என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மும்பை, டெல்லி, கோவா, காரைக்குடி என நாடு முழுவதுமிலிருந்து இந்த கார்கள் பங்கேற்றன.
    • கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற கார்களின் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    புதுவை சுற்றுலாத்துறை மற்றும் சென்னை பாரம்பரிய வாகன கழகம் சார்பில் கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுவையில் ஆண்டுதோறும் பாரம்பரிய கார்களின் கண்காட்சி நடைபெற்று வந்தது.

    பின்னர் கொரோனா காலத்தில் கண்காட்சி நடைபெறவில்லை. இந்த நிலையில் மீண்டும் பாரம்பரிய கார் கண்காட்சி புதுவை கடற்கரை சாலையில் நேற்று மாலை நடந்தது.

    கண்காட்சியில் 1926 முதல் 1980 வரையில் பயன்பாட்டில் இருந்த ரோல்ஸ் ராயல், நாட்டிலே தனித்துவமான பழமையான ஒரே போர்டு பேன்சி, ஜாக்குவார், எம்.ஜி. டார்ஜ், செவர்லெட், போர்டு, பியுசியட், ஆஸ்டின் மற்றும் மெர்சடஸ் பென்ஸ் போன்ற உலக புகழ்பெற்ற கார் நிறுவனங்களின் 36 கார்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    மும்பை, டெல்லி, கோவா, காரைக்குடி என நாடு முழுவதுமிலிருந்து இந்த கார்கள் பங்கேற்றன.

    அதேபோல் முந்தைய கால 10 மோட்டார் சைக்கிள்களும் கண்காட்சியில் இடம் பெற்றிருந்தன. ஒவ்வொரு காரிலும் அந்தந்த கார்களின் உரிமையாளர், தயாரிக்கப்பட்ட ஆண்டு போன்ற விவரங்களும் குறிப்பிடப்பட்டிருந்தன.

    கடற்கரை சாலையில் அணிவகுத்து நின்ற கார்களின் கண்காட்சியை முதலமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன், பாஸ்கர் எம்.எல்.ஏ, தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    பழமையான கார்களை பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

    மேலும், அந்த கார்கள் முன்பு நின்றபடி செல்பி எடுத்துக்கொண்டனர். இந்த கார்கள் அனைத்தும் இன்று காலை புதுவையில் இருந்து புறப்பட்டு சென்றன.

    • வாட்ஸ்அப் மூலம் சாமிநாதனுக்கு ஸ்கிரீன் ரெக்கார்டு படத்தை அனுப்பியுள்ளார்.
    • ராஜஸ்தான் வாலிபர் செல்போனில் மிரட்டல் விடுத்த நம்பரை கொண்டு விசாரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பா.ஜனதா தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. சாமிநாதன். இவரது வீடு, லாஸ் பேட்டை பெத்து செட்டிபேட்டை புது வீதியில் உள்ளது.

    இவரது செல்போனுக்கு வாட்ஸ்அப் மூலமாக ஒரு பெண் ஆடையின்றி ஆபாசமாக வீடியோ காலில் தோன்றியுள்ளார். இதை பார்த்து திடுக்கிட்ட சாமிநாதன், உடனடியாக அந்த வீடியோ அழைப்பை துண்டிப்பு செய்தார்.

    அதன்பிறகு, வாட்ஸ்அப் மூலம் சாமிநாதனுக்கு ஸ்கிரீன் ரெக்கார்டு படத்தை அனுப்பியுள்ளார். அது, யூ-டியூப்பில் வீடியோ உள்ளடக்கத்தை பதிவேற்று வதற்கான ஸ்கிரீன் ஷாட் படமாக இருந்தது. வாட்ஸ் அப்பில் அந்த பெண் ஆபாசமாக தோன்றிய வீடியோ அழைப்பை பதிவு செய்து அனுப்பியதுடன், மேலும் சாமிநாதன் பேசுவது போல் சித்தரித்தும் இருந்துள்ளது.

