என் மலர்
புதுச்சேரி
- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்
- குடிநீர் நீர் தேக்க தொட்டி பொறுப்பாளர் பாலு மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதிக் குட்பட்ட கூடப்பாக்கம் கிராமத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. மேலும் கூடப்பாக்கம் சுற்று வட்டார பகுதிகளில் வணிக வளாகங்கள் தொழிற்சாலை களும் உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் குடிநீர் தேவை அதிகம் உள்ளது.
தற்போதைய குடிநீர் குழாய்கள் மூலம் போதுமான குடிநீர் பொதுமக்களுக்கு இருந்தாலும், எதிர் வரும் காலத்தில் குடி தண்ணீர் பற்றாக்குறை போக்கும் விதமாக ஊசுடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் வளாகத்தில் உள்ள பொதுப்பணித்துறை கட்டிடம் அருகே புதிய போர்வெல் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது.
ரூ.35.29 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை போர்வெல் அமைக்கும் பணியை ஊசுடு தொகுதி எம்.எல்.ஏ.வும் குடிமை பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை இளநிலை பொறியாளர் திரு வேங்கடம், உதவி பொறியாளர், பீனா ராணி, கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கர், பா.ஜனதா ஊசுடு தொகுதி தலைவர் சாய்.தியாகராஜன், கட்சி நிர்வாகிகள்,கூட்டணி கட்சி நிர்வாகிகள், குடிநீர் நீர் தேக்க தொட்டி பொறுப்பாளர் பாலு மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் ஆவேசம்
- ஒருங்கிணைப்பாளரின் காலில் விழுந்து தனது ஆட்சியை காப்பாற்ற மன்றாடிய எடப்பாடி பழனிசாமி இப்போது ஏளனம் பேசுவது ஏற்புடையதல்ல.
புதுச்சேரி:
முன்னாள் எம்.எல்.ஏ. ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய தொண்டர்க ளால்தான் அ.தி.மு.க. உருவானது. அ.தி.மு.க.வின் அடிப்படை அஸ்தி வாரத்தையே அபகரித்து தனது சுயநலத்திற்கு பயன்படுத்த முயற்சிக்கும் சுயநல கூட்டத்தின் முயற்சியை எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகியோரின் ஆசியோடு, மூத்த நிர்வாகிகள் துணையோடு ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சின் மீட்கும் முயற்சி வெற்றி பெறும்.
ஒருங்கிணைப்பாளரின் காலில் விழுந்து தனது ஆட்சியை காப்பாற்ற மன்றாடிய எடப்பாடி பழனிசாமி இப்போது ஏளனம் பேசுவது ஏற்புடையதல்ல. இவர் தலைமையேற்று சந்தித்த 9 தேர்தலிலும் கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
ஆனால் 9 முறை நீதிமன்றத்தில் வெற்றி பெற்றதாக மார்தட்டிக் கொள்வது மக்கள் மன்றத்தில் தோற்று போனதை மறைக்கும் செயலாகும்.
ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்.சை பொறுத்த வரை தொண்டர்கள் தான் கட்சியின் ஆணிவேர் தொண்டர்களின் முடிவே எங்கள் முடிவு. தொண்டர்க ளுக்காகத்தான் இயக்கம் என்று எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வகுத்த கொள்கை கோட்பாடுகளை மையமாகக் கொண்டு திகழ்ந்து வருகிறார்.
மூல வழக்கு நிலுவையில் உள்ள போது கொடியையும் சின்னத்தையும் இவர்கள்தான் பயன்படுத்த வேண்டும் அவர்கள்தான் பயன்படுத்த வேண்டும் என்று எந்த ஒரு தீர்ப்பிலோ தேர்தல் ஆணையமோ இதுவரை சொல்லவில்லை.
இந்த நிலையில் தனது தேவைக்காக சசிகலா, டி.டி.வி. தினகரன் ஆகியோர் காலில் விழுந்த அரசியல் வியாபாரிகள் கட்சி கொடி, சின்னம் பயன்படுத்த கூடாது என்று ஜெயலலிதா வழிவந்த உண்மை தொண்டர்களிடம் கூறுவதை நிறுத்த வேண்டும்.
ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியான ஓ.பி.எஸ். கரத்தை வலுப்படுத்த தொடர்ந்து எனது தலைமையில் புதுவை விசுவாசிகள், நிர்வாகிகள் செயல்படுவார்கள்.
இவ்வாறு ஒம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.
