என் மலர்
புதுச்சேரி
- திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
- பொதுமக்களுக்கு வளையல், தாலிகயிறு உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுவையை அடுத்த செட்டிப்பட்டு கிராமத்தில் பழமையான ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் திருக்கல்யாண உற்சவம் வரதராஜ பெரு மாளுக்கு நடத்தப்படுவது வழக்கம். இதனையொட்டி, காலை 8 மணிக்கு விஷ்வக்சேன ஆராதனம், அக்னி பிரதிஷ்டை, மகா சுதர்ஷண ஹோமம், தன்வந்தரி ஹோமம், மகா லட்சுமி ஹோமம் நடை பெற்றது.
இதன் முக்கிய நிகழ்வாக, இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சர்வ பூஷன அலங்காரத்தில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடை பெற்றது.
உற்சவத்தில் திருமணம் ஆகாதவர்கள் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் கலந்து கொண்டு வரதராஜ பெருமாள் திருக்கல்யா ணத்தை கண்டு தரிசனம் செய்தால் திருமணம் ஆகும். குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது கோவிலின் சிறப்பு என்பதால் திரளான பெண் பக்தர்கள் கலந்து கொண்டு கும்மி அடித்து வழிபட்டு சாமி தரிசனம் செய்தனர். திருக்கல்யாண உற்சவத்தில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து பங்கேற்று தரிசனம் செய்தார். தொடர்ந்து, பொதுமக்களுக்கு வளையல், தாலிகயிறு உள்ளிட்டவைகள் பிரசாதமாக வழங்கப்பட்டது.
- ஜான்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
- மாணவர்களுக்கு இலவச அரிசி தலா 7கிலோ மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
காமராஜர் நகர் தொகுதி அரசு பள்ளி மாணவர்களுக்கு அரிசி, ரெயின்கோட் ஜான்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
புதுச்சேரி அரசு கல்வி துறை சார்பில் காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சாரம் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் பள்ளியில் 6,7 மற்றும் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச அரிசி தலா 7கிலோ மற்றும் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ரெயின் கோட் வழங்கும் விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பிரேமலதா சாந்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலாளர் ஜான்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு அரிசி மற்றும் ரெயின் கோட் வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
- மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக பெரிய கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
புதுச்சேரி:
புதுவையில் கடந்த சில மாதங்களாக வாகன ங்கள் திருடு போவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து போலீசார் பல நடவடிக்கைகள் எடுத்தாலும் வாகன திருட்டை எந்த வகையிலும் கட்டுப்படுத்த முடியவில்லை.
பைக்குகள் மற்றும் கார்கள் அடிக்கடி திருடப்படுகின்றன. இவற்றில் பைக்குள் மிக அதிக அளவில் திருடப்படுகிறது. புதுவை பூந்துறை ரோடு சிவாஜி நகரை சேர்ந்தவர் சுதாகர் (வயது 48). இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இவர் தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். காலையில் வந்து பார்த்தபோது அவரது பைக் திருடு போயிருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் இது குறித்து தன்வந்திரி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதே போல் நெல்லித்தோப்பு பெரியார் நகரை சேர்ந்தவர் பாக்யராஜ் வயது 44 இவர் தனது பைக்கை பெரிய கடை பூ மார்க்கெட் அருகே நிறுத்திவிட்டு கடைக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் நிறுத்தி இருந்த பைக்கை காணவில்லை. மர்ம நபர்கள் பைக்கை திருடி சென்றது தெரியவந்தது. இது சம்பந்தமாக பெரிய கடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் இரு போலீஸ் நிலைய போலீசாரும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர் பைக் திருட்டால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
- மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார்.
- புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை எல்லை பகுதியான பாகூர் பகுதியை சேர்ந்த 63 வயது மூதாட்டி ஒருவர் கடந்த ஆண்டு ஜனவரி 30-ந் தேதி தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.