    அதன்பிறகு அவருக்கு செல்போனில் வேறொரு நம்பரில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய ஆண் நபர், ரூ.50 ஆயிரம் பணம் தர வேண்டும். தராவிட்டால் ஆபாச வீடியோவை யூ-டியூப்பில் பதிவேற்றம் செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.

    இதுகுறித்து சாமிநாதன், புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர்கள் கார்த்தி

    கேயன், கீர்த்தி தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டிய நபர்களை தேடி வருகின்றனர்.

    ராஜஸ்தான் வாலிபர் செல்போனில் மிரட்டல் விடுத்த நம்பரை கொண்டு விசாரித்தனர். இதில் அந்த நபர், ராஜஸ்தானில் இருந்து பேசியது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபரின் பெயர், ஊர் விவரத்தை கண்டுபிடித்து பிடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்
    • நாடார் சமுதாய மாணவ-மாணவி களுக்கு கல்விப்பரிசு வழங்கும் விழா சித்தன்குடியில் உள்ள டி.எஸ்.கே. அண்ணா மலை நாடார் வளாகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி நாடார் உறவின் முறை சங்கம் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2022-23-ம் கல்வி

    யாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத்தேர்வில் 75 சதவீதத்துக்கு மேல் மதிப் பெண் வாங்கிய நாடார் சமுதாய மாணவ-மாணவி ளுக்கு கல்விப்பரிசு வழங்கும் விழா சித்தன்குடியில் உள்ள டி.எஸ்.கே. அண்ணா மலை நாடார் வளாகத்தில் நடந்தது.

     விழாவுக்கு புதுச்சேரி நாடார் உறவின் முறை சங்க தலைவர் ராஜசேகரன் நாடார் தலைமை தாங்கினார். செயலாளர் மாரிமுத்து நாடார் முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக முதல்-அமைச்சர் ரங்கசாமி, ஜான்குமார் எம்.எல்.ஏ., நாடார் மகாஜன சங்க மதுரை இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் அவனிமாடசாமி நாடார், பவர் சோப் நிறுவன மேலாண் இயக்குனர் தனபால் நாடார், பொன்வண்டு சோப் மேலாண் இயக்குனர் சரவணன் நாடார் ஆகியோர் கலந்து கொண்டு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.

    விழாவில் முதல்- அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    கல்வி என்றவுடன் நமக்கு நினைவுக்கு வருபவர் கல்வி கண் திறந்த காமராஜர் தான். அடிப்படை கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என அவர் விரும்பினார். புதுச்சேரி அரசு பெருந் தலைவர் காமராஜர் பெயரில் கல்வி, வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்

    களை செயல்படுத்தி வருகிறது. கல்வி ஒவ்வொருவரின் வாழ்வின் உயர்வுக்கு முக்கியமானது. அனைவருக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் எண்ணம். இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக பொருளாளர் பழனிவேல் நாடார் வரவேற்றார். விழாவை தாமோதரன் நாடார் தொகுத்து வழங்கினார். இதில் தொழிலதிபர்கள் பாஸ்கரன், கணேஷ், அண்ணா மலை பிரபு மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அவைத்தலைவர் ராமபாண்டி நாடார் நன்றி கூறினார்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • ரூ. 3 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை பாகூர் கொம்யூன் சோரியாங் குப்பம், குருவிநத்தம் கிராமத்துக்கு சுடுகாடுக்கு செல்ல தென்பெண்ணை யாற்றின் குறுக்கே ரூ.1 கோடியே 32 லட்சத்தில் பாலம் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதற்கான பணிகளை முதல்-அமைச்சர் ரங்கசாமி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

    விழாவில் அமைச்சர் லட்சுமி நாராயணன், செந்தில்குமார் எம்.எல்.ஏ, பொதுப்பணித் துறை தலைமை பொறி யாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், செயற்பொறி யாளர் ராதா கிருஷ்ணன், உதவி பொறியாளர் ராஜன், இளநிலை பொறியாளர் ஜெயரமணன், ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஏம்பலம் தொகுதி கிருமாம்பாக்கம் முதல் ஆதிங்கப்பட்டு வரை உள்ள சாலை, பிள்ளையார் குப்பத்திலிருந்து பின்னாச்சி குப்பம் வழியாக பாகூர் செல்லும் சாலை குண்டும் குழியுமாக பல ஆண்டுகளாக இருந்து வந்தது.

