என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்ப அனுமதி -  மத்திய மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தல்
    X

    டெல்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சந்தித்த போது எடுத்தபடம்.

    அரசு துறைகளில் புதிய பணியிடங்களை நிரப்ப அனுமதி - மத்திய மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தல்

    • புதுவை அரசு துறைகளில் துணை தாசில்தார்கள் உள்பட 15 புதிய பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும்
    • மத்திய சட்டத்துறை மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தினார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு துறைகளில் துணை தாசில்தார்கள் உள்பட 15 புதிய பணியிடங்களை நிரப்ப அனுமதி வழங்க வேண்டும் என்று மத்திய சட்டத்துறை மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் வலியுறுத்தினார். புதுவை அரசு பயணமாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லி சென்றுள்ளார். நேற்று காலை மத்திய சுற்றுலாத்துறை மந்திரி கிஷண்ரெட்டியை சந்தித்தார். அப்போது அவரிடம் புதுவை அரசின் சுற்றுலா திட்டங்கள் குறித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் விளக்கி கூறினார்.

    மேலும் 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவை கடற்கரை சாலையில் நிறுவப்பட்டு வரும் தியாக சுவர் அர்ப்பணிப்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தார். இந்த நிலையில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் டெல்லியில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை மந்திரி கிரண் ரிஜிஜூவை சந்தித்தார்.

    இந்த சந்திப்பின் போது புதுவை தேர்தல் துறையில் புதிதாக துணை தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் துணை தாசில்தார்கள் உள்ளிட்ட 15 புதிய பணியிடங்களை உருவாக்கி நிரப்புவதற்கு அனுப்பப்பட்ட கோப்புக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று மத்திய சட்ட மந்திரியிடம் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கேட்டுக்கொண்டார்.

    அதோடு 75-வது சுதந்திர தினத்தையொட்டி புதுவையில் நிறுவப்பட வுள்ள சுதந்திர போராட்ட தியாகிகளின் பெயர் தாங்கிய தியாக சுவர் குறித்தும் எடுத்து கூறினார். இந்த சந்திப்பின் போது பா.ஜனதா மாநில துணைத்தலைவர் அருள்முருகன், சக்கரா பவுன்டேசன் நிறுவனரும், திரைப்பட இயக்குனருமான ராஜசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×