- மாணிக்க கவுண்டரின் மருமகள் வாசுகி கணவரை விட்டு பிரிந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
பாகூர் கிழக்கு வீதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது58). இவர் அரங்கனூரை சேர்ந்த மாணிக்க கவுண்டருடன் குடும்ப நண்பராக பழகி வந்தார்.
இதற்கிடையேமாணிக்க கவுண்டரின் மருமகள் வாசுகி கணவரை விட்டு பிரிந்து இருவருக்கும் விவாகரத்து வழக்கு நடந்து வருகிறது.
இந்த நிலையில் மணிவண்ணனிடம் மாணிக்க கவுண்டர் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சொன்னார்.
அதன் அடிப்படையில் மணிவண்ணன் இந்த வழக்கு குறித்து விசாரித்து மாணிக்க கவுண்டரிடம் தெரிவித்தார்.
இதனையறிந்த வாசுகி சம்பவத்தன்று மணிவண்ணன் அங்குள்ள டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது அவரது செல்போனில் ேபசிய வாசுகி நீ யாருடா என் குடும்ப விஷயத்தில் தலையிட, இனி உன்னை விடமாட்டேன், உன்னை ஆள் வைத்து தீர்த்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் மனஉளைச்சல் அடைந்த மணிவண்ணன் இதுகுறித்து பாகூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
- பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
புதுச்சேரி:
புதுச்சேரி குருமாம்பேட் பகுதியில் கூட்டுறவு பால் உற்பத்தி (பாண்லே) நிறுவனம் இயங்கி வருகிறது.
இங்கு 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிறுவனத்தின் மூலம் புதுவை மக்களுக்கு நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் லிட்டர் பால் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிறுவனத்துக்கு புதுவை விவசாயிகளிடமிருந்து 55 முதல் 60 ஆயிரம் லிட்டர் வரை கொள்முதல் செய்யப்படுகிறது. மீதமுள்ள 40 முதல் 50 ஆயிரம் லிட்டர் பால் தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து அதிக விலை கொடுத்து கொள்முதல் செய்யப்படுகிறது.
பிறகு கொள்முதல் செய்யப்பட்ட பாலை கொழுப்பு சத்து அடிப்படையில் தரம் பிரித்து நீலம், பச்சை, ஆரஞ்சு உள்ளிட்ட நிறங்களில் பால் பாக்கெட் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும் பாலில் இருந்து வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம், சாக்லெட், குளிர்ந்த பாதாம் பால் போன்றவை தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளி மாநிலங்களில் இருந்து பால் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு பணம் கொடுக்காததால் பால் கொள்முதல் குறைந்தது. இதனால் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பிறகு அவர்களிடம் சமாதானம் பேசி, பணத்தை கொடுத்தப் பின் மீண்டும் பால் அனுப்பினர். தற்போது மீண்டும் வெளிமாநிலங்களில் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு நிலுவை தொகை செலுத்தாததால் கடந்த சில நாட்களாக வெளிமாநிலங்களில் இருந்து வரும் பால் காலதாமதமாக வருகிறது.
மேலும் கடைகளுக்கும் காலதாமதமாக செல்கிறது. மேலும் நிலுவை தொகையை வழங்க வேண்டும் என கிடுக்குப்பிடி செய்து வருகின்றனர்.
தற்போது வெளி மாநிலங்களில் இருந்து குறைந்த அளவே பால் கொள்முதல் செய்யப்படுவதால் பொதுமக்களுக்கு தேவையான அளவு பால் கிடைப்பதில்லை. இதனால் புதுவையில் மீண்டும் பால் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
மேலும் உள்ளூர் கூட்டுறவு கடன் சங்கம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் கொடுக்காததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலை நீடித்தால் கால்நடை விவசாயிகள் அனைவரும் வெளி மார்க்கெட்டில் பால் விற்பனை செய்யும் நிலை ஏற்படும்.
தற்போது பாண்லே நிறுவனம் பால், பாட்டில், அட்டை பெட்டி, பிளாஸ்டிக் பாக்கெட் போன்றவை கொள்முதல் செய்ததில் ரூ.25 கோடி கடன் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பாண்லே நிறுவனத்தில் ஏற்கனவே உற்பத்தி செய்த பொருட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது.
இதனால் உற்பத்தி குறைந்து கடைகளில் போதிய அளவு பாதாம் பால், குல்பி, சாக்லேட் போன்றவை இருப்பு இல்லாமல் உள்ளது. சில பூத் ஏஜெண்டுகள் சில தனியார் நிறுவனத்தின் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.
- பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
- புதுவை மாநில தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு,
தி.மு.க. கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை புதிய நிர்வாகிகள் அறிவிப்பு
புதுச்சேரி,ஆக.27-
புதுவை மாநில தி.மு.கவின் 15-வது உட்கட்சித் தேர்தலில் முதல் கட்டமாக மாநில நிர்வாகம், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு, தொகுதி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள்
அடுத்த கட்டமாக 23 அணிகளுக்கான புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் நடத்தப்பட்டது.
பின்னர் புதுச்சேரி மாநில அமைப்பாளர் சிவா எம்.எல்.ஏவின் பரிந்துரையின்படி முதல் கட்டமாக இளைஞர், மீனவர் அணி, இலக்கிய அணிக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டு, தற்போது கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைக்கு புதிய நிர்வா கிகளை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுடன் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை செயலாளர், வாகை சந்திரசேகர் அறிவித்துள்ளார்.
அதன்படி, புதுச்சேரி மாநில கலை, இலக்கிய பகுத்தறிவுப் பேரவைத் தலைவராக புலவர் பா. கிருஷ்ணமூர்த்தி, துணை தலைவராக சேவியர் ராஜேஷ், அமைப்பாளராக சிவசங்கரன், துணை அமைப்பாளர்களாக அன்பு மாறன்,ஸ்ரீதர், உத்திராபதி, தேசிகன், ஏழுமலை, வீரமணி, தியாகராஜன், வெங்கடஜலபதி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வாழ்த்து
புதிதாக நியமிக்கப்பட்ட கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை நிர்வாகிகள் தி.மு.க. அமைப்பாளர் சிவாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
- புதுச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் விடுதலை நாள் விழா மற்றும் திருக்குறள் முற்றோதல் தொடக்க விழா
- விழாவில், தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா ளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார்.
துச்சேரி தமிழ்ச்சங்கம் சார்பில் விடுதலை நாள் விழா மற்றும் திருக்குறள் முற்றோதல் தொடக்க விழா தமிழ்ச்சங்க கட்டிடத்தில் நடந்தது. விழாவில், தமிழ்ச் சங்கத்தின் பொதுச் செயலா ளர் சீனு மோகன்தாஸ் வரவேற்றார். தலைவர் முத்து தலைமை தாங்கினார். துணை தலைவர்கள் ஆதிகேசவன், திருநாவுக் கரசு, பொருளாளர் அருள் செல்வன், துணை செய்லா ளர் தினகரன் முன்னிலை வகித்தனர். சங்கீதா கண்ணன், திருக்குறள் முற்றோதல் குறித்து சிறப்புரை ஆற்றி னார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப் பட்டது. நிகழ்ச்சியில் ஆட்சி மன்ற உறுப்பினர்கள் உசேன்,ராசா, சிவேந்தி ரன், சுரேஷ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆனந்தராசன் நன்றி கூறினார்.
- அகரத்தில் உள்ள பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மே ல்நிலை ப்பள்ளியில் தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தொடக்க விழா நடந்தது
- விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
அகரத்தில் உள்ள பாரத் வித்யாஷ்ரம் சி.பி.எஸ்.இ. மே ல்நிலை ப்பள்ளியில்
தேசிய மாணவர் படை (என்.சி.சி.) தொடக்க விழா நடந்தது.
விழாவிற்கு பள்ளி தாளாளர் டாக்டர் சந்தானகிருஷ்ணன், முதல்வர் சாந்தி ஜெயசுந்தர்
ஆகியோர் தலைமை தாங்கினர். சிறப்பு விருந்தினர்களாக விங் காமாண்டர் சாகர் துபராக், இளநிலை அதிகாரி சிவகுமார் ஆகியோர் க லந்து கொண்டு தேசிய மாணவர் படைபெயர் பலகையை திறந்து வைத்தனர். மேலும் தேசிய மாணவர் படையின் சிறப்புகள், நன்மைகள் குறித்து மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.
மேலும் மாணவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் பதில் அளித்தனர். விழாவையொட்டி மாணவர்களின் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
- எதினோ டெக் அகடமிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ராஜப்பன் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலையில்
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரி பெங்களூருவை சேர்ந்த தனியார் மென்பொருள் பயிற்சி அளிக்கும் நிறுவனமான எதினோ டெக் அகடமிக் சொல்யூஷன்ஸ் பிரைவேட் நிறுவனத்துடன் புரிந்து ணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்பை உருவாக்கி தரமுடியும்.