    இதனால் போக்குவ ரத்துக்கு சிரமமாக இருந்தது. இது குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் லட்சுமி காந்தன் எம்.எல்.ஏ தொடர்ந்து வற்புறுத்தலின் பேரில் 2 முக்கிய சாலைக்கு நபார்டு வங்கியின் கடன் மூலம் ரூ. 3 கோடியே 98 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.

    இதற்கான பூமி பூஜை இன்று காலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கி பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமி நாராயணன், துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தலைமை பொறியாளர் பழனியப்பன், செயற்பொறியாளர் சந்திர குமார், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்
    • வேளாண் அறிவியல் நிலையத்தின் பண்ணை மேலாளர் அமலோற்பவ நாதன் நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுவை குரும்பாப்பட்டில் உள்ள பெருந்தலைவர் காமராசர் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகள், உற்பத்தி யாளர்கள் சங்கங்களுக்கு திறன்மிகு மேலாண்மை பற்றிய பயிற்சி 5 நாட்கள் நடக்கிறது.

    ஜெய்ப்பூரில் இயங்கும் மத்திய அரசின் தேசிய வேளாண்மை சந்தைப்படுத்துதல் நிறுவன நிதி உதவியுடன் நடைபெறும் இந்த பயிற்சி முகாமின் தொடக்கவிழா இன்று நடந்தது. வேளாண் துறை அமைச்சர் தேனீ. ஜெயக்குமார் தலைமை வகித்து பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.

    அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசுப்பிரமணியன் வரவேற்றார்.

    நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் சித்தார்த்தன், ஜெய்ப்பூர் தேசிய வேளாண்மை சந்தைப் படுத்துதல் நிறுவனத்தின் துணை இயக்குநர் சிங் நோக்க உரையாற்றினர். வேளாண் அறிவியல் நிலையத்தின் பண்ணை மேலாளர் அமலோற்பவ நாதன் நன்றி கூறினார்.

    பயிற்சியில் புதுவையை சேர்ந்த 5, காரைக்காலை சேர்ந்த ஒரு விவசாயிகள் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் 36 உறுப்பினர்கள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர்.

    • அரங்கம் 6 ஆயிரத்து 321 சதுரமீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.
    • புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும்.

    புதுச்சேரி:

    புதுவை சிறந்த பொழுது போக்கு சுற்றுலா நகரமாக உருவெடுத்து வருகிறது.

    புதுவையில் திறந்தவெளி பொதுழுபோக்கு அரங்கம் இல்லை. காந்தி திடலில் சிறிய அரங்கம் மட்டுமே உள்ளது. அனைத்து வசதிக ளுடன் கூடிய பிரம்மாண்ட திறந்தவெளி பொழுது போக்கு அரங்கம் அமைக்க அரசு திட்டமிட்டது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவை பழைய துறைமுக வளாகத்தில் ரூ.4 கோடியே 42 லட்சத்தில் பிரமாண்ட திறந்தவெளி பொழுது போக்கு அரங்கம் அமைக்க பூர்வாங்க பணிகள் முடிக்கப்பட்டன.

    கடந்த ஜனவரியில் பொதுப்பணித்துறை சார்பில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டது. இந்த அரங்கம் 6 ஆயிரத்து 321 சதுரமீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டு வருகிறது.

    தற்போது இரு பக்கமும் கேலரி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த அரங்கில் பிரமாண்ட மேடை, ஆண், பெண் கலைஞர்களுக்கு 2 அறைகள், 3 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வசதி, ஆயிரத்து 675 சதுரமீட்டரில் 400 வி.ஐ.பி.க்கள் அமரும் கேலரி அமைக்கப்பட உள்ளது.

