செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர். ஸ்ரீராமுலு, துணை இயக்குனர் ஆரம்ப சுகாதாரம் டாக்டர்.முரளி, முத்தியால்பேட்டை ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர்.அஸ்வினி, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் கோட்டம் 1 செயற்பொறியாளர் வல்லவன், உதவி பொறியாளர் பாவாடை, இளநிலை பொறியாளர் ஜோதி மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்கள், செவிலியர்கள் , ஆதரவாளர்கள் ஆகிய பலர் கலந்து கொண்டனர்.






