என் மலர்
புதுச்சேரி
- காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
- 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காததே காரணம்.
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
எம்.பி.பி.எஸ். படிப்பிற்கு மாணவர் சேர்க்கை தொடங்காததற்கு அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்காததே காரணம்.
புதுவையில் பா.ஜனதா கூட்டணி ஆட்சிதான் நடைபெறுகிறது.ஆனாலும் ஏன் இதுவரை உள் ஒதுக்கீடு சட்டத்திற்கு அனுமதி தரப்படவில்லை?
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கூடாது என மத்திய அரசு நினைக்கிறதா? இது குறித்து முதல் -அமைச்சர் ரங்கசாமிதான் மத்திய அரசை கேட்டு புதுவை மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும். கலந்தாய்வை தாமதப்படுத்த, தாமதப்படுத்த பல குளறுபடிகள் உருவாகும்.
அரசுப்பள்ளி மாணவ ர்கள் மீது தனியார் பள்ளி மாணவர்களுக்கு கோபம் ஏற்படும். இதனை அரசு உணர்ந்து விரைந்து மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை தொடங்க வேண்டும். அரசு மருத்துவ கல்லூரியில் என்.ஆர்.ஐ. இடங்களை நிரப்புவதில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே என்.ஆர்.ஐ. இட ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்கள் குறித்த விவரங்களையும், அவர்களுக்கான கட்டண விவரங்களையும் முழுமை யாக புதுவை அரசும், சுகாதாரத்தறையும் வெளிப்படுத்த வேண்டும்.
இவ்வாறு வைத்திலிங்கம் எம்.பி. கூறியுள்ளார்.
- தேசிய அளவிலான விளையாட்டு திருவிழாவை நடத்தியது
- கயிறு ஏறுதல், மல்லர்கம்பம் போட்டிகள் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை நேரு யுவகேந்திரா சங்கேதன் மற்றும் சத்திரிய அகாடமி இணைந்து தேசிய அளவிலான விளையாட்டு திருவிழாவை நடத்தியது. முருங்கப்பாக்கம் திரவுபதியம்மன் கோவில் வளாகத்தில் நடந்த விழாவில் கயிறு ஏறுதல், மல்லர்கம்பம் போட்டிகள் நடந்தது.
புதுவை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 17 பள்ளிகள், 3 கல்லூரிகளை சேர்ந்த மல்லர் கம்ப வீரர், வீராங்கணைகள் 90-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
3 சுற்றாக போட்டி நடந்தது. 17 வயதுக்கு உட்பட்டோர் ஒரு பிரிவாகவும், 17 வயதுக்கு மேற்பட்டோர் ஒரு பிரிவாகவும் பங்கேற்றனர். இதில் பிரமீடு சுற்று போட்டியில் பாரதிதாசன் கல்லூரி மாணவிகள் முதலிடத்தையும், சாய்ராம் பள்ளி மாணவர்கள் 2-ம் இடத்தையும் பெற்றனர். எஸ்.பி.வீரவல்லவன், சத்ரிய அகாடமி நிறுவனர் கணேஷ் ஆகியோர் பரிசுகளை வழங்கினர்.
- 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.
- மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும்.
புதுச்சேரி:
புதுவை பல்கலைக்கழகத்தில் நாளை காலை 10 மணிக்கு கியூட் தேர்வு அடிப்படையில் பல்வேறு 5 ஆண்டு ஒருங்கிணைந்த முதுநிலை படிப்புகளுக்கு நேரடி மாணவர் சேர்க்கை நடக்கிறது.
பல்கலைக்கழகத்தில் சேர விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட துறை தலைவர்களிடம் நேரடியாக தகவல் தெரிவிக்கலாம். பின்னர் தரவரிசையின்படி காலியிடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் வரவேண்டும்.
நேரடி சேர்க்கை யின்போது விண்ணப்பதா ரர்களை தேர்ந்தெடுக்க விருப்ப தேர்வு பல்கலை க்கழக இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இத்தகவலை உதவி பதிவாளர் மகேஷ் தெரிவித்துள்ளார்.
- கோட்டக்குப்பம் 23-வது வார்டு பகுதியில் விஜய் மக்கள் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
- பொதுமக்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி ஆகிய வற்றை புஸ்ஸி ஆனந்து வழங்கினார்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சின்ன கோட்டக்குப்பம் 23-வது வார்டு பகுதியில் விஜய் மக்கள் பெயர் பலகை திறப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க அகில இந்திய பொதுச்செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான புஸ்ஸி ஆனந்து கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்து அப்பகுதியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்தார். மேலும் மாணவர்களுக்கு நோட்டு-புத்தகம், எழுது பொருட்கள் 100 பெண்களுக்கு சேலை, 30 தூய்மை பணியாளர் களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் பொதுமக்களுக்கு மதிய உணவாக சிக்கன் பிரியாணி ஆகிய வற்றை புஸ்ஸி ஆனந்து வழங்கினார்.