    420 சதுரமீட்டரில் கடல் அழகை ரசிக்கும் வசதி உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளது. இந்த அரங்கம் அமைக்கப்பட்டால் புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக அமையும்.

    • அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.
    • விழாவிற்கான ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி சந் துரு, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    கிருமாம்பாக்கம் ஆறுபடை வீடு மருத்துவக்கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரி மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா பெரிய காட்டுப் பாளையம் ஜனனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    விழாவிற்கு அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை டீன் செந்தில்குமார் தலைமை தாங்கி, சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார்.

    புதுச்சேரி பிரிவு கல்லூரி இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்றார். தமிழ்நாடு மாநில காசநோய் பிரிவு கூடுதல் இயக்குனர் மற்றும்

    மருத்துவ கிராமப்புறசுகாதார சேவை அதிகாரி ஆஷா பெட்ரிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 250 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

    விநாயக மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் ஐ.கியூ.எ.சி.அமைப்பின் இயக்குனர் ஞானசேகர் வாழ்த்துரை வழங்கினார்.

    தொடர்ந்து துறை வாரியாக பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றவர்களுக்கு 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலப் பதக்கம் வழங்கப்பட்டன.

    முடிவில் ஒருங்கிணைப்பாளர் வளர்மதி நன்றி கூறினார்.

    விழாவிற்கான ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி சந் துரு, கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    • போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையிலும், தலையிலும் ,காலிலும் காயம் அடைந்த வாறு சிகிச்சை பெற்று கட்டு கட்டிக் கொண்டு ஈடுபட்ட னர்.
    • விளையாட்டு மைதானம், அரசு கலைக் கல்லூரி, உள்விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம், பாகூர் ஏரியை சுற்று லாத்தலம் ஆகிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற கோரி உள்ளனர்.

    புதுச்சேரி:

    பாகூர் நகர கிளை, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நூதன போராட்டம்  நடைபெற்றது.

    இந்த போராட்டத்திற்கு கிளைச் செயலாளர் முருகை யன் தலைமை தாங்கினார். கல்கி, செல்வராசு முன்னிலை வகுத்தார். மாநில செயற்குழு உறுப்பி னர்கள் பெருமாள், பிரபு ராஜ், கொம்யூன் செயலாளர் சரவணன், கொம்யூன் குழு கவுசிகன், மாநில குழு இளவரசி ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்தப் போராட்டத்தில் பாகூர் கொம்யூன் முழு வதும் சாலைகள் சவக்குழியாய் மாறி, சாவின் அச்சத்தில் பயணிக்கும் மக்களை காப்பாற்ற கோரி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கையிலும், தலையிலும் ,காலிலும் காயம் அடைந்த வாறு சிகிச்சை பெற்று கட்டு கட்டிக் கொண்டு ஈடுபட்ட னர். இதனால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.

    மேலும் இப் போராட் டத்தில் அறிவிப்பின்றி தொடர்ந்து மின்தடை ஏற்படுவதை சரி செய்து தடையற்ற மின்சாரம் வழங்க வேண்டும். பாகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி அதிக படுக்கை கொண்ட நல்ல வழி மையமாக மாற்றி தர வேண்டும். விளையாட்டு மைதானம், அரசு கலைக் கல்லூரி, உள்விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம், பாகூர் ஏரியை சுற்று லாத்தலம் ஆகிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற கோரி உள்ளனர்.

    • அ.ம.மு.க. இணைச்செயலாளர் லாவண்யா பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அரும்பார்த்தபுரம் பேட் பகுதியில் அமைந்துள்ள செங்கழுநீர் அம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது.

