search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government departments"

    • மார்க்சிஸ்டு, கம்யுனிஸ்டு கண்டனம்
    • பணி நியமன அறிவிப்பாணை வெளி யிட்டு 6 மாதங்களுக்குள் பணி தேர்வை முடித்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யுனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் சுமார் 11 ஆயிரத்திற்கும் அதிகமான அரசு காலி பணியிடங்கள் உள்ளன. மத்திய பா.ஜனதா அரசு புதுவை அரசு காலி பணியிடங்களை நிரப்ப அனுமதிக்கவில்லை. நிர்வாக செயல்பாட்டில் ஏற்பட்ட மந்தம், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்ற அரசியல் அழுத்தம் காரணமாக தற்போது சில காலி பணியிடங்கள் நிரப்பப்பட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

    காவல்துறை மற்றும் தீயணைப்பு துறைகளில் ஓட்டுநர் பதவிக்கு 31 .3.2023-ல் உடல் தகுதி, திறன் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் எழுத்துத் தேர்வு இதுவரை நடத்தப்பட வில்லை. பணி நியமன அறிவிப்பாணை வெளி யிட்டு 6 மாதங்களுக்குள் பணி தேர்வை முடித்திருக்க வேண்டும். அறிவித்து 10 மாதங்கள் ஆகியும் பணி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வை நடத்தாதது கடும் கண்டனத்திற்குரியது.

    தேர்வை உடனே நடத்த வேண்டும். காலியாக உள்ள அரசு பணியிடங்களில் 10 சதவீத அளவில்தான் பணி நியமன அறிவிப்பும் நியமனங்களும் நடந்துள்ளன.

    90 சதவீத காலி பணியிடங்களுக்கு அரசு பணி நியமன அறிவிப்பு வெளியிடவில்லை. மாநில அரசு காலி பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்க இயலாத வாகனங்களுக்கு கழிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
    • 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் கழிக்கப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு வருகின்றன.

    உடுமலை :

    மாநில அரசுத்துறை களில் அதிகப்படியான வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த வாகனங்கள் தமிழக மோட்டார் வாகன பரா மரிப்புத்துறையால் பராமரிக்கப்படுகிறது.தவிர, பழுது நீக்கம் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ள மாவட்டம் தோறும் தானியங்கி பணிமனைகளும், மண்டல துணை இயக்கங்களும் செயல்படுத்தப்பட்டு வரு கின்றன.

    அவ்வகையில் திருப்பூர் மாவட்டத்தில், அரசுத்துறை வாகனங்களின் ஆயுள் கண்காணிக்கப்பட்டு இயக்க இயலாத வாகனங்களுக்கு கழிவுச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அவ்வகையில் உடு மலையில் மருத்துவம், வேளாண்மை, சுகாதார த்துறை, வருவாய் என பல்வேறு துறைகளின் உயரதிகாரிகளுக்கான வாகனங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக புதிய வாகனங்கள் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து உடுமலை யைச்சேர்ந்த அரசு வாகன ஓட்டுனர்கள் கூறிய தாவது:- மத்திய அரசின் காலாவதி வாகனச்சட்டப்படி, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்கள் கழிக்கப்பட்டு, புதிய வாகனங்கள் வாங்கப்ப ட்டு வருகின்றன.அதன்படி தமிழக அரசுத்துறைகளில் இயக்கப்படும் காலாவதி யான வாகனங்களுக்கு கழிவு சான்றளித்து பயன்பாட்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.இந்த விபரம், மத்திய அரசின் https://parivahan.gov.in/parivahan/ என்ற இணையதளத்தில் உள்ளது.

    இருப்பினும் அரசுத்துறைகளில் பழைய வாகனங்களே இயக்கப்ப டுகிறது.பரா மரிப்புச்செலவு அதிகரிப்பதால் அதற்கு மாற்றாக புதிய வாகனங்கள் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறி னர்.

    • கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடத்தப்படவில்லை.
    • பொருட்காட்சி நடத்துவதற்கான பூமி பூஜை கடந்த ஜூலை 27-ந் தேதி நடத்தப்பட்டது.