நிகழ்ச்சியில் விஜய் மக்கள் இயக்க விழுப்புரம் மாவட்ட பொருப்பாளரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவருமான பரணி பாலாஜி, விழுப்புரம் மாவட்ட தலைவர் மோகன், விழுப்புரம் தெற்கு மாவட்ட தொண்டர் அணி தலைவர் சக்திவேல் விழுப்புரம் மாவட்ட துணைத்தலைவர் வடிவேல் மற்றும் விழுப்புரம் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க கோட்ட குப்ப நகர செயலாளரும் நகர மன்ற உறுப்பினருமான முகமது கவுஸ் மற்றும் நிரஞ்சன், முரளி, சுந்தர், சந்துரு, பாண்டியன் ஆகியோர் செய்திருந்தனர்.
- ஜீவானந்தபுரத்தில் உள்ள நாடார் உறவின் முறை நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது.
- புதுவை யுக பாரதி வரவேற்புரை யாற்றினார்.
புதுச்சேரி:
புதுவை ஜீவானந்தபுரத்தில் உள்ளா அய்யா மாரியப்பன் சுந்தரா ம்பாள் அறக்கட்டளை சார்பில், தட்டச்சு பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி வாழ்த்தி வழியனுப்பு விழாவும் புதுவை யுக பாரதி எழுதிய ஆய்வு நூல் வெளியீட்டு விழாவும் ஜீவானந்தபுரத்தில் உள்ள நாடார் உறவின் முறை நிகழ்ச்சி அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை நிறுவனர் மாரியப்பன் தலைமை தாங்கினார். புதுவை யுக பாரதி வரவேற்புரை யாற்றினார்.
நண்பர்கள் தோட்ட தலைவர் திருநாவுக்கரசு நோக்க உரையாற்றினார். ஜீவானந்தபுரம் கிராம குழுதலைவர் சபாநாயகம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக லாஸ்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. வைத்தியநாதன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.
ராஜூவ் காந்திகால்நடை மருத்துவ கல்லூரி முதன்மை மருத்துவர் வீராசாமி செழியன் நூலை வெளியிட்டார். அதனை டாக்டர் யுக பாரதி அரிகிருஷ்ணன், என் சஜினீயர் தமிழமுது ஆகியோர் பெற்றுக்கொ ண்டனர். கலைமாமணி முருகன், பாவளர் உசேன், புதுவை ஸ்மார்ட் சிட்டி கழகத்தின் பொது மேலாளர் திருஞானம், கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். முடிவில் தேன்மொழி கோபலன் நன்றி கூறினார்.
- புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ மனையில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ மனையில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மருத்துவ மற்றும் செவிலியர் மாணவ- மாணவிகள் பங்கேற்ற கேரள பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் உறியடி நிகழ்ச்சி நடந்தது. மாணவிகளின் அத்தப்பூ கோலம் அனைவரையும் கவர்ந்தது.முடிவில் அனைவருக்கும் ஓணம் பண்டிகை விருந்தாக கேரள உணவு வகைகள் பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் டாக்டர் ஸ்டாலின், வளாக வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நிர்வாகி பிரசன்னா, செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி மற்றும் அலைய்டு ஹெல்த் சயின்ஸ் டீன் ஆலிஸ் கிஸ்கு உள்ளிட்ட அனைத்து துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- பேச்சுமொழி நோயியல் துறை சார்பில் கதிருப்பு கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
- பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
புதுச்சேரி:
விநாயகாமிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் பல்கலை கழக துணைத்தலைவர் சந்திரசேகர், இயக்குனர் அருணா தேவி ஆலோசனை யின்படி காரைக்கால் விநாயகாமிஷன் மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்கூல் ஆப் அலைடு ஹெல்த் சயின்ஸ், ஒலியியல் மற்றும் பேச்சுமொழி நோயியல் துறை சார்பில் கதிருப்பு கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
பெற்றோர்களுக்கு பேச்சு மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ள குழந்தைகளை கண்டறிவது மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி முகாம் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த முகாமில் இணை பேராசிரியர் ரம்யா, உதவி பேராசிரியர் அருண்குமார், செவித்திறனியல் ஆர்த்தி ஆகியோர் பங்கேற்று காரைக்கால் பகுதி மற்றும் தமிழக கிராம பகுதிகளில் வந்த பேச்சு, செவித்திறன் குறைபாடு உள்ளவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்ட வர்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.
- மாணவ-மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
- பதக்கம் வென்ற 6 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.
