என் மலர்
புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவமனையில் அத்தப்பூ கோலமிட்டு ஓணம் பண்டிகை கொண்டாடிய காட்சி.
பிம்ஸ் மருத்துவமனையில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
- புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ மனையில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.
- கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை கனக செட்டிக்குளத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ மனையில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
மருத்துவ மற்றும் செவிலியர் மாணவ- மாணவிகள் பங்கேற்ற கேரள பராம்பரிய கலைநிகழ்ச்சிகள் மற்றும் உறியடி நிகழ்ச்சி நடந்தது. மாணவிகளின் அத்தப்பூ கோலம் அனைவரையும் கவர்ந்தது.முடிவில் அனைவருக்கும் ஓணம் பண்டிகை விருந்தாக கேரள உணவு வகைகள் பரிமாறப்பட்டது.
நிகழ்ச்சியில் துணை முதல்வர் டாக்டர் ஸ்டாலின், வளாக வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு நிர்வாகி பிரசன்னா, செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி மற்றும் அலைய்டு ஹெல்த் சயின்ஸ் டீன் ஆலிஸ் கிஸ்கு உள்ளிட்ட அனைத்து துறை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story