    நெல்லை:

    நெல்லை டவுனில் உள்ள மாநகராட்சி அலுவலகம் எதிரே உள்ள இடத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் பொருட்காட்சி அமைக்கப்படுவது வழக்கம்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொருட்காட்சி

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அந்த இடத்தில் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால் பொருட்காட்சி நடத்த முடியாமல் போய்விட்டது.கொரோனா காரணமாகவும் கடந்த 2 ஆண்டுகளாக பொருட்காட்சி நடத்தப்பட வில்லை.

    இந்நிலையில் அரசின் திட்டங்களை கொண்டு சேர்க்கும் வகையில் நெல்லையில் இந்த ஆண்டு பொருட்காட்சி நடத்த வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அரங்குகள் அமைக்கும் பணி

    அதன் அடிப்படையில் வ. உ. சி. மணிமண்டபம் பின்புறம் தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்து அங்கு பொருட்காட்சி அமைக்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் ஆகியவை முடிவு செய்தது.

    இதையடுத்து அந்த இடத்தில் பொருட்காட்சி நடத்துவதற்கான பூமி பூஜை கடந்த ஜூலை 27-ந் தேதி நடத்தப்பட்டது. தொடர்ந்து அந்த இடத்தில் அரங்குகள் அமைக்கும் பணி தொடங்கியது.

    சாதனைகள்

    அரசின் வேளாண் துறை, வனத்துறை, காவல்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சார்பிலும் அங்கு சுமார் 36 அரங்குகள் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு அரங்கிலும் அந்தந்த துறையின் சார்பில் இதுவரை நெல்லை மாவட்டத்தில் செய்யப்பட்டுள்ள பணிகள் சாதனைகள் உள்ளிட்டவை குறித்த விளக்கங்கள் காட் சிப்படுத்தப்பட்டிருக்கும்.

    வேளாண்துறை அரங்கத்தில் நெல் விதைகள், உரங்கள், வேளாண் துறையால் நெல்லை மாவட்டத்திற்கு கிடைத்துள்ள பயன்கள் உள்ளிட்டவை இடம் பெற்றிருக்கும்.

    ராட்டினங்கள்

    இதே போல் அனைத்து துறையினரும் தங்களது துறையின் பணிகளை காட்சிபடுத்தியிருப்பார்கள். இது தவிர பொதுமக்கள் தங்களது பொழுதை போக்கும் வகையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    சிறுவர், சிறுமிகள் விளையாடி மகிழ ராட்டினங்கள், துரித உணவு கடைகள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    வருகிற 16 அல்லது 18-ந் தேதிக்குள் பொருட்காட்சி திறக்கப்படலாம் என்றும், அதிகபட்சம் 45 நாட்கள் நடைபெறும் எனவும் அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. 

    • புதுவை அரசு துறைகளில் துணை தாசில்தார்கள் உள்பட 15 புதிய பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்
    • மத்திய சட்டத்துறை மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறைகளில் துணை தாசில்தார்கள் உள்பட 15 புதிய பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தினார். புதுவை அரசு பயணமாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண்ரெட்டியை சந்தித்தார். அப்போது அவரிடம் புதுவை அரசின் சுற்றுலா திட்டங்கள் குறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விளக்கி கூறினார்.

    மேலும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை கடற்கரை சாலையில் நிறுவப்பட்டு வரும் தியாக சுவர் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவை சந்தித்தார்.

    இந்த சந்திப்பின் போது புதுவை தேர்தல் துறையில் புதிதாக துணை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் துணை தாசில்தார்கள் உள்ளிட்ட 15 புதிய பணியிடங்களை உருவாக்கி நிரப்புவதற்கு அனுப்பப்பட்ட கோப்புக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய சட்ட மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கேட்டுக்கொண்டார்.

    அதோடு 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவையில் நிறுவப்பட வுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் தாங்கிய தியாக சுவர் குறித்தும் எடுத்து கூறினார். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அருள்முருகன், சக்கரா பவுன்டேசன் நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    ×