புதுச்சேரி:
கிருமாம்பாக்கம் அடுத்த பி ள்ளையார் குப்பம் ஸ்ரீபாலாஜி வித்யாபீத் நிகர்நிலை பல்கலை கழகத்தில் மருத்துவ மாணவ-மாணவி களுக்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பல் கலைக்கழக வேந்தர் ராஜகோபாலன் தலைமை தாங்கினார். பாட்னா எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி இயக்குனர் கோபால் கிருஷ்ணபால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதக்கம் வென்ற 40 மாணவர்கள், சென்னை ஸ்ரீசத்யா சாய் மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் பதக்கம் வென்ற 6 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கினார்.
மேலும் பல்கலைக்கழகத்தின் வேந்தர் ராஜகோபாலன், 804 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 554 பேர், ஸ்ரீசத்யா சாய் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 250 பே ர் அடங்குவர்.
2-வது நாளாக நடை பெற்ற பல் மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலிய மாணவர்கள் பட்டமளிப்பு விழாவில், புதுடெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியின் பேராசிரியர் அஜய் லோகினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியின் பதக்கம் வென்ற 27 மாணவர்கள், கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியின் பதக்கம் வென்ற 26 மாணவர்களுக்கும் பதக்கங்களை வழங்கினார்.
தொடர்ந்து ஸ்ரீபாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக வேந்த ர், இந்திராகாந்தி பல் மருத்துவக்கல்லூரியின் 163 பேருக்கும், கஸ்தூரிபா காந்தி செவிலியர் கல்லூரியை சேர்ந்த 264 பே ருக்கும் பட்டங்களை வழங்கினார்.
விழாவில் முன்னதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நிகர் ரஞ்சன் பிஸ்வாஸ் ஆண்டு அறிக்கையை வாசித்தார்.
- புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் வருடாந்திர மின் உபகரண சோதனை பணிகள் நடைபெற உள்ளது.
- நீடராஜப்பய்யர் வீதி முதல் சுப்பய்யா சாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மரப்பாலம் துணை மின் நிலையத்தில் வருடாந்திர மின் உபகரண சோதனை பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 9.30 மணிமுதல் மதியம் 2 மணிவரை வம்பா கீரப்பாளையம், திப்புராயப்பேட்டை கோவிந்த சாலை, மற்றும் அண்ணா சாலை முதல் கடற்கரை சாலை வரையும், நீடராஜப்பய்யர் வீதி முதல் சுப்பய்யா சாலை வரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
இதுபோல் தொண்டமாநத்தம்- தேத்தாம்பாக்கம் மின் பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை துத்திப்பட்டு கிராமம் உயர்மின் அழுத்த தொழிற்சாலைகள் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படு கிறது.
- ராஜகோபாலன் 3-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அரியாங்குப்பம் மணவெளி வாட்டர் டேங்க் அருகில் நடந்தது.
- பின்னர் பொது மக்களுக்கு வேட்டி,துண்டு-அன்னதானம் வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரிச்சுவடி மனநலமைய சேர்மன் பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலன் 3-ம் ஆண்டு நினைவு நாள் நிகழ்ச்சி அரியாங்குப்பம் மணவெளி வாட்டர் டேங்க் அருகில் நடந்தது.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கலந்து கொண்டு அலங்கரிக்கப்பட்ட பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலன் உருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பொது மக்களுக்கு வேட்டி,துண்டு-அன்னதானம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் டாக்டர் அரவிந்தன் மணவெளி ஊர் முக்கியஸ்தர்கள் காமராஜ், கணேஷ்குமார், கணேசன், செல்வம், சதீஷ், ஆனந்தன், நடராஜன், விஜயகணபதி, மற்றும் பலர் கலந்து கொண்டனர். மேலும் ரோட்டரி கிளப் ஆப் பாண்டிச்சேரி பிரெஞ்சு சிட்டி தலைவர் சீனிவாசன், செயலாளர் ராமச்சந்திரன், முன்னாள் தலைவர் சதீஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பேராசிரியர் கபாலி என்ற ராஜகோபாலன் உருவபடத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை அரிச்சுவடி இயக்குனர் டாக்டர் இளவழகன் ஆத்திசூடி பள்ளி தாளாளர் டாக்டர் சத்தியவண்ணன் மற்றும் அரிச்சுவடி டிரஸ்டி அரசம்மா தேவி ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.
- விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு செப்.17-ந் தேதி என அறிவித்துள்ளது.