அப்போது அங்கு குடிபோதையில் வந்த கடலூர் பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்த உலகநாதன் மகன் சிலம்பரசன் (வயது 25) மூதாட்டியிடம் செல்போன் கேட்டுள்ளார்.
பின்னர் மூதாட்டியிடம் பேசிக்கொண்டிருந்த சிலம்பரசன் திடீரென கையில் வைத்திருந்த தடியால் அவரை தாக்கினார். இதில் மயங்கி விழுந்த மூதாட்டியை ஈவு இரக்கமின்றி அருகில் உள்ள புதருக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார்.
இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டிய அவர், மூதாட்டி காதில் கிடந்த தங்க கம்மலையும் பறித்து கொண்டு தப்பி சென்றார்.
இதுகுறித்த புகாரின் பேரில் பாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிலம்பரசனை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் நீதிபதி இளவரசன் முன்னிலையில் நடைபெற்று வந்தது.
வழக்கு விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. சிலம்பரசன் மீதான குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
மேலும் தங்க நகையை பறித்ததற்காக 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், கொலை மிரட்டல் விடுத்ததற்காக 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.
- கொள்ளையடித்த பணத்தில் 2 நாட்களாக மதுபார், ஓட்டல்களில் வாரி இறைத்து கணபதி செலவு செய்துள்ளார்.
- பணத்தை பறிகொடுத்த சங்கருக்கு பெற்றோரின் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு செட்டில்மென்டாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முதலியார் பேட்டையில் இன்ஸ்பெக்டர் இனியன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
கருமாரியம்மன் கோவில் வீதியில் வாலிபர் ஒருவர் மதுபோதையில் மயங்கி கிடந்தார். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது அவரின் அருகில் கைப்பை கிடந்தது. அதை சோதித்தபோது கட்டுக்கட்டாக பணம் இருந்தது. அந்த நபரை எழுப்பி விசாரித்தபோது, உப்பளம் நேதாஜி நகரை சேர்ந்த பெயிண்டர் கணபதி (வயது 32) என்பதும், பணத்தை பற்றி கேட்டபோது முன்னுக்கு பின் முரணாகவும் பதில் கூறினார்.
இதையடுத்து அவரை போலீஸ்நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது பக்கத்து வீட்டில் சங்கர்(34) என்பவர் வசித்து வருகிறார். எல்.ஐ.சி. ஏஜெண்டான அவர் வெளியூர் சென்றிருந்தபோது அவரது வீட்டு கதவை இரும்பு ராடால் உடைத்து ரூ.10 லட்சத்தை கணபதி கொள்ளையடித்துள்ளார். அந்த பணத்தைத்தான் கணபதி செலவு செய்து வந்துள்ளார்.
கொள்ளையடித்த பணத்தில் 2 நாட்களாக மதுபார், ஓட்டல்களில் வாரி இறைத்து கணபதி செலவு செய்துள்ளார். மது பார்களுக்கு பணப்பையுடன் சென்ற அவர் தனக்கு பிறந்தநாள் எனக்கூறி, எல்லோருக்கும் பணத்தை சினிமாவில் வழங்குவது போல கட்டுக்கட்டாக வாரி வழங்கியுள்ளார். ஓட்டல்களுக்கு சென்று விதவிதமாக சாப்பிட்டுள்ளார்.
2 நாட்களில் மட்டும் ரூ.4 லட்சத்து 71 ஆயிரத்தை தண்ணீராக செலவு செய்துள்ளார் என தெரியவந்தது.