    8-ம் நாள் விழா மற்றும் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு அம்மனுக்கு நலுங்கு வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அ.ம.மு.க. வடக்கு மாநில இணைச்செயலாளர் லாவண்யா கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

    தொடர்ந்து விழாவில் கலந்துகொண்ட சுமார் 500-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் கார் வருகையை நோக்கி வாகனங்களை நிறுத்தம் செய்து அனுப்பி வந்தனர்.
    • காயமடைந்தவர்களை போலீசார் உதவியுடன் அப்பகுதி மக்கள் மீட்டு கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    முதல்-அமைச்சர் ரங்கசாமி கிருமாம்பாக்கம் பகுதியில் திட்ட பணி தொடக்க நிகழ்ச்சிக்கு இன்று காலை வந்தார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    போக்குவரத்து போலீசார் பல இடங்களில் முதல்-அமைச்சர் கார் வருகையை நோக்கி வாகனங்களை நிறுத்தம் செய்து அனுப்பி வந்தனர்.

    இந்த நிலையில் முதல்-அமைச்சர் பிள்ளையார் குப்பம் பகுதியில் நடந்த பூமி பூஜையை முடித்துக் கொண்டு பாகூரை நோக்கி கடலூர்-புதுச்சேரி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது பாகூரிலிருந்து புதுச்சேரி நோக்கி வந்த இரு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளா கியது.

    இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்களை போலீசார் உதவியுடன் அப்பகுதி மக்கள் மீட்டு கிருமாம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    முதல்-அமைச்சர் ரங்கசாமி வருகையின் போது நடந்த இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
    • புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் கீதா, சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    புதுச்சேரி:

    வேலூர் பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் 12-ம் வகுப்பு வரை படித்துவிட்டு வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்துள்ளார்.

    பெற்றோரை இழந்த அந்த இளம்பெண் புதுவைக்கு வேலை தேடி கடந்த 5 மாதத்திற்கு முன்பு இங்கு வந்தார். புதுவையில் இயங்கி வரும் பிரபல ஜவுளிக்கடையில் வேலைக்கு சேர்ந்தார். அந்தப் பெண்ணுக்கும் அதே துணிக்கடையில் வேலை பார்த்து வந்த மரக்காணம் மாரியம்மன் கோயில் வீதியை சேர்ந்த சதீஷ்குமார் (24 )என்பவ ருக்கும் காதல் ஏற்பட்டது.

    சதீஷ்குமார் அந்த இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்த சதீஷ்குமார் திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார்.

    அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண் இதுகுறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீஸ் நிலை யத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ் பெக்டர் கீதா, சதீஷ்குமார் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் வேலூரைச் சேர்ந்த இளம் பெண்ணை ஆசை வார்த்தைக் கூறி அவரிடம் உல்லாசம் அனுப வித்து விட்டு ஏமாற்றியது தெரிய வந்தது. இதையடுத்து சதீஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.

    • புதுவை கிழக்கு கடற்கரை சாலை விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதாரம் மையத்தில் நடைபெற்றது.
    • கட்-அவுட் வைப்பதை தடை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவை சார்பில் கவிதை போட்டி மற்றும் சிந்தனையரங்கம் புதுவை கிழக்கு கடற்கரை சாலை விளிம்பு நிலை மக்கள் வாழ்வாதாரம் மையத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேரவை தலைவர் கோ.செல்வம் தலைமை தாங்கினார். ராமதாஸ்காந்தி, வீரசேகரன், சுசீலா, இடைகழிநாடு செல்வமணி, ராஜாராம், கவுசல்யாதேவி, மணிமேகலை, காமராசு, விசாலாட்சி, பரமேஸ்வரன், திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதனை தொடர்ந்து நடந்த கவியரங்கை சரவஸ்வதி வைத்தியநாதன் நெறி ஆளுகை செய்தார்.

    புதுவை மாநில பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை மற்றும் சி.பி.எஸ்.சி. பாட முறையில் எதிர் கொள்ளும் சவால்கள் குறித்து பேசினார்.இதைத்தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டது. புதுவை அரசு வருகிற அக்டோபர் 15-ந் தேதிக்குள் தமிழ் வளர்ச்சி துறையினை அமைத்து ஆணை வெளியிட வேண்டும்.

    புதுவையில் நடு ரோட்டில் பேனர், கட்-அவுட் வைப்பதை தடை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×