என் மலர்
புதுச்சேரி

விழிப்புணர்வு பேரணியை ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி டீன்.டாக்டர் ராகேஷ்சேகல், உயர் மருத்துவ தொழில்முறை கல்வி டீன். டாக்டர் மகாலட்சுமி, துணை பதிவாளர் பெருமாள், இன்ஸ்பெக்டர் கணேசன் ஆகியோர் தொடங்கி வைத்த காட்சி.
ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
- மருத்துவ மனை, ஜீவன் ரக்ஷா இணைந்து இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது
- இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும்.
கிருமாம்பாக்கம் ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி சார்பில் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஆறுபடைவீடு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை, ஜீவன் ரக்ஷா இணைந்து இருசக்கர வாகன பேரணி நடை பெற்றது. கன்னியகோயில், அரியாங்குப்பம் வழியாக பேரணி சென்றது.
இருசக்கர வாகனத்தில் செல்வோர் தலைக்கவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனம் பயன்படுத்து வோர் சீட் பெல்ட் அணி வதன் அவசியம் குறித்தும் மாணவர்கள் எடுத்து ரைத்தனர்.
இந்தியாவில் 80 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனத்தினால் ஏற்படு கிறது. அதிலும் குறிப்பாக 20 முதல் 50 வயதிலான இளைஞர்கள் இதில் பாதிக்கப்படுகின்றனர் என்று அறிவுரை கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.
பேரணியை ஆறுபடை வீடு மருத்துவக் கல்லூரி டீன்.டாக்டர் ராகேஷ்சேகல், உயர் மருத்துவ தொழில் முறை கல்வி டீன். டாக்டர் மகாலட்சுமி, துணை பதிவா ளர் பெருமாள் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் சிறப்புரை ஆற்றினார். மாணவர்கள் நடனம், நாடகம் மூலம் முக்கிய சந்திப்பு பகுதிகளில் விழிப்பு ணர்வு ஏற்படுத்தினர்.
அந்தப் பகுதியில் ஒரு சிறப்பு அம்சமாக அவசரநிலை பயிற்சி குறித்து வகுப்புகள் நடை பெற்று வருகிறது. நிகழ்ச்சி யின் இறுதியாக சாலை விழிப்புணர்வு உறுதிமொழி எடுக்கப்பட்டது.