- அமாவாசைக்கு 6 நாட்கள் முன்பும் அமாவாசைக்கு 4 நாட்கள் பின்பு என 10 நாள் உற்சவமாக கொண்டாடுகின்றனர்.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்தி செப்டம்பர் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆனால் அதற்கு ஒருநாளுக்கு முன்பாக அரசு விடுமுறை அறிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாங்கம் என்பது திதி, நட்சத்திரம், யோகம், கரணம், வாரம் ஆகிய 5 விஷயங்களின் தொகுப்புகளை வைத்து கணிக்கப்படுகிறது. திருக்கணிதம், வாக்கியம் என பஞ்சாங்கத்தில் 2 வகை உண்டு.
தமிழகத்தில் அதிகளவில் பயன்படும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி செப்.18-ந் தேதியும், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி செப்.19-ந் தேதியும்தான் விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட வேண்டும்.
ஆனால் விநாயகர் சதுர்த்தி விடுமுறையை தமிழக அரசு செப்.17-ந் தேதி என அறிவித்துள்ளது. எதன் அடிப்படையில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரியவில்லை என ஜோதிடர்கள், பஞ்சாக கணிப்பாளர்கள், ஆன்மீக வாதிகள்தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஆற்காடு கா.வெ.சீத்தாராமைய்யர் சுத்த வாக்கிய சர்வமுகூர்த்த பஞ்சாங்க கணிதர் சுந்தர ராஜன் அய்யர் கூறியிருப்ப தாவது:-
விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18-ந் தேதி தான் கொண்டாடப்படுகிறது. பொதுவாக அமாவாசையில் இருந்து நான்காவது நாளே சதுர்த்தி வரும். அதன் அடிப்படையில் ஆவணி மாத அமாவாசையில் இருந்து 4-ம் நாளான செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும். இந்த விஷயத்தில் குழப்பம் தேவையில்லை.
செப்டம்பர் 18-ந் தேதி காலை 11.28 மணிக்கு சதுர்த்தி தொடங்கி 19-ந் தேதி காலை 11.44 மணிக்கு முடிவடைகிறது.
இந்த சதுர்த்தி நேரத்திலேயே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
தமிழகத்தில் 18-ந் தேதி தான் விநாயகர் சதுர்த்தி இதில் எந்த மாற்றமும் இல்லை. வட மாநிலங்களில் 19-ந் தேதி கொண்டாடப்படலாம். அங்கு அமாவாசைக்கு 6 நாட்கள் முன்பும் அமாவாசைக்கு 4 நாட்கள் பின்பு என 10 நாள் உற்சவமாக கொண்டாடுகின்றனர்.
விநாயகர் சதுர்த்தி அன்று விளாம்பழம், கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரை பொங்கல், லட்டு, தேங்காய் கொண்டு செய்த பலகாரங்கள் படையலிட்டு விநாயகரை வழிபடுங்கள்.
விநாயகரை வழிபட்டால் செல்வம் பெருகும், பேரும் புகழும் கிடைக்கும் என்றார்.
இதேபோல் மேலும் ஜோதிடர்கள் கூறியிருப்பதாவது:-
திருச்சி மலைக் கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலிலும் செப்டம்பர் 18-ந் தேதியே விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் செப்.18-ந் தேதி தேரோட்ட மும், மறுநாள் தீர்த்தவாரியும் நடக்கிறது.
காஞ்சி சங்கர மடத்தில் பண்டிதர்கள், பஞ்சாங்க வெளியீட்டாளர்கள் பங்கேற்ற சதஸ் எனும் கூட்டம் நடந்தது. இதில் செப்.18-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த் தியை கொண்டாடு வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அனைத்து கோவில்களிலும் செப்டம்பர் 18-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளைதான் அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று ஜோதி டர்கள், ஆன்மீகவாதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
- காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
- போலீசார் பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி (வயது 21). இவர் புதுச்சேரி மதகடிப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி 4-ம் ஆண்டு படித்து வந்தார்.
திருபுவனை பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (31). இவர் என்ஜினீயரிங் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தியவர். இவர் தனது நண்பரை பார்ப்பதற்காக பிரியதர்ஷினி படித்த தனியார் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கடி சென்றுள்ளார். அப்போது பிரியதர்ஷினியை சந்தித்த நிலையில் இருவரும் காதலித்துள்ளனர்.
இந்த நிலையில் காதலர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனவேதனை அடைந்த பிரியதர்ஷினி கடந்த 16.5.2012 அன்று விடுதி அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து மாணவியின் பெற்றோர் திருபுவனை போலீசில் புகார் செய்தனர். போலீசார் பிரியதர்ஷினியை தற்கொலைக்கு தூண்டியதாக பிரதீப் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இது தொடர்பான வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் விசாரணை அனைத்தும் முடிவடைந்த நிலையில் தீர்ப்பு கூறப்பட்டது. இதில் பிரதீப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.