பணத்தை பறிகொடுத்த சங்கருக்கு பெற்றோரின் சொத்து பாகம் பிரிக்கப்பட்டு செட்டில்மென்டாக ரூ.10 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. அந்த பணத்தைத்தான் கணபதி திருடியுள்ளார். இதில் ரூ.4 லட்சத்து 71ஆயிரம் செலவு செய்தது போக எஞ்சிய ரூ.5. லட்சத்து 29 ஆயிரத்தை போலீசார் மீட்டனர். சங்கர் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கணபதியை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- ஆரோவில் இசையம்பலம் பள்ளியின் தாளாளர் டாக்டர் சஞ்சீவ்ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
- 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், ஆபத்து காலங்களில் தற்காத்துக்கொள்வது எப்படி? என பயிற்சி அளித்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி கே.ஏ.பி. குராஷ் தற்காப்புக்கலை சங்கம் சார்பில் மாநில அளவிலான ஒரு நாள் பயிற்சி முகாம் ஆரோவில் இசையம்பலம் பள்ளியில் நடந்தது. சங்க பொதுச்செயலாளர் ராமமூர்த்தி வரவேற்றார். புதுவை பொதுப்பணித்துறை கண்காணிப்பாளர் இளைய நம்பி, ஹானஸ்ட் நைட் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி தலைவர் பாலமுரளி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆரோவில் இசையம்பலம் பள்ளியின் தாளாளர் டாக்டர் சஞ்சீவ்ரங்கநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
புதுவை ஒலிம்பிக் சங்கத்தின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் முத்துகேசவலு, சுங்கத்துறை உதவி ஆணையர் நடராஜன், ஐக்கிய கராத்தே சங்க பொதுச்செயலாளர் வளவன், ஆலங்குப்பம் பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன், மூத்த கணக்காளர் குணசேகரன், ஜூடோ சங்க முன்னாள் தலைவர் பிரதீப்குமார் ஜெயின், சர்வதேச நடுவர் ஜோதிமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் புதுவை மாநிலத்தின் பல்வேறு அரசு, தனியார் பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு 20-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், ஆபத்து காலங்களில் தற்காத்துக்கொள்வது எப்படி? என பயிற்சி அளித்தனர். பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், விருது வழங்கப்பட்டது. முகாமில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் குராஷ் தற்காப்புக்கலை சங்க தலைவர், முன்னாள் எம்.எல்.ஏ. அசோக்ஆனந்தன் கையொப்பமிட்ட அங்கீகார சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- திருநங்கைகளுக்கு உதவிதொகை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- வினாயக மூர்த்தி, பஸ்கால் மற்றும் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை உப்பளம் சட்டமன்ற தொகுதியில் முதியோர், விதவை, முதிர்கன்னி, திருநங்கைகளுக்கு உதவிதொகை சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
கென்னடி எம்.எல்.ஏ. பங்கேற்று 122 பயனாளி களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
நிகழ்ச்சியில் துணை இயக்குனர் அமுதா, தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ஆரோக்கியராஜ், வினாயக மூர்த்தி, பஸ்கால் மற்றும் முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலை பக்தர்கள் 11 முறை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
- கிரிவல ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஆலய குருக்கள் செய்துள்ளனர்.
புதுச்சேரி:
வில்லியனூர் திருக்காஞ்சியில் உள்ள கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி விழா நடத்தப்படுகிறது.
ஆவணி மாத பவுர்ணமியான புதன்கிழமை மாலை 6 மணிக்கு பவுர்ணமி கிரிவலம் தொடங்குகிறது. கெங்கைவராக நதீஸ்வரர் கோவிலை பக்தர்கள் 11 முறை சுற்றி கிரிவலம் செல்கின்றனர்.
இரவு 8.30 மணிக்கு கோவில் மூலவர் கோபுரத்தின் அருகே பவுர்ணமி தீபம் ஏற்றப்பட்டு பக்தர்கள் தரிசனம் நடக்கிறது. கிரிவல ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஆலய குருக்கள் செய்துள்ளனர்.