மயிலம் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் துணைத்தலை வர் சுகுமாறன். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமையில் கல்லூரியின் இயக்குனர் செந்தில், முதல்வர் ராஜப்பன் கல்லூரியின் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு துறை அதிகாரி சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- மருத்துவ மனை, ஜீவன் ரக்ஷா இணைந்து இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது
- இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும்.
கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, ஜீவன் ரக்ஷா இணைந்து இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது. கன்னியகோயில், அரியாங்குப்பம் வழியாக பேரணி சென்றது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனம் பயன்படுத்து வோர் சீட் பெல்ட் அணி வதன் அவசியம் குறித்தும் மாணவர்கள் எடுத்து ரைத்தனர்.
இந்தியாவில் 80 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனத்தினால் ஏற்படு கிறது. அதிலும் குறிப்பாக 20 முதல் 50 வயதிலான இளைஞர்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர் என்று அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
பேரணியை ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி டீன்.டாக்டர் ராகேஷ்சேகல், உயர் மருத்துவ தொழில் முறை கல்வி டீன். டாக்டர் மகாலட்சுமி, துணை பதிவா ளர் பெருமாள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் நடனம், நாடகம் மூலம் முக்கிய சந்திப்பு பகுதிகளில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
அந்தப் பகுதியில் ஒரு சிறப்பு அம்சமாக அவசரநிலை பயிற்சி குறித்து வகுப்புகள் நடை பெற்று வருகிறது. நிகழ்ச்சி யின் இறுதியாக சாலை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- ரூ.ஒரு கோடியே 59 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை காலை நடைபெற்றது.
- முதல்-அமைச்சராக ரங்கசாமி, அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்
புதுச்சேரி அரசு பொதுப் பணித்துறை நீர்ப்பாசன கோட்டம் அரியாங்குப்பம் தொகுதி காக்காயன் தோப்பில் ரூ.ஒரு கோடியே 59 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை காலை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி னார் சிறப்பு விருந்தினர்களாக முதல்-அமைச்சராக ரங்கசாமி,
அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் பொதுப் பணித்துறை நீர் பாசன பிரிவு அதிகாரிகள், அரியாங் குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகள், என்.ஆர். காங்கிரஸ்
பிரமு கர்கள் மற்றும் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் குறை கேட்டார்
அப்போது அப்பகுதி மக்களிடம் குறைகளை ரங்க சாமி கேட்டறிந்தார். தங்க ளின் குறைகளை உடனடி யாக பாஸ்கர் எம்.எல்.ஏ. நிறைவேற்றுவார் என உறுதி கூறினார்.
இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி யுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
- ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற 104-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
- குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன் குமார் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கண்டு களித்தார்.
புதுச்சேரி ஊசுடு தொகுதி பத்துக்கண்ணு சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற 104-வது மனதின் குரல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
ஊசுடு தொகுதி
எம்.எல்.ஏ.வும், குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சருமான சாய்.ஜெ.சரவணன் குமார் பா.ஜனதா தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுடன் சேர்ந்து மனதின் குரல் நிகழ்ச்சியை கண்டு களித்தார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த சாய்.ஜெ. சரவணன்குமார் பா.ஜனதா நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுடன் காலை உணவு சாப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் சாய்.தியாகராஜன், துணைத் தலைவர் முரளி, நிர்வாகிகள் ஏழுமலை, மீனா, தொகுதி மகளிர் அணி தலைவி லட்சுமி, கணபதி பா.ஜனதா தொகுதி பட்டியலின அணி தலைவர் சிலம்பரசன் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கூடப்பாக்கம் பா.ஜனதா கிளை தலைவர் முரளி, பாலு, ஜெகன், சதீஷ், ஆனந்த் ஆகியோரை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் சால்வை அணிவித்து வாழ்த்தி பாராட்டினார்.
- துச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் உப்பளம்
புதுச்சேரி அரசு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் உப்பளம்
தொகுதியை சேர்ந்த மீனவ முதியோர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ. அலுவலகத்தில் நடந்தது. அனிபால் கென்னடி
எம்.எல்.ஏ. கலந்து
கொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட மீனவர்களுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான அடையாள அட்டைகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தி.மு.க.
தொகுதி செயலாளர் சக்திவேல், மாநில பிரதிநிதி மணிகண்டன், மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளைச் செயலாளர் ராகேஷ் மற்றும் நிர்வாகி ரகுராமன்
ஆகியோர் கலந்து
கொண்டனர்.