- போலி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
- சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் காமாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.50 கோடி மதிப்பிலான 64 ஆயிரம் சதுரடி நிலம், ரெயின்போ நகர் 7-வது குறுக்கு தெருவில் உள்ளது. கோவில் நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்த புகாரின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனி புலனாய்வு குழு அமைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், போலி ஆவணம் தயாரித்து 2 பிரிவாக நிலங்களை விற்பனை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து போலி பத்திரத்தை பதிவு செய்த சார்பதிவாளர் சிவசாமி உட்பட 15 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக இருந்த அப்போதைய தாசில்தார் பாலாஜி, நில அளவைத்துறை இயக்குனர் ரமேஷ் ஆகியோரையும் கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
இதன்பின் 2 அதிகாரிகளும் குற்றவாளிகளாக வழக்கில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 2 பேரும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். இந்த நிலையில் அதிகாரிகள் 2 பேரும் திடீரென தலைமறைவாகினர். இருவரும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுக்களை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் அவர்களை தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் சென்னையில் பதுங்கியிருந்த பாலாஜியை சிறப்பு அதிரடிப்படை போலீசார் கைது செய்தனர். அவரை புதுவைக்கு அழைத்து வந்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தலைமறைவாக உள்ள மற்றொரு அதிகாரி ரமேசை தேடி வருகின்றனர். தற்போது பாலாஜி மீன்வளத்துறை இயக்குனராக பணியாற்றி வருகிறார். நில மோசடி வழக்கில் அதிகாரி கைது செய்யப்பட்டிருப்பது புதுவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பஸ் டிரைவர் திடீரென அதிவேகமாக பஸ்சை ஓட்டி திடீர் பிரேக் போட்டார்.
- உத்திரபிரசாந்த் தொடர்ந்து கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் சில்லரை கொடுக்குமாறு மன்றாடினார்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே தமிழக பகுதியான பெரம்பையை அடுத்த நடுப்பாளையம் ஆண்டவர் நகரை சேர்ந்தவர் உத்திரபிரசாந்த் (வயது50). விவசாய கூலி தொழிலாளி.
சம்பவத்தன்று மதியம் உத்திரபிரசாந்த் பி.எஸ்.பாளையத்தில் விதை நெல் விடும் வேலைக்காக வில்லியனூரில் இருந்து தனியார் பஸ்சில் புறப்பட்டு சென்றார். அப்போது பஸ் கண்டக்டரிடம் ரூ.500 கொடுத்து டிக்கெட் எடுத்தார். ஆனால் மீதி பணத்தை கண்டக்டர் கொடுக்கவில்லை.
இதனை உத்திரபிரசாந்த் கேட்ட போது பி.எஸ்.பாளையம் சென்றதும் தருவதாக கண்டக்டர் கூறியதாக தெரிகிறது. ஆனால் பி.எஸ்.பாளையம் பஸ் நிறுத்தம் சென்றும் மீதி சில்லரையை கண்டக்டர் தரவில்லை.
இதனை உத்திரபிரசாந்த் கேட்ட போது தற்போது சில்லரை இல்லை என்று கண்டக்டர் தெரிவித்தார். ஆனால் சில்லரை வாங்காமல் பஸ்சில் இருந்து இறங்க மாட்டேன் என்று உத்திரபிரசாந்த் கூறினார்.
அப்போது பஸ் டிரைவர் திடீரென அதிவேகமாக பஸ்சை ஓட்டி திடீர் பிரேக் போட்டார். இதனால் உத்திரபிரசாந்த் தடுமாறி கீழே விழ முயன்றார். ஆனாலும் சுதாரித்துக்கொண்டு உத்திரபிரசாந்த் தொடர்ந்து கண்டக்டர் மற்றும் டிரைவரிடம் சில்லரை கொடுக்குமாறு மன்றாடினார்.
ஆனால் அவர்கள் சில்லரை கொடுக்க மறுத்ததோடு தகாத வார்த்தைகளால் திட்டி உத்திரபிரசாந்த்தை பஸ்சை விட்டு கீழே இறங்காவிட்டால் இங்கேயே கத்தியால் குத்தி கொலை செய்து விடுவோம் என்று அவரது மார்பில் கையை வைத்து தள்ளினர்.
இதனால் பஸ் படிகட்டில் இருந்து விழுந்ததில் உத்திரபிரசாந்த் தலையில் பலத்த காயமடைந்தார். ஆனால் டிரைவரும், கண்டக்டரும் பஸ்சை நிறுத்தாமல் சென்றுவிட்டனர். இதையடுத்து அங்கிருந்தவர்கள் உத்திரபிரசாந்த்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து உத்திரபிரசாந்த்தின் மகன் விஜயராகவன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மீன்பிடி தொழில் செய்து வரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.
- சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர்.
புதுச்சேரி:
காரைக்கால்மேடு சிங்காரவேலர் வீதியைச்சேர்ந்தவர் சரவணன். மீன்பிடி தொழில் செய்துவரும் இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு யோஹனா(12), சஞ்சுஸ்ரீ(9), சஞ்சனா(7), சாய் (5) ஆகிய 4 குழந்தைகள் உள்ளனர். இரவு சஞ்சனா மற்றும் சாய் ஆகிய இருவரும், வழக்கம் போல், வாசல் இரும்பு கேட்டில் விளையாடி கொண்டிருந்தனர். அப்போது, சுவர் இடிந்து இரும்பு கேட்டுடன் விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த தந்தை மற்றும் உறவினர்கள், சுவரின் கீழே சிக்கிய 2 குழந்தைகளையும் மீட்டு, அருகில் உள்ள காரைக்கால் மேடு அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்திற்கு தூக்கி சென்றனர். மேல் சிகிச்சைக்காக, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். இதில், சஞ்சனா சிகிச்சை பலனின்றி இறந்து போனார். சாய் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து காரைக்கால் நகர போலீசில் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசரித்து வருகின்றனர்.
- 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2012-ல் உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார்.
- அக்காவை நினைத்து புலம்பி வந்துள்ளார்.
புதுச்சேரி:
காரைக்கால் மரியம் அவன்யூவைச்சேர்ந்தவர் முகம்மது இசாக். இவருக்கு இஸ்மத் நாச்சியாள் (வயது33) என்ற ஒரு பெண் குழந்தையும், அப்துல்ரஹ்மான் (32), ஜாகிர் உசேன் (31) ஆகிய 3 குழந்தைகள். இதில், இஸ்மத் நாச்சியாளுக்கு திருமணம் நடந்து, 4 ஆண்டுகளுக்கு பிறகு, கடந்த 2012-ல் உடல்நிலை சரியில்ல மால் இறந்துவிட்டார். இதனால், ஜாகிர் உசேன் மனவே தனையில் இருந்துவந்தார். அடிக்கடி அக்காவை நினைத்து புலம்பி வந்தார். வெளிநாடுக்கு வேலைக்கு அனுப்பி வைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து, தந்தை முகம்மது இசாக், ஜாகிர் உசேனை, கடந்த 3 ஆண்டு களுக்கு முன், சவுதிக்கு டிரைவர் வேலைகாக அனுப்பி வைத்தார்.
அங்கு சென்றும், அக்காவை நினைத்து புலம்பி வந்துள்ளார். திருமணம் செய்துவைத்தால் சரியாகிவிடுவான் என நினைத்து, பெண் பார்த்தனர். ஆனால், ஜாகிர் உசேன் திருமணம் வேண்டாம் என மறுத்துவிட்டார். இந்நிலையில், கடந்த 22-ந் தேதி ஜாகிர் உசேன் வாந்தி எடுத்தார். தந்தை மற்றும் உறவினர்கள், ஜாகிர் உசேனை காரைக்கால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் விசாரித்தபோது, எலி பேஸ்டை, கூல்டிரிங்சில் கலந்து குடித்துவிட்டதாக கூறியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த ஜாகிர் உசேன் சிகிச்சை பலனின்றி இறந்து போனார். இது குறித்து, காரைக்கால் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






